ADDED : ஜன 21, 2024 09:20 AM

நாய், பூனை , லவ் பேர்ட்ஸ், மீன்கள் போன்றவற்றை, பெரும்பாலானோர் வீட்டில் வளர்க்கின்றனர். என்னதான் அவைகளுடன் நெருங்கி பழகினாலும், சில விலங்குகளைவீட்டில் வளர்க்க சட்டம் அனுமதிப்பதில்லை.
வளரும் சூழலை அடிப்படையாக கொண்டு, வீட்டிற்குள் சில பிராணிகளை வளர்க்க , இந்திய தண்டனை சட்டத்தில் இடமில்லை. இது தெரியாமல் சிலர், கிளி, அணில், மைனா போன்ற தடை செய்யப்பட்ட பறவைகளை, கூண்டில் அடைத்து வளர்க்கின்றனர்.
அவ்வாறு வளர்ப்பது சட்டப்படி குற்றம். உளறுவாய் குருவிகள், கூக்குருவான், கடற்புறா, சின்னான், செண்டு வாத்து, கொக்கு, நாரை , குயில், பால்மிங்கோ, கிளி, ஆந்தை , மீன்கொத்தி, ஜங்கிள் மைனா, மைனா, செந்தார்ப் பைங்கிளி, ரெட் முனியா, ஆப்பிரிக்கசாம் பல் கிளி உள்ளிட்ட பறவைகள், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்க்க கூடாது.
நட்சத்திர ஆமைகளை வீட்டில் வளர்ப்பதும் குற்றம். பச்சை கிளிகள் அழியக்கூடியநிலையில் இருப்பதால் வீட்டில் வளர்க்கவும், ஜோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில்இடமுள்ளது.