தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/மனிதர்கள் போலவே செல்ல பிராணிகளுக்கும் நோய்கள்

மனிதர்கள் போலவே செல்ல பிராணிகளுக்கும் நோய்கள்

மனிதர்கள் போலவே செல்ல பிராணிகளுக்கும் நோய்கள்


UPDATED : நவ 22, 2026 11:12 AM

ADDED : நவ 21, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 11:12 AM ADDED : நவ 21, 2026 06:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மனிதர்கள் போலவே வீட்டில் ஆசையாய் வளர்க்கும் நாய் பூனைகளுக்கு சிறுநீரகம், இதயம் ,கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது,நமக்கு எதேவது நேர்ந்தாலே கண்கள் கலங்கி சாப்பிடாமல் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு இது போன்ற நேய்கள் ஏற்படும் போது என்ன செய்லாம் தெரியுமா...

இதை பற்றி கால்நடை டாக்டர் இளங்கோவிடம் கேட்ட போது செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகள் மனிதர்களைப் போலவே உறுப்புகள் செயலிழக்கும் நோய்களுக்கு ஆளாகின்றன. ஆரம்பத்தில் இவை வெளிப்படையாக தெரிவதில்லை. நிலைமை தீவிரமான பிறகே பலர் டாக்டரிடம் அழைத்து செல்கின்றனர், இவற்றின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு முறைகளை அறிந்துகொள்வது அவசியம் என்கிறார் டாக்டர்.

கல்லீரல் செயலிழப்பு


காரணங்கள் *லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று ,கல்லீரல் அழற்சி போன்ற நோய்த்தொற்றுகள்*பூசணம் பிடித்த உணவில் உள்ள அஃப்லாடாக்ஸின், நச்சுச் செடிகள், காளான்கள்*பாராசிட்டாமால், போன்ற மனித மருந்துகள்(பூனைகளுக்கு மிக ஆபத்தானாது)*பூனைகள் பல நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தால் வரும் கல்லீரல் கொழுப்பு நோய்*கட்டிகள், பிறவிக் குறைபாடுகள், நீண்டகால மருந்துப் பயன்பாடு.

அறிகுறிகள்: பசியின்மை, வாந்தி, சோர்வு, கண், ஈறு, தோல் மஞ்சளாதல், வயிறு வீங்குதல், அடர் மஞ்சல் சிறுநீர்

சிகிச்சை:மூல காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளித்தல், நரம்பு வழி திரவம், கல்லீரல் காக்கும் மருந்துகள், தேவையான நுண்ணுயிர் கொல்லிகள், குறைந்த கொழுப்பு, தரமான புரத உணவு, பூனைகளுக்குக் கட்டாயமாக உணவூட்டுதல் மிக முக்கியம்.

சிறுநீரக செயலிழப்பு


காரணங்கள்*திடீர் செயலிழப்பு: லெப்டோஸ்பைரா தொற்று, ஆன்டிஃபிரீஸ்(எத்திலீன் கிளைகால்)நஞ்சு, திராட்சை, உலர் திராட்சை (நாய்களுக்கு), லில்லி மலர்(பூனைகளுக்கு), வலி நிவாரணிகள், கடுமையான நீரிழப்பு, வெப்பத் தாக்கு

*நீண்டகால செயலிழப்பு:முதுமை, பல் நோய்கள், சிறுநீர்த் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பரம்பரைக் குறைபாடுகள்.

அறிகுறிகள்: அதிகத் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எடை குறைதல், வாந்தி, வாய் துர்நாற்றம், வாய்ப்புண், சோர்வு.

சிகிச்சை:நரம்பு வழி திரவம், வாந்தி தடுப்பு மருந்துகள், பாஸ்பரஸ் கட்டுப்படுத்தும் மருந்துகள், இரத்த அழுத்த கட்டுப்பாடு, சிறுநீரக நோய்க்கான சிறப்பு உணவு. நீண்டகால நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் சரியான நிர்வாகத்தால் பல ஆண்டுகள் நல்ல வாழ்க்கை வாழச் செய்யலாம்.

இதய செயலிழப்பு


காரணங்கள்*நாய்களில்:சிறிய இனங்களில் இதய வால்வு தேய்மானம், பெரிய இனங்களில் இதயத் தசை விரிவு நோய், கொசுவால் பரவும் இதயப்புழு நோய்.

*பூனைகளில்:இதயத் தசை தடிப்பு நோய், தைராய்டு அதிகச் சுரப்பு,டாரைன் சத்துக் குறைப்பாடு, பிறவி இதயக் குறைப்பாடுகள், முதுமை, உடல் பருமன்.

அறிகுறிகள்:தொடர் இருமல் (குறிப்பாக இரவில்), மூச்சிரைப்பு, விரைவில் களைப்படைதல், மயக்கம், வயிறு வீக்கம், பூனைகளில் வாயைத் திறந்து மூச்சுவிடுதல், பின்னங்கால் திடீர் செயலிழப்பு.

சிகிச்சை:சிறுநீர் பெருக்கிகள்(ஃபியூரோசெமைடு), இதயச் செயல்பாட்டை மேம்படுத்தும் மருந்துகள்(பிமோபென்டான், ACE தடுப்பிகள்), இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகள், குறைந்த உப்பு உணவு, ஓய்வு, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தேவைப்படலாம்.

தடுப்பு முறைகள்

*நாய்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட தடுப்பூசிகளை காலத்தில் போடுங்கள்.

*உடற்புழு நீக்கம் செய்து, இதயப்புழு தடுப்பு மருந்துகளை மாதந்தோறும் கொடுக்கவேண்டும்.

*மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை(பாராசிட்டாமல், வலி நிவாரண மருந்துகள்) கொடுக்காதீர்கள்.

*திராட்சை, சாக்லேட், வெங்காயம், பூசணம் பிடித்த உணவுகளை தவிர்க்கவும் நச்சு செடிகள், ஆன்டிஃபிரீஸ், எலி மருந்துகளை எட்டாத இடத்தில் வைக்கவும்.

*எப்போது சுத்தமான குடிநீர் கொடுக்கவும்.

*உடல் பருமனை தவிர்க்க சீரான உணவும் தினசரி உடற்பயிற்சியும் அளியுங்கள்.

* பற்களையும் வாயையும் சுத்தமாக வைத்திருங்கள்.

*7 வயதிற்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தப் பரிசோதனை செய்யுங்கள்.

பசியின்மை, அதிகத் தாகம், இருமல் மூச்சிரைப்பு, மஞ்சல் நிறம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகுங்கள் என்கிறார் டாக்டர் இளங்கோ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us