sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 விஜய் பாடலுக்குத் தடை; தி.மு.க. தேடலுக்கு விடை

/

 விஜய் பாடலுக்குத் தடை; தி.மு.க. தேடலுக்கு விடை

 விஜய் பாடலுக்குத் தடை; தி.மு.க. தேடலுக்கு விடை

 விஜய் பாடலுக்குத் தடை; தி.மு.க. தேடலுக்கு விடை


ADDED : பிப் 03, 2026 06:35 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ஜ னநாயகன் படம், எலக்ஷனுக்கு முன்னாடி ரிலீஸ் ஆகுமாக்கா?''

மித்ரா கேள்வி கேட்ட படியே வந்தாள்.

''ஜோசியர்ட்ட கேட்டு சொல்லட்டுமா?''

சிரித்தபடியே கேட்டாள் சித்ரா.

''அக்கா... படம் தான் ரிலீஸ் ஆகலேன்னா, பாட்டைக்கூட போடக்கூடாதுன்னு சொல்றாங்களாமே...

''மாவட்டத்துல, ஸ்கூல், காலேஜ்ல, ஆண்டு விழா கொண்டாடுறாங்க... அதுல விஜய் படப் பாட்டுகளை ஒலிபரப்பக்கூடாதுன்னு கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்ருக்காங்களாம்''

''மித்து... எதுக்குடா வம்புன்னு நெனைச்சுருப்பாங்க''

''கட்சியை விஜயகாந்த் துவக்குனப்ப, திருப்பூர்ல ஓட்டை அள்ளுச்சு... விஜய் கட்சிக்காரங்களும், இந்தக் கற்பனைல மிதக்குறாங்களாம்க்கா...''

''கனவு நெஜமான்னு ரிசல்ட் வந்தா தெரிஞ்சுறப்போகுது மித்து...''

தி.மு.க. ஆறுதல் ''அக்கா... கூட்டணிகள் 'செட்' ஆனாலும் தொகுதி ஒதுக்கீடு முடியறவரைக்கும் எதுவும் நிச்சயம் இல்லைன்றதால, நம்ம ஊர்ல, கட்சிக்காரங்க சைலண்டா இருக்காங்க...''

''மித்து... சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கறதை வச்சு, மாவட்டத்துல தி.மு.க. தன்னோட வெற்றி சதவீதத்தை உயர்த்துற எண்ணத்துல இருக்குது... ஆனா, விஜய் கட்சி ஓட்டைப் பிரிச்சா சிக்கல் வரும்ன்னு பயப்படறாங்களாம்... இதனால துருவி துருவி பல தடவை கூட்டிக்கழிச்சி கணக்குப் போடறாங்களாம்.

''அ.தி.மு.க.வோட ஓட்டுகள்ல இருந்தும் விஜய் கட்சி அள்ளும். இதனால பாதிப்பு வராமத் தப்பிச்சுடலாம்ன்னு நினைக்கிறாங்களாம்''

''தி.மு.க. காரங்களுக்கு ஆறுதலான விடைதான் மித்து... எலக்ஷன்ல வொர்க்-அவுட் ஆகுமான்னு பார்க்கணும்''

''டாலர் சிட்டில எலக்ஷன்ல குப்பைப் பிரச்னை பிரதானமா பேசப்படும்க்கா... மேயர் தினேஷ்குமார், 'கட்டமைப்புகளை முறையா ஏற்படுத்துவோம்; குப்பையைக் கண்ணுல காட்டுனா பரிசு'ங்கற மாதிரி சவால் விட ஆரம்பிச்சிட்டார்ல''

''மித்து... அப்படி நடந்தா சந்தோஷம்தான்... அதை எலக்ஷனை ஒட்டித்தான் செய்யணுமா என்ன... மொதல்லயே பண்ணியிருக்கலாமே... குப்பையில்லா நகரமாகுதான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்ன்னு பா.ஜ.காரங்க சொல்றாங்களாம்...''

