ADDED : மே 25, 2024 08:59 AM

செல்லமே' வாசகர்னு சொல்லி, இ-மெயில் மூலமா தொடர்பு கொண்டவர், மதுரையை சேர்ந்த பாண்டியராஜ். '' என்னோட, பெட் ஷாப் வெப்சைட்ட, விசிட் பண்ணி (www.dbfarmandaccessories.com), வித்தியாசமான புராடெக்ட்ஸ் வெளியிடுங்களேன்,'' என்ற கோரிக்கையினை முன்வைத்தார். வித்தியாசமான பெட் புராடெக்ட்ஸ் தேடினோம். இதில், பேர்ட்ஸ்கான அயிட்டங்கள் இதோ:
மிஸ்ட் ஸ்பிரே சிஸ்டம்
தோட்டம், வயல்ல செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் போடுற மாதிரியான மாடல்ல இருக்கற, இந்த மிஸ்ட் ஸ்பிரே சிஸ்டம் தான், இப்போ பெட் ஷாப்ல, பாஸ்ட் மூவிங்ல இருக்கு. கிட்டத்தட்ட 30 மீட்டர் நீளத்துக்கு ஒயர் இருக்கும். இதுல, 26 நாசில் ஹோல்ஸ் இருக்குது. இந்த ஹோல்ஸ்ல இருந்து தான் மிஸ்ட் மாதிரி தண்ணீர் வெளியாகும். பக்கெட்ல தண்ணீர் நிரப்பி, இதை போட்டுடணும். டைமர் செட் பண்ணி, எந்த இடத்துல ஸ்பிரே ஆகணுமோ, அங்க ஹோல்ஸ் இருக்கற மாதிரி வச்சிட்டு, பட்டன் ஆன் பண்ணிட்டா, மிஸ்ட் வர்ற மாதிரி, பேர்ட்ஸ் மேல, ஸ்பிரே ஆகும். இதோட விலை, 4,100 ரூபாய்.
ஆட்டோமொபைல் ஷவர் பாத்
லவ் பேர்ட்ஸ் மாதிரியான ஸ்மால் பேர்ட்ஸ் வளக்குறவங்க, அதை குளிக்க வைக்கறதுக்கு, இந்த ஆட்டோமொபைல் வாட்டர் பாத் டப் வாங்கலாம். இதை கேஜ் குள்ள வச்சிட்டு, தண்ணீர் நிரப்பிட்டா போதும். பம்ப் கீழ, பேர்ட்ஸ் நின்னா, ஆட்டோமேட்டிக்கா தண்ணீர் வரும். ஒருமுறை தண்ணீர் நிரப்பிட்டா போதும். ரீசைக்கிள் பண்ணி, திரும்பவும் மேல போகுறதால, நிறைய வாட்டர் வேஸ்ட் ஆகாது. மதிய நேரத்துல, ஷவர் பாத் எடுத்துட்டு, பேர்ட்ஸ் ஜாலியா பறந்துட்டு இருக்கும். பேட்டரில இயங்கறதால, எங்க வேணும்னாலும் வச்சிக்கலாம். இது, பட்ஜெட் பிரெண்ட்லி. விலை வெறும், 1,500 ரூபாய்.

