அபார்ட்மென்ட்டில் வசிப்பவரா? அப்ப, 'பீகல்' பத்தி தெரிஞ்சுக்கோங்க
அபார்ட்மென்ட்டில் வசிப்பவரா? அப்ப, 'பீகல்' பத்தி தெரிஞ்சுக்கோங்க
ADDED : ஜூலை 27, 2024 12:09 PM

சில்கியான ஹேர் கோட், யுனிக்கான கலர், துறுதுறுன்னு ஆக்டிவ்வான நேச்சர், குட்டியா வளர்ற பிசிக்கல் சிஸ்டம் தான், பீகல்லோட யுனிக்னெஸ். 30 பீகல்ஸோட, கோவை, கிணத்துக்கடவில், ' தி ஹிடன் பாஸ் கென்னல்' இருக்கறதா கேள்விப்பட்டு, அதோட ஓனர் சிவநேசனை சந்தித்தோம்.
இந்த ப்ரீட் மேல ஏன் இவ்ளோ கிரேஸ்னு கேட்டதும், சிரிச்சிட்டே பேச ஆரம்பிச்சார்.
''பீகல் ரொம்ப இன்டலிஜென்ட். ஆனா, குவாலிட்டியான பப்பி கிடைக்காததால, ப்ரீடிங் பீல்டுக்குள்ள வந்தேன். என்கிட்ட இருக்கற எல்லாமே, கே.சி.ஐ., சர்டிபைடு பப்பிஸ். இதை தேடி வாங்குறவங்க, அதிகமாகிட்டு இருக்காங்க,'' என்றார்.
பீகல் பராமரிப்பு பத்தி...
இதோட நேட்டிவ் பிரிட்டன். இன்டலிஜென்ட்டான ப்ரீட். மோப்பசக்தி அதிகமுங்கறதால, அமெரிக்கா, இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல, தடைசெய்யப்பட்ட உணவுகளை கண்டுபிடிக்க பயன்படுத்துறாங்க.
எனர்ஜிட்டிக்கா, எப்போதும் துறுதுறுன்னு இருக்கறதால, முயலை துரத்தி புடிச்சிடும். ஆனா, செல்லப்பிராணியா வளர்க்கும் போது, ஓனர் என்ன சொன்னாலும் கேட்டு, சமத்துக்குட்டியா நடந்துக்கும்.
அதிகபட்சமா 30 செ.மீ., உயரம், 15 கிலோ வரைக்கும் எடை இருக்கறதோடு, பிளாக், ஹனி வித் ஒயிட், ரெட் வித் ஒயிட், ப்ளூ வித் ஒயிட்னு, வித்தியாசமான கலர்ஸ்ல, பார்க்கவே அழகா, குட்டியா இருக்கும்.
இதோட உடல் வளர்ச்சி ஒரு வயசு வரைக்கும் தான் இருக்கும். குட்டியா இருக்கறதால, நிறைய சாப்பாடு கொடுக்க கூடாது. அப்புறம் ஓவர் வெயிட் ஆகி, நடக்க முடியாம சிரமப்படும்.
ஆடு மாதிரி கீழ தொங்கற காது தான், பீகலோட யுனிக்னெஸ். இதுக்கு, வெல்வெட் மாதிரி ஸ்மூத்தான, சில்கியான ஸ்கின் கோட் இருக்கறதால, பராமரிக்கறது ரொம்ப ஈஸி. கிட்ஸோட சீக்கிரம் அட்டாச் ஆகிடும்.
தேவையில்லாம குரைக்காது. அபார்ட்மென்ட்ல குடியிருக்கறவங்க வளர்க்கலாம். எங்க வேணும்னாலும் ஈஸியா எடுத்துட்டு போகலாம். ரொம்ப பிரெண்ட்லி. புது ஆட்களை பார்த்தாலும், சோசியலா பழகிடும்.
பீகல் வளர்க்க ஆசைப்படுறவங்க, கே.சி.ஐ., சான்றிதழ் பெற்ற ப்ரீடான்னு செக் பண்ணி வாங்குங்க. இதோட தலைமுறை, ஹெல்த் கண்டிஷன் பார்த்து வாங்கிட்டா, கிட்டத்தட்ட 15 வருஷம் வரைக்கும், உங்க குடும்பத்துல ஒருத்தராவே மாறி, அன்பை பொழியும்.