ADDED : ஏப் 13, 2024 08:42 AM

அடிபட்ட நாய்களுக்கு முதலுதவி எப்படி செய்வது?-ஏ.பாக்கியம், கோவை.
நாய்களுக்கு அடிப்பட்டால் முதலில் ரத்தம் கசிவதை நிறுத்த சுத்தமான துணி கொண்டு அந்த இடத்தை கட்ட வேண்டும். அதன் மேல், ஐஸ் பேக் மூலம் ஒத்தடம் கொடுக்கும் போது ரத்தம் கசிவது நின்றுவிடும். உடனே, கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது. காயம்பட்ட இடத்தை சுற்றிலும் உள்ள முடிகளை அப்புறப்படுத்திவிட்டு சிகிச்சை அளிக்கப்படும். திறந்தநிலையிலே இருந்தால் புண் சீக்கிரம் ஆறிவிடும். காயம் ஆறுவதற்கு ஸ்பிரே வடிவிலும் மருந்துகள் கிடைக்கின்றன.
தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால் நாய்களுக்கு தண்ணீர் அதிகம் கொடுக்க வேண்டும். உடல் மீது, வாட்டர் ஸ்பிரே அடித்துவிடலாம். 10 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய், மசாஜ் ஆயில் கொண்டு உடலை நீவிவிட்டால், புத்துணர்வு ஏற்படும். தினமும் 100 மிலி வரை மோர், தேங்காய் பால் ஆகியவற்றை குடிக்க கொடுப்பதாலும், உடலின் வெப்பத்தை சமன்படுத்த முடியும்.
- எஸ்.எம்.திருமலைராஜன், கால்நடை மருத்துவர், கோவை.

