ADDED : பிப் 17, 2024 08:26 AM

நாய்களை கர்ப்ப காலத்தில் எப்படி பராமரிக்கணும்?
கணேஷ், வசந்தபிரியா, மதுரை.
நாய்கள் கர்ப்பமாக இருக்கிறதா என, பரிசோதிப்பது அவசியம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, கர்ப்பமான மூன்று வாரத்தில் எடுக்கலாம். 45 நாட்களுக்கு பின் எக்ஸ்ரே எடுத்தால், எத்தனை குட்டிகள் உருவாகியிருக்கின்றன என்பதை அறியலாம்.
கர்ப்பத்தை உறுதி செய்த பின், உணவு, பராமரிப்பு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மல்டி விட்டமின், கால்சியம் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது. ஆனால், 'மேட்டிங்' செய்வதற்கு முன்பு, தடுப்பூசி போட வேண்டும். அப்போது தான், ஆரோக்கியமான சந்ததி உருவாகும். மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில், குடல்புழு நீக்கம் செய்யலாம்.
கர்ப்ப காலத்தில் குளிக்க வைக்கலாம், வாக்கிங் அழைத்து செல்லலாம். ஆனால் ஓடாமல், குதிக்காமல் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். குட்டி ஈனும் நாட்கள் நெருங்கும் போது, மருத்துவரை அணுகுவது அவசியம். இச்சமயத்தில் ஓனர் வெளியூர்களுக்கு செல்வதை, தவிர்க்க வேண்டும். அவர்களின் அரவணைப்பை, நாய்கள் எதிர்பார்க்கும்.
- சங்கர்,
அரசு கால்நடை மருத்துவர், கோவை.