ADDED : ஆக 03, 2024 11:31 AM

''போருக்கு எப்போதும் தயாராக இருக்கும், ஒரு படைவீரனை போல, உரிமையாளர் என்ன சொன்னாலும் கீழ்படியும் வகையில், பப்பிக்கு பயிற்சி கொடுப்போம்,'' என்கிறார், 'டாக் ட்ரைனர்' சபரி சீனிவாசன்.
அப்படி என்னதான் பயிற்சி கொடுப்பீங்க என்றதும், தனது ஸ்னைப்பருடன் (பெல்ஜியம் ஷெப்பர்ட்) களத்தில் இறங்கி, ஒவ்வொன்றாக விளக்கினார்.
ஒரு பிரசவத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேற தனித்தன்மை இருக்கும். இதேமாதிரி, என்னதான் 'சேம்பியன் டாக்'ஸா இருந்தாலும், அதன் பப்பியோட உடல்வாகு பொறுத்து தான் பயிற்சி கொடுக்க முடியும்.
நல்ல உடல் அமைப்பு, வலுவான கால்கள், பல்வரிசை என, பார்ப்பதற்கு வலிமையாக இருக்கும் பப்பியை தேர்ந்தெடுத்து, ஆறு மாதத்தில் இருந்து, பயிற்சி வகுப்பு துவங்கும். ஆரம்பத்தில் நடைப்பயிற்சி, பிறரை கடிக்காமல் இருத்தல், மற்றவர்களுடன் பழக வைப்பது என, சில அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்படும்.
'டாக் ஷோ'வில் சிலவகை நாய்களை, 'மேட்' மேலயும், சிலவற்றை 'ரிங்' உள்ளேயும், மெதுவாக நடக்க சொல்வார்கள். இதுக்கு, பப்பியை பழக்கணும். மற்றவர்களை கடிப்பது, தாவுவது என, எந்த அக்ரசிவ்வான விஷயங்களையும் செய்ய கூடாது.
பொதுவாக ஷோ பொறுத்தவரைக்கும் பப்பி, ஜூனியர், இன்டர்மீடியேட், ப்ரீட் இன் இண்டியா, ஓபன் கிளாஸ், சேம்பியன் கிளாஸ்-னு, தனித்தனியா போட்டி நடக்கும். இதில், 4 பிரிவுகளில் தேர்வானால் தான், சேம்பியன் கிளாஸ் ரவுண்டுக்குள்ள போக முடியும். நடுவர்களின் அபிப்ராயத்தை பெற்றுவிட்டால், 'பெஸ்ட் ஆப் ப்ரீட்' பட்டம் கிடைத்துவிடும்.
ஒருமுறை டைட்டில் அடிச்சிட்டா, அந்த பப்பிக்குன்னு தனி அடையாளம் உருவாகும். சில டாக்ஸ், தன்னோட ஆயுள்வரைக்கும் கூட, ஷோக்குள்ள போயி, டைட்டில் தட்டி துாக்கும். இதற்கு, உடல் திறனை தக்க வைப்பதற்கு, புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை தான் கொடுக்கணும்.
இதோட எலும்பு, தோல், முடி பராமரிப்புக்குன்னு, சில 'சப்ளிமென்ட்' உணவுகளும் கொடுக்கணும். ஒரு நாளைக்கு 20 நிமிஷம் தான் பயிற்சி அளிக்கணும். ரொம்ப நேரம் 'ஒர்க் அவுட்' பண்ணா, பப்பி சோர்ந்துடும்.
நன்றாக பயிற்சி பெற்ற ஒரு பப்பிக்கு, பயிற்சியாளரோ, ஹேண்டுலரோ என்ன ஆடர் கொடுத்தாலும், உடனே செய்ய தயாராகும். இப்படி எந்நேரமும் அலர்ட்டா இருப்பதற்கு தான், பயிற்சி கொடுக்குறோம்.