தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை

திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை

திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை


ADDED : அக் 26, 2026 11:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 11:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு பக்கம் அலைபேசியில் கேம்ஸ், ரீல்ஸ் என பால்யத்தை தொலைக்கும் இளசுகளுக்கு மத்தியில், திருவாசகம், மிருதங்கம், மகாபாரதம், பொன்னியின் செல்வன் என பிசியாக இருக்கிறார் 7ம் வகுப்பு மாணவர் தருண்.

தென் மாவட்டங்களில் எந்த மூலையில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தாலும் இச்சிறுவனை அங்கு காணலாம். சிறிய வயதிலேயே திருவாசகம், சிலம்பம் உள்ளிட்டவற்றில் தனி சாதனைகளை படைத்துள்ளார். கோயில்களுக்கு செல்வதில் தருணுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு திருவாசகம் மீது ஆர்வம் வர, பாட்டி விஜயலட்சுமி தான் காரணம். அவரின் உந்துதலால் தருண் 9 வயதில் இருந்தே திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பெற்றோர் ஆனந்தி, முத்துக்குமார் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றனர்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக தருண் நம்மிடம் பகிர்ந்தது..

முதலில் திருவாசகத்தை படிப்பது கடினமாக இருந்தது. தினமும் ஒன்று, இரண்டு பாடல்கள் படித்ததால் எளிதாகிவிட்டது. பாடல்களின் பொருளை தெரிந்து கொண்டு பாடுகிறேன். தாய் ஆனந்தி, பாடல்களின் பொருள், ஏற்ற இறக்கங்களை எளிமையாக கற்றுத் தருவதால் உதவியாக உள்ளது.

சிவனை நினைத்து கொள்வேன்

முதன் முதலில் மேடையில் ஏறும் போது பயமாக இருந்தது. ஒவ்வொருமுறை மேடை ஏறும்போது சிவனை நினைத்துக் கொள்வேன். அதனால் தைரியமாக பாட முடிகிறது. மதுரையில் 2023ல் கண்களை துணியால் கட்டிக்கொண்டு, தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தேன். கடந்தாண்டு திருவாசகத்தின் 51 பதிகங்களில் 658 பாடல்களையும், 2 மணி நேரம் 27 நிமிடங்களில் பிழையில்லாமல் வாசித்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்தேன்.

ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே அலைபேசி பயன்படுத்துகிறேன். அதிலும் கேம்ஸ் விளையாடுவதில்லை; ஆன்மிக நிகழ்ச்சிகளை 'யூடியூப்' மூலம் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் உள்ளது. என் வயதுள்ள மாணவர்கள் திரையில் கேம்ஸ் விளையாடாமல், களத்தில் ஆட வேண்டும். பொன்னியின் செல்வன், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் படிப்பதே எனது பொழுதுபோக்கு. பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் கதாபாத்திரங்கள் பிடிக்கும்.

மிருதங்கத்தில் தற்போது 2ம் நிலை பயிற்சியில் இருக்கிறேன். அடுத்த கட்ட தேர்வுக்கும் தயாராகி வருகிறேன். இன்னும் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு போல சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே என் கனவு என்ற அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

இவரை வாழ்த்த 99941 64072

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us