sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'

/

இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'

இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'

இதுதான் வெற்றியின் ரகசியம்! சொல்கிறார் 'ரூபன்ராஜ்'


ADDED : ஆக 10, 2024 03:24 AM

Google News

ADDED : ஆக 10, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நாய்களில், ஒவ்வொரு இனத்துக்குமான உடற்கூறு அமைப்பு தனித்தன்மையானது. கண்காட்சியில் மிகப்பொருத்தமான முறையில் அதை வெளிப்படுத்தி நடுவரை கவர்வது, அந்த நாயை கையாள்பவரின் கையில்தான் இருக்கிறது,'' என்கிறார் கோவை, போத்தனுாரைச் சேர்ந்த, 'டாக் ஷோ ஹேண்ட்லர்' ரூபன்ராஜ் நெல்சன்.

நீங்கள் கையாளும் முறை பற்றி...

உரிமையாளரோ, பயிற்சியாளரோ பழக்கப்படுத்துன புது நாய்கள்தான், ஹேண்ட்லர்கிட்ட வரும். சில நேரங்களில் பயிற்சியாளரே, கண்காட்சியில் அந்த நாயை கையாண்டவராகவும் இருப்பார். புதிதாக ஒரு இன நாயை கையாளும்போது, 'ரிங்' உள்ளே போவதற்கு, 20 நிமிஷத்துக்கு முன்னாடி தான், 'பப்பியை' சந்திப்பேன்.

கொஞ்சம் நேரம் அதோட விளையாடியபின், என்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவேன். அதோட அனாடமியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என தெரிந்து கொண்டால் போதும்.

சில நேரங்களில் பப்பி ஒத்துழைக்காது. அப்போது, அந்த நாயின் 'மைண்ட் செட்'டை மாற்ற வேண்டுமே தவிர, அடிப்பது, நிர்பந்திப்பது கூடாது. கொஞ்சம் 'ட்ரீட்ஸ்' கொடுத்து, நாம சொல்றதை செய்ய வைக்கறதுல தான் ஹேண்டுலருக்கான இலக்கே இருக்குது. எந்த இனத்தை, எப்படி வெளிப்படுத்த வைக்க வேண்டுமென்ற வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில், நல்ல பப்பியை கூட, 'சேம்பியன்' ஆக்க முடியாம போகலாம்.

அதென்ன பார்முலா?


 நாய்களை பொறுத்தவரைக்கும், 11 குரூப்பா பிரிச்சி வச்சிருக்காங்க. இதுல வர்ற பப்பியோட உடற்கூறு மாறும். ராஜபாளையம், ராட்வீலர் மாதிரியான நாய்களை, காட்சிப்படுத்தும் போது வாலை துாக்கி காட்டணும்; லேப்ரடார், 'ப்ரீஸ் போஸ்'ல இருக்கணும்; டாஸ்ஹவுன்ட் ப்ரீடோட வால் அதோட உடம்புக்கு நேரா நீட்டி காட்டணும்.

 அமெரிக்கன் காக்கஸ்பேனியல்ல 'மேல்' ப்ரீடா இருந்தா 12-15 இஞ்ச், 'பீமேல்' ப்ரீட்னா 10-13 இஞ்ச் தான் இருக்கணும். இதைவிட பெரிதாக இருந்தால் தகுதியிழப்பு செய்யப்பட்டுவிடும். பீகில் பப்பியோட காது அளவு சரியா இருக்கணும். இப்படி ஒவ்வொரு இனத்தையும் மிகச்சரியான உற்கூறோட பராமரித்தால்தான், அதோட பெடிகிரி அழியாம பாதுகாக்கப்படும்.

 ஐரீஸ் ஷெட்டர், ஸ்னவ்சர், நியூபவுண்ட்லேண்ட், புல்மஸ்தீப், டோபோ அர்ஜென்டினா, பிரெஞ்ச் மஸ்தீப் போன்ற ப்ரீட்ஸ, இப்போ கண்காட்சிகளில் அதிகமாக பார்க்க முடிகிறது. தரமான உடற்கூறுகளுடன் இருக்கும் ஒரு பப்பிக்கு பயிற்சி அளித்து, காட்சிப்படுத்தி, சேம்பியன் ஆக்கும் வரைக்கும், ஒரு கையாளுனராக நிறைய விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும்.

