ADDED : ஆக 17, 2024 11:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலுவலகம், பிசினஸ் என பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால், உங்களை காணாத ஏக்கத்தில், கூண்டை விட்டு வெளியே வராமல், கோபித்து கொண்டிருக்கும் பறவையை குஷிப்படுத்த இந்த 'பேர்ட்ஸ் ஜிம்' வாங்கி கொடுத்து அசத்துங்க.
இதில் ஏணி, ஊஞ்சல், விளையாட்டு பொம்மைகள் இணைத்திருப்பதால், ஜாலியாக விளையாடும். நீண்ட நேரம் வீட்டிலில்லாத போது பவுலில், தண்ணீர், உணவு நிரப்பினால், பசிக்கும் போது சாப்பிட்டு கொள்ளும். பெட் ஷாப், ஆன்லைனில் பல்வேறு மாடல்களில் கிடைப்பதால், உங்கள் பட்ஜெட்டிற்கேற்றதை வாங்கலாம். இதன் அடிப்பகுதியில் எவர்சில்வர் ஷீட் பொருத்தியிருப்பதால், பறவைகளின் கழிவுகள் அப்புறப்படுத்துவது ஈஸி.

