ADDED : அக் 25, 2024 11:08 PM

பிறப்புறுப்பில் இருந்து அடிக்கடி ரத்தக்கசிவு ஏற்படுதல், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது 'டி.வி.டி.,' எனும் பரவக்கூடிய பாலுறவு கட்டியாக (Transmissible Venereal Tumour) இருக்கலாம். இது, நாய்களுக்கு பரவும் ஒருவகை புற்றுநோய். கால்நடை மருத்துவரை அணுகி உடனே பரிசோதிப்பது அவசியம்.
பொதுவாக, இவ்வகை புற்றுநோய் பிறப்புறுப்பை தாக்குவதால், இனப்பெருக்கத்திற்கு பப்பியை தயார் படுத்தும்போது, அதன் இணையை, மருத்துவரிடம் பரிசோதித்து, பின் அனுமதிப்பது நல்லது.
மேலும், இப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பப்பியின் உறுப்பை, நாக்கால் நக்குதல், அடிக்கடி முகர்ந்து பார்த்தல், உடலின் பிற பகுதிகள் கொண்டு தேய்தால் கூட, மற்ற பப்பிகளுக்கும் இவ்வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, மற்ற நாயுடன் பழக அனுமதிக்கும் முன்பு, அது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இனப்பெருக்கத்திற்கு அல்லாமல், செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பப்பிக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதால், டி.வி.டி., வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்க முடியும்.
வாயில் இருந்து துர்நாற்றம் வீசுதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல், சாப்பிடாமல் இருத்தல் போன்ற வேறு சில அறிகுறிகளும், இவ்வைரஸ் தாக்குதலால் ஏற்படலாம். இதற்கு, மருந்துகள் இருப்பதால், உரிய சிகிச்சை மூலம் ஓரிரு மாதங்களில் குணப்படுத்திவிடலாம்.
- ஆர். நித்தின்குமார்,
கால்நடை மருத்துவர், கோவை.