போட்டோ எடுக்கவில்லையா... ஐயப்பனிடம் இருக்கிறது தீர்வு!
போட்டோ எடுக்கவில்லையா... ஐயப்பனிடம் இருக்கிறது தீர்வு!
UPDATED : நவ 17, 2026 11:43 AM
ADDED : நவ 16, 2026 07:52 PM

கோவை: கோவை வேளாண் பல்கலையில் பி.டெக். இரண்டாம் வருடம் படித்து வரும் ஐயப்பன், 'டிராயிங்' மற்றும் பெயின்டிங் மீது கொண்ட ஆர்வத்தால் 'ஏஐ' செய்ய முடியாத அளவுக்கு வரைந்து தள்ளுகிறார்.
நினைவுகளின் புகைப்படங்கள், இறந்தவர் நம்முடன் இருப்பது போன்ற போட்டோக்கள், கற்பனை 'டிராயிங்குகள்', இயற்கை ஓவியங்கள் இவரது பேவரைட்.
ஆரம்பத்தில் மரம், மலைகளை ஆயில் பெயின்டிங் ஆக வரைந்து வந்த இவர், இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துள்ளார்.
''மனிதர்களின் கண்களை வரைவதுதான் சிரமமாக இருந்தது. போக போக அதுவும் சரியாகி விட்டது. இப்போது உயிருடன் இருப்பதை போன்ற தோற்றத்தை கண்களில் கொண்டு வந்து விடுவதாக பாராட்டுகிறார்கள்'' என்கிறார் அடக்கமாக.
இவரின் முதல் சரியாக வந்த படம் தங்கையை வரைந்ததுதான் என்று மகிழ்கிறார்.
தந்தையுடனும் தாயுடனும் இணைந்து எடுத்த ஒரு போட்டோ கூட எடுத்து வைக்கவில்லையே என்று சங்கடப்படுவாருக்கு உதவுகிறார்.
இறந்தவர்கள் குடும்பத்துடன் இருப்பது போல வீடியோக்கள், படங்கள் என சில நாட்களுக்கு முன் தான் வளைதளங்களில் வைரலாகி கொண்டிருந்தது.
ஆனால் இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே தனது ஆர்ட் மாஸ்டரின் மகளின் தோழியையும் அவரின் இறந்துபோன தாயுடன் சேர்த்து வரைந்துக்கொடுத்துள்ளதாக கூறுகிறார்.
இறந்தவர்களுடன் சேர்ந்திருக்கும் போட்டோக்களை வரையச் சொல்லி நிறைய ஆர்டர் வருகிறது. ஆனால் ஒருவர் இறப்பதற்கு முன்பே அனைவரும் சேர்ந்தது போல போட்டோவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு போட்டோக்கூட இல்லாத போது தான் அந்த ஏக்கம் தெரிகிறது என்கிறார் ஐயப்பன்.

நீங்கள் மறக்க முடியாத ஒரு படத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் குட்டி கிருஷ்ணர் இருப்பது போல் வரைந்துக்கொடுக்க சொல்லியிருந்தார். அவர் அந்த படத்தை பார்த்து வியந்து மகிழ்ச்சியடைந்தது மறக்க முடியாத தருணம் என்றார்.
தொடர்பு கொள்ள: 90255 25033.
இன்ஸ்டாகிராம்: aiyappan._.arts