'எளிமை' காங்கிரஸ் ''அக்கா... மாநகர மாவட்ட காங். தலைவரா இருந்த கிருஷ்ணனோட பதவியை பறிச்சுட்டாங்களாமே...''

''ஆமா... மித்து... கோபால்சாமி தலைவராயிட்டார். கிருஷ்ணனும், கோபால்சாமியும் மறைந்த இளங்கோவனோட ஆதரவாளரா இருந்தவுங்க...

''கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோரது பேர், பரிசீலனையில இருந்துச்சாம். செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களுக்குப் பதவி கிடைக்கலைங்கறது வருத்தம்தானாம்''

''சித்ராக்கா... இதே மாதிரி வடக்கு மாவட்டத் தலைவரா நியமிக்கப்பட்டவர்ட்ட சொந்தமா டூவீலர் கூட இல்லையாம். பஸ்ல தான் போறாராம்.

''இவரை வெச்சு, எப்படி கட்சியை வளர்த்த முடியும்ன்னு கட்சிக்காரங்க புலம்புறாங்களாம்''

''மித்து... அவரு பேர்ல தான் 'செல்வம்' இருக்குதே... ஒரு எளிமையானவரை, காங். கட்சி நியமிச்சா கட்சிக்காரங்களுக்கு பொறுக்கலையோ''

புன்னகைத்தாள் சித்ரா.

எம்.எல்.ஏ. தாமதம் ''விளையாட்டுத் திருவிழாவுக்கு, எம்.எல்.ஏ. செல்வராஜ் தாமதமா வந்தாராமாக்கா...

''காலை 9 மணிக்கு வந்த வீரர்கள் 11:45 வரைக்கும் காத்திருந்தாங்களாம்.

''வாலிபால் போட்டியை எம்.எல்.ஏ. துவக்கிவச்சப்ப, முதல் சர்வீைஸ வலையில அடிச்சுட்டாராம். வீரர் ஒருத்தர் 'அவுட்'ன்னு கத்துனாராம்.

''விளையாட்டு ஆசிரியர் ஒருத்தர், பந்தை மேலே துாக்கி அடிக்கச் சொன்னாராம். அப்புறம்தான் எம்.எல்.ஏ. கரெக்டா அடிச்சாராம்''

''மித்து... மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரா இருந்த சரவணக்குமார் டிரான்ஸ்பர் கேட்டு சென்னைக்குப் போயிட்டார்.

''கோவையிலிருந்து சந்திர மோகன் வந்திருக்கார்.

''இப்ப அலுவலகத்தோட செயல்பாடு மீண்டும் மந்தமாயிருச்சாம்.

''நேர்காணல் நடத்துறதுல துவங்கி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு; விதிமுறைகள் கடைபிடிக்காததுன்னு எல்லாமே குளறுபடிதானாம்.

''நாடி வருவோரை கனிவா நடத்துறது இல்லைன்னும் குறைபட்டுக்கிறாங்க... கலெக்டர்ட்ட நேரடியா மாற்றுத்திறனாளிகள் முறையிடப்போறாங்களாம்''

''அக்கா.. மாநகர போலீஸ் கமிஷனர் லீவே எடுக்கறதில்ல... அதிசயமா ரெண்டு நாள் லீவு எடுத்திருக்காரு...

''வள்ளலார் தினத்துக்கு மதுக்கடையெல்லாம் லீவு. அன்னிக்கு சரக்கு விற்பனை தாராளமா நடந்துச்சாம். ஸ்டேஷன் வாரியா பேருக்கு வழக்குகளைப் போட்டு கணக்கு காமிச்சிட்டாங்களாம்''

விபத்து அபாயம் ''மித்து... அவிநாசி ரோட்ல எஸ்.ஏ.பி. தியேட்டர் ஸ்டாப்ல, 'ப்ரீ சிக்னல்' ஆயிருச்சு...

''யூ டர்ன் இடத்துல பேரிகார்டு போட்டு கொங்கு நகர் இன்ஸ்பெக்டர் தலைமையில வாகனங்களைத் திடீர்னு நிறுத்தி சோதனை பண்றாங்களாம். இதனால விபத்து அபாயம் ஏற்படறதோட, நெரிசலும் உருவாகுது...''

