UPDATED : பிப் 10, 2024 10:07 AM
ADDED : பிப் 10, 2024 09:09 AM

முதல்ல இத கவனிங்க...
எந்த பிரீட் பப்பி வீட்டுல வளர்க்கலாம். ஹெல்தியான பப்பி தான் வாங்குறோமான்னு எப்படி தெரிஞ்சிக்கறது? ஒரு வயது வரை அதுக்கு என்னென்ன சாப்பிட கொடுக்கலாம்?
வசந்தபிரியா, கோவை.
நீங்கள் குடியிருக்கும் இடத்தை பொறுத்து தான் பிரீட் தேர்வு செய்ய வேண்டும். நாய்களில் டாய், ஸ்மால், மீடியம், லார்ஜ் 'ஜெயன்ட்' என அதன் உடல் வளர்ச்சியை பொறுத்து 4 வகையாக பிரிக்கலாம். அபார்ட்மெண்ட்டில் குடியிருப்போருக்கு டாய் பிரீட் ஏற்றது. டாய் பிரீட் வாங்குவதாக இருந்தால் பிறந்து 10-12 வாரங்களான பப்பி வாங்கலாம். மற்ற பிரீட்கள், 6-8 வாரங்கள் ஆகியிருந்தால் வாங்கலாம்.
காது, காதுமடலின் வெளிப்புறம் உட்புறங்களில் சிவப்பாக தடித்து இருக்க கூடாதுகாதில் நாற்றம் எதுவும் வரக்கூடாது.
மூக்கு, கண்ணில் நீர் வடியாமல் இருக்க வேண்டும். தும்மல் இருக்க கூடாது. தோல்முடி உதிராமல், சொட்டை இல்லாமல், பளபளப்பாக இருக்க வேண்டும். கண்கள் விழிப்போடு பிரகாசமாக இருக்க வேண்டும்.
ஹெல்தியான பப்பி வாங்கி வந்தால் மட்டும் போதாது. ஒரு வயது வரை, உணவு, பராமரிப்பு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பிறந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒருமுறை குடல்புழுநீக்க மருந்து கொடுக்கணும். 4-12 மாதங்கள் ஆன பப்பிக்கு மாதம் ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்யணும்.
வீட்டிலே தயாரித்து கொடுக்க, இருவகை உணவு முறைகள் உள்ளன. முதல்வகை உணவு: மில்க் பவுடர் 200 கிராம், கிரீம் 200 மி.லி, அரிசி கஞ்சி 200 மி.லி, கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் 400 கிராம் கொடுக்கலாம்.
இரண்டாம் வகை உணவு, 700 மி.லி பசும்பால், கிரீம் 200 மி.லி, முட்டை மஞ்சள் கரு, அரிசி கஞ்சி 50 மி.லி கொடுக்கலாம். இதை ஒவ்வொரு வகை பிரீடுக்கும், தினசரி எத்தனை முறை பிரித்து கொடுக்க வேண்டுமென்ற அளவீடு உள்ளது.
இதுதவிர ரெடிமேட் உணவுகளும் பப்பிகளுக்கு கடைகளில் விற்கப்படுகிறது. அதில் கொடுக்கப்படும் அளவீடு மட்டுமே கொடுக்க வேண்டும். ரெடிமேட் உணவு கொடுத்தால், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கொடுக்க தேவையில்லை.- பிரபாகரன், அரசு கால்நடை மருத்துவர், கோவை.