சட்டம் அறிவோம்: தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியுமா?
சட்டம் அறிவோம்: தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியுமா?
UPDATED : நவ 15, 2026 09:36 AM
ADDED : நவ 14, 2026 04:00 PM

கேள்வி : 18 வயது பூர்த்தி ஆகாத ஆண் பெண் இடையிலான பரஸ்பர காதல் உறவு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகுமா?
பதில் : டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பதின்ம வயது ஆண் பெண் இடையே பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் உறவை குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் வன்கொடுமையில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரையில் போக்சோ சட்டத்தில் இந்த விதிவிலக்கு சேர்க்கப்படவில்லை.
கேள்வி : தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியுமா?
பதில் : தாத்தாவின் மனைவி, தாய், மகன், மகள் ஆகியோருடன் முன்னுரிமை முடிந்துவிடும். தாத்தாவின் சொத்தை பாகப்பிரிவினை வாயிலாக தந்தை பெற்றிருந்தால், அந்த சொத்தில் பேரன், பேத்திக்கு பிறப்புரிமை கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
- வக்கீல் சண்முகம்,ரேஸ்கோர்ஸ்.