''அக்கா... குன்னத்துார் ஸ்டேஷன்ல போலீஸ்காரங்க மன உளைச்சல்ல இருக்காங்களாம். எமர்ஜென்சி லீவு கூடக் கொடுக்கறதில்லையாம். லீவு கொடுக்கறதுல பாரபட்சம் காட்றாங்களாம். எஸ்.பி. கவனிச்சா நல்லது''

''மித்து... குன்னத்துார் பக்கம் அரசு உதவிபெறும் பள்ளியில படிக்கிற மூனு பசங்க, குப்பையை கொட்டச் சென்றபோது தீ எரிந்துகொண்டிருந்த இடத்தில விளையாடியிருக்காங்க...

''அதுல ஒரு பையன் தீக்குள் விழுந்து காயமடைஞ்சுட்டான்.

''இதை ஜாதிப் பிரச்னை போல சிலர் வதந்தி பரப்ப ஆரம்பிச்சுட்டாங்களாம். சில அரசியல் கட்சியினரும் இதுல குளிர் காய நெனச்சிருக்காங்க...

''ஆனா, நல்ல வேளையா போலீஸ் உஷாராகி, தப்பா தகவல் பதியக்கூடாதுன்னு எச்சரிச்சிருக்காங்க... இதனால குளிர் காய நெனச்சவங்க ஏமாந்து போயிட்டாங்களாம்''

ஏட்டு போன் உடைப்பு ''அக்கா... வெள்ளகோவில் ஸ்டேஷனுக்குட்பட்ட கணபதிபாளையம் ரோட்ல, பொங்கலையொட்டி சேவல் கட்டு துாள் கிளப்புச்சாம். ஏற்கனவே கவனிச்சிட்டதால, போலீஸ் எட்டிக்கூடப் பார்க்கலையாம்''

''மித்து... காங்கயம் ஸ்டேஷனைச் சேர்ந்த ஏட்டு ஒருத்தரு, ரோந்து போயிருக்காரு... குடும்பப் பிரச்னைன்னு கிடைச்ச தகவலையடுத்து விசாரிக்க போயிருக்காரு.

''அங்க போன ஏட்டு மொபைல்போன்ல வீடியோ எடுக்க முயன்றப்ப, அவரோட போனைப் பிடுங்கி உடைச்சிட்டாங்களாம். இப்ப வழக்குப் பதிஞ்சு சம்பந்தப்பட்டவங்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்.

''போலீஸ்காரங்க உஷாரா இல்லாட்டி அவ்ளோதான்''

''அக்கா.... போன மாசம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தெற்கு மற்றும் வடக்கு ஆர்.டி.ஓ. ஆபீஸ் சார்பில நடந்துச்சு...

''வழக்கமா ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்றது வழக்கம். இந்தத்தடவை அதைச் சுத்தமா மறந்துட்டாங்க...''

''மித்து...மாநகர போலீஸ், மதுவிலக்கு துறை சார்பில மத்திய பஸ் ஸ்டாண்ட்ல போதை இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை, பஸ்கள்ல ஒட்டுனாங்களாம்.

''கலெக்டர், ஒரு டவுன் பஸ்ல ஸ்டிக்கர் ஒட்டுனாராம். அது சரியா ஒட்டப்படல...

''இதனால துணை ேபாலீஸ் கமிஷனர் பிரவீன் கவுதம், அந்த ஸ்டிக்கரை அந்த இடத்தில இருந்து எடுத்துட்டு, பஸ்ல வேறொரு இடத்துல ஒட்டுனாராம்''

கூட்டம் நடக்குமா? ''சித்ரா... போக்குவரத்துக்கு இடையூறாவும், அனுமதிபெறாமலும் பிளக்ஸ் பேனர் வச்சா, உள்ளாட்சி அமைப்புகள்தான் அகற்றணும். ஆனா அகற்றுவது கிடையாது.

