sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

விலங்குகள் வாழ வழிவிடுங்கள்!

/

விலங்குகள் வாழ வழிவிடுங்கள்!

விலங்குகள் வாழ வழிவிடுங்கள்!

விலங்குகள் வாழ வழிவிடுங்கள்!


ADDED : பிப் 22, 2025 07:50 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நம்மை சுற்றி வாழும் ஜீவன்களை, பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறது என்ற எண்ணத்தை, குழந்தைகளிடம் விதைத்தாலே போதும். விலங்குகள் வதைபடுவதை தடுக்க முடியும்,'' என்கிறார், 'தி பாசம் பீப்புள் புராஜெக்ட்' (The PawSome People Project) அமைப்பின் நிர்வாக அறங்காவலர் மேரி சாண்டி.

கோவையை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு, தெருவில் அடிபட்டு கிடக்கும் செல்லப்பிராணிகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, தத்தெடுப்பு முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. தற்போது பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் மேரி சாண்டி, நம்மிடம் பகிர்ந்தவை:

கொரோனா காலகட்டத்தில், தெருநாய்களுக்கான பராமரிப்பு கேள்விக்குறியான சமயத்தில், 'தி பாசம் பீப்புள் புராஜெக்ட்' என்ற அமைப்பை துவங்கினோம். அதற்கு முன்பு, விலங்குகளின் நலம் சார்ந்த தன்னார்வ பணிகளில் மட்டுமே ஈடுபட்டோம். இதை அமைப்பாக முன்னெடுத்த பிறகு, மருத்துவ உதவி தேவைப்படும் விலங்குகள் சார்ந்த அழைப்புகள், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இதற்காக ஒரு வேன் வாங்கி, ஒரு டிரைவர், களப்பணியாளர் நிரந்தரமாக நியமித்துள்ளோம். எங்களுக்கு வரும் 90 சதவீத போன் அழைப்புகளை, அன்றைய தினமே நேரில் சென்று, பாதிக்கப்பட்ட செல்லப்பிராணியை மீட்பதற்கான முயற்சிகளில் முனைப்பு காட்டுகிறோம். மருத்துவ சிகிச்சை முடித்ததும், அதே பகுதியில் விட்டுவிடுவோம். சிறப்பு கவனம் தேவைப்படும் பப்பிகளை மட்டும், சில நாட்கள் எங்களுடனே தங்க வைத்து, குணமான பிறகு அப்பகுதியில் விடுவோம்.

மருத்துவ உதவி தேவைப்படும் போது அழைக்கும் பலரும், சிகிச்சைக்கு பிறகு, அவ்விடத்தில் மீண்டும் அவை வாழ அனுமதிப்பதில்லை. இவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, அப்பகுதியில் அவை வசிப்பதோடு, உணவு கிடைக்கவும் வழிவகை செய்கிறோம்.

சிலர் தாமாக முன்வந்து, செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், தெருநாய்களுக்கு உணவளிப்போர் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதில் முக்கியமானது, மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளில், உணவு அளிப்பதோடு, அவை சாப்பிட்டதும், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தால், அவ்விடத்தை சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் உணவு வைத்து பழக்கினால், அவை பசிக்கும் போது அவ்விடத்தில், காத்திருக்க பழகும்.

சில தெருநாய்கள் வாகனங்களை கண்டால் துரத்துதல், உணவு பொட்டலங்கள் கையில் வைத்திருப்போரை பார்த்து குரைத்தல் போன்ற செயல்பாடுகள், பசிக்காக கூட இருக்கலாம். அவற்றை, கல்லால் அடித்து துன்புறுத்துதல், வேறு இடங்களுக்கு துரத்திவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவை மேலும் அக்ரசிவ்வாக மாறவும் வாய்ப்புள்ளது.

நம்மை சுற்றி வாழும் ஜீவன்களுக்கு உணவளிப்பதும், பராமரிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இதை பெரியவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதை காட்டிலும், குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என முடிவெடுத்தோம். மழலை பருவத்திலே, பிற ஜீவன்கள் மீது அன்பு செலுத்தினால், அவர்கள் வளர்ந்ததும், விலங்குகளை தொந்தரவு செய்யாமல், அவை வாழ்வதற்கான சூழலை அமைத்து தருவர். இதற்காக, சில பள்ளிகளில், விலங்குகள் நலன் சார்ந்த கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.

ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்விழிக்கும் அதுவரை பொறு மனமே!






      Dinamalar
      Follow us