ADDED : ஜன 03, 2026 07:53 AM

கொலையாளியை கண்டுபிடிக்கும் ஒரு நாய்க்கும், அவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்குமான பிணைப்பை கூறும் நகைச்சுவை திரைப்படம் டர்னர் அண்டு ஹூச் (Turner & Hooch).
போலீஸ் அதிகாரி ஸ்காட்டர்னரின் நண்பர் அமோஸ் ரீட். இவர் தனது காகித ஆலையில் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அக்கொலை சம்பவத்தின் ஒரே சாட்சி, அவர் வளர்த்த பிரெஞ்ச் மஸ்தீப் இன நாயான ஹூச். குற்றவா ளிகளை கண்டுபிடிக்கும் வரை, இந்த நாய் போலீஸ் அதிகாரியின் பொறுப்பில் விடப்படுகிறது. அதுவரை நாய் வளர்த்த அனுபவம் இல்லாத அந்த போலீஸ் அதிகாரி, எப்படி அதை கையாள்கிறார், அதை பராமரிப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பின்பு அந்த நாயுடன் அவருக்கு ஏற்படும் பிணைப்பை, ஆக்ஷன் கலந்த நகைச்சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
1989ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தை தழுவி, 2014ல் தமிழில், நாய்கள் ஜாக்கிரதை படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடித்த பிரெஞ்ச் மஸ்தீப் இன நாயின் உண்மையான பெயர் பீஸ்லி. இந்த இன நாய்கள், அதிகபட்சம் 8 ஆண்டுகளே உயிர்வாழும். ஆனால், பீஸ்லி இறக்கும் போது அதற்கு வயது 14. இப்படம் வெளியான பிறகு பீஸ்லிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பல்வேறு விருதுகளை குவித்த இப்படம், செல்லப்பிராணி பிரியர்களுக்கு நல்ல ட்ரீட்.