சண்டைக்கு முந்தும்... ச ளை க்காமல் நீந்தும்!கற்பனைக்கு எட்டாத வண்ணங்களில், இறக்கை விரித்து, நீந்தும் மீன்களை, வீட்டில் வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதிலும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன், இரு வாரங்கள் வரை, தண்ணீர் மாற்றாமல், உணவே இல்லாமல் கூட, ஆக்டிவ்வாக நீந்தும் 'பைட்டர்' மீன்களை பற்றி விவரிக்கிறார், கோவை, 'ட்ரீம்ஸ் அக்வாரியம்' உரிமையாளர் காளிமுத்து. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள், அக்வாரியம் பீல்டில் அனுபவம் கொண்ட இவர், நம்மோடு பகிர்ந்தவை:

 புதிதாக மீன் வளர்ப்பவர்களுக்கு ஏற்ற வெரைட்டி, பைட்டர். இதை அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட, சிறிய பவுலில் கூட வளர்க்கலாம்.

 சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, கருப்பு, வெள்ளை என பல்வேறு நிறங்களில், கற்பனைக்கு எட்டாத புதிய வண்ண கலப்பில், வித்தியாசமான இறக்கைகளுடன், 20க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில், பைட்டர்கள் கிடைக்கின்றன.

 கிரவுன் டெய்ல், கேம்ப் டெய்ல், டெல்டா, டபுள் டெய்ல், எலிபண்ட் இயர், ஹாப் மூன், புல் மூன், ரோஸ், ரவுண்ட் வெய்ல், ஓ.எச்.எம்., நியூமோ கேண்டி, தம்போ ஏர் பைட்டர் மீன்களின், இறக்கை வித்தியாசமாக காணப்படுவதால், சிறுவர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

 இதற்கு ஆக்ஸிஜன் மோட்டர் தேவையில்லை. நீரின் மேற்பரப்பில் இருக்கும் காற்றை சுவாசித்து உயிர்வாழும்.

 புரோட்டீன் நிறைந்த உணவு, நல்ல தண்ணீர் இருந்தால், சராசரி ஆயுட்காலமான 2 ஆண்டுகளையும் தாண்டி, சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டே இருக்கும்.

 பைட்டர் பொறுத்தவரை, ஆண், பெண் இன மீன்களை ஒரே பவுலில் போட்டால் சண்டையிட்டு கொள்ளும். ஆனால், ஆண், பெண் மீன்களை குழுவாக சேர்த்து, பிரத்யேக டேங்கில் நீந்தவிடலாம்.

அடைக்காக்கும் ஆண் மீன்


பைட்டர் பொறுத்தவரை, எட்டு மாதத்தில் முட்டை வைக்கும் தகுதியை பெறும். இச்சமயத்தில், தனித்தனியே பவுலில் இருக்கும் ஆண், பெண் பைட்டர்களை அருகருகே வைக்க வேண்டும்.

கண்களால் ஒன்றையொன்று பார்த்து கொண்டால் தான், இனப்பெருக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கும். ஆண் பைட்டர் பவுலில், நுரை போல தண்ணீர் மேல மிதக்கும் போது, பெண் மீனை உள்ளே விட வேண்டும்.

ஒரே நாளில், பெண் மீனின் வயிற்றில் இருக்கும் முட்டைகளை வெளியேற்றி, மிதக்கும் நுரைக்குள் கொண்டு போய் வைத்து, ஆண் மீன் அடைகாக்கும். இரு நாட்களில், முட்டையில் இருந்து புதிய வாரிசுகள் உருவாகி வெளியே எட்டிப்பார்க்கும். இத்தருணத்தில், அம்மா பைட்டரை வெளியே எடுத்துவிட வேண்டும். குட்டி மீன்களை பாதுகாக்கும் பொறுப்பு, அப்பா பைட்டருக்கானது. டார்பினியா, மொய்னா, ஆர்டிமியா போன்ற சிறிய ரக பூச்சிகளை, தொட்டியில் போட்டால், குட்டி மீன்கள் அதை சாப்பிட்டு, ஆரோக்கியமாக வளரும்.

