தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/யாரடி நீ வெண்ணிலா...

யாரடி நீ வெண்ணிலா...

யாரடி நீ வெண்ணிலா...


UPDATED : அக் 26, 2026 11:24 AM

ADDED : அக் 26, 2026 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 11:24 AM ADDED : அக் 26, 2026 11:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‛முத்து மாமா... முத்து மாமா...' என யாரடி நீ மோகினி சீரியலில் மாமாவை சுத்தி சுத்தி வந்து அழைக்கும் வெண்ணிலா என்ற அப்பாவி பெண் கேரக்டரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வெண்ணிலா கேரக்டராகவே தமிழக மக்கள் மனங்களில் இடம் பிடித்த மற்றுமொரு மலையாள வரவு தான் நடிகை நட்சத்திரா.

‛கிடா பூசாரி மகுடி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது சீரியல்களில் முழுவீச்சில் இறங்கியிருக்கும் நட்சத்திரா நடித்துள்ள ‛அன்னை இல்லம்' சீரியல் விரைவில் வெளியாகவுள்ளது. சின்னத்திரையுடன் வெள்ளித்திரை வாய்ப்பு வந்தாலும் அசர மாட்டேன் என்கிறார் நட்சத்திரா.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...

கடவுளின் பூமி என அழைக்கப்படும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அயத்தில் சொந்த ஊர். சி.ஏ., படிக்கலாம் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். சீரியல், சினிமா என எந்த ஐடியாவும் சென்னைக்கு வந்த போது இருந்ததில்லை. சீரியல், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மற்றவர்களை போல சிறு வயது ஆசையும் இருந்ததில்லை.

படிக்க வந்த எனக்கு பட வாய்ப்பு கிடைத்த கதையே அலாதியானது தான்.

கொல்லத்தில் மேல்நிலை வகுப்பு படித்த போது இளைஞர் திருவிழாவில் பங்கேற்றிருந்தேன். அதில் என்னை கவனித்த குறும்பட தயாரிப்பாளர் ஒருவர், நடிக்கிறீயா என கேட்டார். நானும் குறும்படம் தானே என அதில் நடித்தேன். அதை பார்த்த கிடா பூசாரி மகுடி படக்குழுவினர் அந்த படத்தில் என்னை நடிக்க வைத்தனர். இப்படி தான் கலைப்பயணம் துவங்கியது.

அந்த படத்தில் உடன் நடித்த சிவக்குமார் தான், யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். அதில் வெண்ணிலா கேரக்டர் மக்களிடம் நல்ல ரீச் ஆனது. முதலில் தமிழில் பேச தயக்கமாக தான் இருந்தது. ஆனால் நாளாக தமிழும் சரளமாக வந்து விட்டது.

பிறகு செவ்வந்தி, அபிடெய்லர், வள்ளி திருமணம் என சீரியல்களில் நடித்தேன். தற்போது நடித்து வரும் அன்னை இல்லம் விரைவில் வெளியாகவுள்ளது. அதுவும் யாரடி நீ மோகினி போல என்னை கவனிக்க வைக்கும்.

பட வாய்ப்புகளும் வருகின்றன. ஆனால் சீரியல்களில் பிசியாக இருப்பதால் முழுக்கவனமும் அதில் தான் இருக்கிறது. மாதத்தில் இருபது நாட்கள் சீரியல் படப்பிடிப்புக்கே போய் விடுகிறது. இதனால் மற்ற நாட்களில் குடும்பத்தினருக்காகவும் செலவிட வேண்டியிருக்கிறது.

திரைப்படம் பார்ப்பதும், சென்னை பெசன்ட்நகர் பீச் செல்வதும் தான் பொழுது போக்கு. பீச்சில் பார்ப்பவர்கள் என்னை வெண்ணிலா என அழைக்கும் போது கிடைக்கும் கிக் இருக்கிறதே அதற்கு ஈடே இல்லை.

எங்க ஊரை விட சென்னை தான் ரொம்ப பிடிக்கும். கேரளாவை பொறுத்தவரை இரவு 9:00 மணிக்கு பிறகு நகரங்கள் துாங்கி விடும். சென்னை அப்படியில்லை. இரவு முழுக்க படுபிஸியாக இருக்கிறது.

கொல்லத்தில் இருக்கும் போது சென்னையை துபாய் போல நினைப்பதுண்டு. ஆனால் அதே சென்னைக்கு வந்து தங்கி நடிக்கிறதை நினைத்தால்.... கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்!

சென்னைக்கு வந்து விட்டாலே இட்லி என்றாலும் சரி... பிரியாணி என்றாலும் சரி... எல்லா சாப்பாட்டையும் ஒரு கை பார்த்து விடுவேன்.

சமீபத்தில் வெளியான படங்களில் மண்டாடி ரொம்ப டச் பண்ணியது. இதுபோல மலையாளத்தில் பார்வதி நடித்து வெளியாகியுள்ள ‛பிரதம திரிஷ்டிய குற்றக்கார்' என்ற படமும் என்னை ரொம்ப பாதித்தது. கிராமத்து சுறு சுறு பெண்ணாக நடிக்க விருப்பம் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை அப்படி தான் இருக்க வேண்டும். இப்படி தான் இருக்க வேண்டும். அதில் நடிக்க வேண்டும் என்ற இலக்கு இல்லை. போற வரைக்கும் போயிட்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான். நமக்கு என இருப்பதை யாரும் தட்டி பறித்து விட முடியாது என உற்சாகத்துடன் பேசினா் நட்சத்திரா.

வாழ்த்த (இன்ஸ்டா) nakshatra-_viswanathan

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us