''உள்ளாட்சி வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பா பேனர் அல்லது போர்டு வச்சா மட்டும் கரெக்டா அகற்றீடறாங்களாம். இது எப்படி இருக்கு!'

''மித்து... அனைத்து துறையிலயும் மூனு மாசத்துக்கு ஒரு தடவை நுகர்வோர் அமைப்புக்கூட்டம் நடத்தணுமாம். ஆனா, மாநகராட்சில நடத்துறதே இல்லை.

''நுகர்வோர் அமைப்புகளை அனுமதிச்சா, குறைகளைக் கொட்ட ஆரம்பிச்சுடுவாங்கன்னு நெனச்சிருப்பாங்க போல...

''நுகர்வோர் அமைப்புகள் இணைஞ்சு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேத்தி எழுத்துபூர்வமா மாநகராட்சிக்கு லெட்டர் கொடுத்திருக்காங்க... இனியாவது நடத்துவாங்களான்னு பார்ப்போம்''

மூச்சுவிடாத அதிகாரிகள் ''சித்ராக்கா... மழை பெய்ற நேரத்துல, சாயக்கழிவுநீரை தண்ணீ டேங்க், செப்டிக் டேங்க் வண்டிகள்ல கொண்டுவந்து கொட்டுற டெக்னிக்க சில ஆலைகள்ல கடைபிடிக் கிறாங்களாம்.

''மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள் இப்படிச் சிக்குனா தண்டனை கடுமையா இருக்கும்ன்னு எச்சரிச்சிருக்காங்க''

''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துறப்ப, மொதல்லயே லெட்டர் கொடுப்பாங்களாம். இப்ப முந்துன நாள் நைட் தான் போன் போட்டுச் சொல்றாங்களாம்.

''அவசரக்கூட்டம்னா ஓகே... ஆனா சாதா கூட்டத்துக்கே இதைத்தான் 'பாலோ' பண்றாங்களாம்.

''அதேபோல பத்திரிகையாளரை அழைச்சு, கூட்டம் குறித்து தெரிவிக்கறதும் இல்ல. இதனால தேர்தல் கமிஷன் அறிவிப்புகள் முறையா சென்று சேர்றதில்லைன்னு பகிரங்கமா அ.தி.மு.க. பிரதிநிதி குற்றம்சாட்டுனாராம். ஆனா, அதிகாரிகள் மூச்சே விடலையாம்''

விவசாயிகள் கோபம் ''சித்ராக்கா... விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் காலை 9:00 மணிக்கு நடக்க வேண்டியது 11:40க்குத் தான் துவங்குச்சாம்.

''மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக்கூட்டமும் அதே நேரத்துல நடந்ததுனால தாமதமாயிடுச்சாம்.

''கலெக்டரோட பி.சி. ரூமுக்குப் போய் கூட்டம் எப்ப ஆரம்பமாகும்ன்னு கேக்க சில விவசாயிகள் போயிருக்காங்க...

''அங்கே 'ஸ்னாக்ஸ்' சாப்பிட்டபடி ஆபீசர்ஸ் சாவகாசமாப் பேசிட்டிருந்தாங்களாம். கோபத்துல விவசாயிகள் எதையும் வெளிக்காட்டாம வந்துட்டாங்களாம்.

''குறைகேட்பு கூட்டத்தப்ப வேளாண் துறை, தோட்டக்கலைத் துறையினர் கண்காட்சி நடத்தப்படும். ஆனா, இந்தத்தடவை கண்காட்சியையும் நடத்தலையாம்.

''மித்து... தீபாவளி நேரத்துல புகார் எழுந்ததால, கலெக்டர் பி.சி.க்களை மாத்தினாங்க... ஆனா, மேல இருக்கிற ஆபீசரோட ஆசியோட, அதுல ஒருத்தரு மீண்டும் வந்துட்டாராம்''

''சித்ராக்கா... 'லோகு' தம்பிக்கு போன் போட மறந்துட்டேன்''

சித்ராவும், மித்ராவும் சுடச்சுட டீயைப் பருகத் துவங்கினர்.






      Dinamalar
      Follow us