UPDATED : ஜன 20, 2024 05:20 PM
ADDED : ஜன 20, 2024 06:07 AM

'என்னோட 'பன்பன்'னுக்கு பாஸ்போர்ட் கிடைச்சிடுச்சு...!' என்ற கமெண்ட்டுடன், போஸ்கொடுக்கும் முயல்குட்டியின் கிளிக் தான், தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்காவில் ஒருவர் தன்னோட முயல்குட்டியான 'பன்பன்'னுடன், 'டூர்' செல்வதற்காக, பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இதேபோல, நீங்களும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, செல்லபிராணிகளை அழைத்து செல்லணுமா?
முறையாக தடுப்பூசி போடப்பட்டு, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பெட்ஸ்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறையில், தடையின்மை சான்று பெற்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பெட்ஸ்களை ஏற்றி செல்ல அனுமதிக்கும், ஏர்லைன்ஸ் நிறுவனங்களை அணுகி, விதிமுறைகளை கேட்டறிய வேண்டும்.பொதுவாக, எட்டு கிலோவிற்குள் இருக்கும் செல்லபிராணிகளை, பிரத்யேக டிராவல் பேக்கில் போட்டு காலடியில் வைத்து எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. கார்கோவில் அனுப்பும் போது பிரத்யேக கூண்டில் வைத்து அனுப்ப வேண்டும். இங்கே, செல்லப்பிராணிகளுக்கு டிரை உணவுகள் கொடுப்பர். விமானம் தரையிறங்கியதும், சொகுசாய் பறந்துவந்த உங்க வீட்டு செல்லத்துடன் ஊர் சுற்றலாம்.
கோவையிலும் இருக்கு 'பெட்ஸ்கபே'
![]() |
ஓட்டல் இன்டஸ்ட்ரீயில் புதுவரவு 'பெட்ஸ் கபே'. உணவுகளை ஆடர் செய்துவிட்டு, காத்திருக்கும் நேரத்தில் அங்குள்ள பெட்ஸ்களுடன் நேரத்தை செலவிடலாம். மும்பை, சென்னை நகரங்களை தொடர்ந்து கோவை, காளப்பட்டி ரோட்டில், 'பவ்பவ் பிலிஸ்' என்ற பெட்ஸ் கபே செயல்படுகிறது.
![]() |
''வீடுகளில் குழந்தைகளுக்கு அடுத்தப்படியாக, ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக இருப்பது செல்லபிராணிகள் தான். சொந்த வீடு இல்லாமல், பெட்ஸ் வளர்க்க முடியாமல் தவிப்போர், அவுட்டிங் செல்லும் போது ரிலாக்ஸாக இருக்க புது சூழலை தேடுபவர்களுக்காகவே, பவ்பவ் பிலிஸ் கான்செப்ட் உருவாக்கினோம்.
![]() |
ஒரு பகுதியில் ரெஸ்டாரன்ட், மறுபகுதியில் துறுதுறு கண்களோடு, விளையாட வாடிக்கையாளர்களை அழைக்கும் பப்பிஸ். உணவை ஆடர் செய்து காத்திருக்கும் நேரத்தில், பெட்ஸ்களுடன் விளையாடலாம்,'' என்கிறார் ஓட்டல் நிறுவனர் அரவிந்த். மேலும் அவர் கூறுகையில்,'' எங்கள் ஓட்டலில், அனைத்து தென்னிந்திய, வடஇந்திய உணவு வகைகள் கிடைக்கும். இங்கே, காக்கஸ்பேனியல், கோல்டன் ரிட்ரைவர், ஹஸ்கி, சிட்சு, பீகில் உள்ளிட்ட பல வகை நாய்கள் உள்ளன. அனைத்து நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், யாரையும் கடிக்காது. மதியம், மாலை நேரங்களில் ஓட்டல் செயல்படுகிறது,'' என்றார்.
எங்களுக்கும் பொங்கல்
பொங்கல் முடிஞ் சாலும் செங்கரும்பு தீரும் வரை சாப்பிடுவோம்ன்னு 'ஆரா'வும் 'ரெமோ'வும் போட்டி போடுறாங்க.
![]() |
வீட்டில் இவைகளின் சேட்டைகளை ஆர்வமாக உரிமையாளர் சுபா பகிர்ந்து கொண்டதாவது:
ஆரா, ரெமோவின் பேவரட் புட் காய்கறிகளும், பழங்களும் தான். தெருவில் கரும்புகளை பார்த்து விட்டால், 'ஊ..ஊ..' என மெல்லிய சத்தத்துடன் வாங்கி தருமாறு கொஞ்சலுடன் கேட்பார்கள். கெஞ்சி, கொஞ்சி, இறுதியில் அடம்பிடித்து கரும்பு வாங்கிவிட்டார்கள். சின்ன சின்ன துண்டாக வெட்டி வைத்து, 50 கிராம் வரை கரும்பு கொடுக்கலாம். பொங்கல் முடியும் வரை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்.
இருவரும், ரசித்து, ருசித்து கரும்பு சாப்பிடுவதே, பேரழகாக இருக்கும். வெளியில் இருந்து, வீட்டிற்குள் வரும் போதெல்லாம், காய்ந்த பூ, பேப்பர் என ஏதோ ஒன்றை பரிசாக கொடுத்து, என்னை வரவேற்பது ஆராவின் ஸ்டைல். இவர்களுடன் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.