ஒரு மாதத்தில், குட்டி மீன்களை தனியே பிரித்து வழக்கமான பைட்டருக்கான உணவுகளை வழங்கலாம். ஒருமுறை பிரீடிங் செய்யும் போது, 300-400 குட்டி மீன்கள் கிடைக்கும்.

கனவுகளின் ஓவிய ராணி!

நினைவுகளின் பொக்கிஷமாக நிற்கும் கடந்தகாலத்தை, 'ப்ரீஸ்' செய்து, எதிர்காலத்துக்கு கடத்தும் கண்ணாடி ஓவியங்கள். இதை டிரெண்டுக்கு ஏற்ப, 'டூடில் ஆர்ட்' மூலம் கற்பனை காட்சிகளையும் பதிவு செய்கிறார், கோவையை சேர்ந்த பிரியதர்ஷினி.

ஐ.டி., நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டே பகுதிநேர வேலையாக, டூடில் ஆர்ட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் இவர், செல்லப்பிராணிகளின் ஓவியங்களை தத்ரூபமாக செதுக்கியுள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்வையிட்ட பின் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பகிர்ந்தவை:

சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரைய பிடிக்கும். ஏதாவது கற்பனையாக வரைந்து கொண்டே இருப்பேன். ஐ.டி., துறையில் வேலை பார்ப்பதால், பணிப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்தாக, ஓவியங்கள் தான் கைக்கொடுத்தன. இதை டூடில் ஆர்ட்டாக வரைந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (sketchbypriya) பதிவிட்டேன்.

பொழுதுபோக்காக செய்த விஷயங்கள், பின்னாளில் பிசினஸாக மாறிவிட்டது. எனக்கு பப்பி பிடிக்கும் என்பதால், செல்லப்பிராணிகளுடனான என் ஓவியத்தில், ஒருவித தனித்துவம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். செல்லப்பிராணிகளின் புகைப்படம் கொடுத்து, அதற்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்தால் அதற்கேற்ப, வண்ணங்களை தேர்ந்தெடுத்து, 'தீம்' உருவாக்கி வரைந்து கொடுக்கிறேன்.

செல்லப்பிராணிகளுடன் பேமிலி போட்டோ, அவுட்டிங் செல்வது, பப்பியை கொஞ்சுவது, 'போர்ட்ரைட்' போல போஸ் கொடுப்பது என, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரைந்து, பிரேம் போட்டு அனுப்பிவிடுவேன்.

இதுதவிர, வேலட் கார்ட், கீ செயின், பிரிட்ஜ் மேக்னெட், ரிட்டன் கிப்ட், டீ-சர்ட் போன்றவற்றிலும், செல்லப்பிராணிகளின் ஓவியம் வரைந்து தருகிறேன். ஒவ்வொரு ஓவியத்தின் பிண்ணனியிலும், செல்லப்பிராணிகளுடனான மறக்கமுடியாத பல நினைவுகளை பதிவு செய்வதால், ஆத்மார்த்தமான உணர்வு ஏற்படுகிறது.

குடும்பத்துல ஒண்ணு தவிர்க்க முடியாத 'ரெண்டு'

என் குட்டீஸோட சேர்ந்து ரூகியும், லியாவும் பண்ற சேட்டைக்கு அளவே இல்லை. இவங்க இல்லாம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது, என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா.

