ADDED : ஜன 01, 2024 03:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளியில் வசிக்கும் ஸ்மிர்தி வீட்டுக்குப் போனால், புதுமைப்பூனைகளின் அணிவகுப்பை ரசிக்கலாம். ஸ்மிர்தி, பூனை வளர்ப்பு ஸ்பெஷலிஸ்ட். சர்வதேச நடுவர் தேர்வுக்காக தயாராகி வரும் ஸ்மிர்தி, நிறங்கள் வாயிலாக பூனையின் ஆண், பெண் வகையை கண்டறிவதில் வல்லவர்.
''பூனைகளுக்கு மாட்டுப்பால் பிடிக்காது. குடித்தால் அதிலுள்ள லாக்டோஸை செரிமானம் செய்ய முடியாமல், உடல்நலக்குறைவு ஏற்படும். எந்த உணவும் இல்லை என்றால் மட்டுமே பாலைக் குடிக்கும். காலை, 7:00 மணிக்கு 'டிரை' உணவு, இரவு 7:00 மணிக்கு சமைக்கப்பட்ட கோழி இறைச்சி, 450 கிராம், இடையில் பூசணி விதை, பீட்ரூட், கேரட் கொடுப்போம். கால்சியம், மல்டி விட்டமீன்கள், சப்ளிமண்ட்ஸ் ஆகியவற்றை சேர்த்துத் தருவோம். மாதம் ஒரு முறை டாக்டர் பரிசோதித்து விட்டு ஆலோசனை வழங்குவார்,'' என்கிறார், ஸ்மிர்தி.