தன்னோட செல்லப்பிராணிகள் பற்றி பகிர்ந்தவை:

என் கணவர் ராஜேஷ் பாரஸ்டர். காட்டுக்கு அவர் காவல்னா, எங்க வீட்டுக்கு, ரூகியும், அவள் மகள் லியாவும் காவல். ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் (ரூகி) வாங்குனோம். ரொம்ப பிரெண்ட்லியான டாக். என்ன சொன்னாலும் கேட்கும். வீட்டுக்கு புதுஆட்கள்யாரும் உள்ள வர்ற முடியாது. கண்ணும் கருத்துமா எங்களை பாத்துக்கும். அதே சமயம், என் பொண்ணுங்களோட (மவுரியா, 12 மற்றும் தேஷ்விஹாரா, 2) சேர்ந்து விளையாட ஆரம்பிச்சா, சேட்டைக்கு அளவே இருக்காது. கண்ணாமூச்சி, ஓடி புடிச்சு விளையாடுறது, பந்து போட்டு கேட்ச் புடிக்கறதுன்னு ஈவினிங் ஆகிட்டா, ஜாலியா விளையாடிட்டே இருப்பாங்க.இவங்க சேட்டையை ரசிச்சு பார்த்துட்டு இருப்பேன். கொஞ்ச நேரம் என் குரல் கேட்கலைன்னாலும், வீட்டையே சுத்தி சுத்தி வருவாங்க. என்னை மாதிரியேரூகி ரொம்ப பொறுப்பானவ. அவளோட பப்பி லியாவை நல்லா பாத்துக்குவா. இவங்க ரெண்டு பேருக்கும்,தனித்தனியா கூண்டு இருந்தாலும், எங்களோட தான் துாங்குவாங்க. என் பொண்ணுங்க டாய்ஸ் வாங்குனாகூட, ரூகி, லியாவுக்கும் தனி லிஸ்டே போடுவாங்க. அவ்ளோ அட்டாச் ஆகிட்டாங்க. செல்லப்பிராணிகள் நம்ம மேல காட்டுற அன்பை, வார்த்தைகளால சொல்லி விவரிக்க முடியாது என,நெகிழ்ச்சியோடு பேசினார்.

பட்டினி கிடந்தால் ஆபத்து!

நாய்கள் கூட உரிமையாளர் இல்லாத போது, 'எமோஷனல்' காரணங்களுக்காக, சாப்பிடாமல் அடம்பிடிக்கும். ஆனால் பூனை சாப்பிடாமல் இருக்காது. அப்படி பட்டினி கிடந்தால், உடல்நிலை, தட்ப வெப்ப சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும். ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம்.

மழைக்காலங்களில், சில வைரஸ் தொற்றுகளால், பூனைக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு, மூச்சுவிடுவதில் சிரமம், கண்களில் இருந்து ஒருவித திரவம் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். முறையாக தடுப்பூசி போடும்பட்சத்தில், இப்பாதிப்புகளின் வீரியம் குறைவாக இருப்பதோடு, விரைவில் குணப்படுத்திவிடலாம்.

உடல் எடை குறைவாக இருந்தாலும், பூனைகளுக்கு முறையாக தடுப்பூசி போடுவது அவசியம். பூனையின் வளர்ச்சிக்கு, 'டாரின்' என்ற அமினோ ஆசிட் உதவும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், 'டிராப்ஸ்' கொடுக்கலாம். பிறந்து நான்கு மாதங்கள் வரை, பூனையின் உணவு, பராமரிப்பில் கவனம் செலுத்தினால், ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யலாம்.

- ஆர். சக்ரவர்த்தி,

கால்நடை மருத்துவர், கோவை.

மீண்டும் 'கேக்'கும்

இரு வாழைப்பழங்களுடன், இரு முட்டை சேர்த்து, நன்றாக கூழ் பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனுடன் ஓட்ஸ் பவுடர், சிறிது தேங்காய் எண்ணெய், சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கலக்கி கொள்ளவும். இதை கேக் பவுல், கப் என ஏதாவது ஒன்றில் நிரப்பி, ஓவனில் வைத்து, பேக்கிங் செய்யலாம். கேக் தயாரானதும், வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை மிக்ஸியில் அடித்து, கேக் மீது கிரீம் இருப்பது போல தயார் செய்து கொடுத்தால், மிச்சம் வைக்காமல், உங்க பப்பி சாப்பிடும்.






      Dinamalar
      Follow us