sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 'தாவிய' வாரிசு ; ஏவியது யாரு?

/

 'தாவிய' வாரிசு ; ஏவியது யாரு?

 'தாவிய' வாரிசு ; ஏவியது யாரு?

 'தாவிய' வாரிசு ; ஏவியது யாரு?


ADDED : பிப் 24, 2026 05:48 AM

Google News

ADDED : பிப் 24, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இ றுதி வாக்காளர் பட்டியல் அறிவிச்சிட்டாங்கக்கா''

'தண்டோரா' போட்டவாறே, சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''அக்கா... நம்ம மாவட்டத்துல, 19.55 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க...''

''மித்து... எஸ்ஐஆர்.க்கு முன்னாடி எவ்ளோ பேர் இருந்தாங்க''

''24.45 லட்சம் பேர் இருந்தாங்கக்கா...''

''கிட்டத்தட்ட 4.90 லட்சம் பேர் குறைஞ்சுருக்காங்க இல்ல...''

''ஆமாக்கா... ஆமா''

''அரசியல் சூடுபிடிச்சிருச்சு... மாஜி சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.ல இருந்து த.வெ.க.வுக்குத் தாவிட்டாரே''

''ஆமாக்கா... போன தடவை எம்.பி. எலக்ஷன்ல, நீலகிரி தொகுதில 'சீட்' கொடுத்தாங்க... மூனாவது இடம்தான் இவருக்குக் கெடைச்சுது.

''இந்த தடவை, அவிநாசி சட்டசபை தொகுதில சீட் கிடைச்சா, ஈஸியா ஜெயிக்கலாம்ன்னு நெனைச்சாரு...

''ஆனா... உள்ளூர் அ.தி.மு.க. காரங்க, இவருக்கு சீட் கொடுக்கக்கூடாதுங்கறதுல உறுதியா இருந்திருக்காங்க...

''கடந்த ரெண்டு தடவையா, உள்ளூர்க்காரங்களுக்கு சீட் கொடுக்கல... ரெண்டு தடவை ஜெயிச்ச தனபால் தொகுதியை எட்டிக்கூடப் பாக்கல... நிர்வாகிகளே பார்க்க முடியாதப்ப தொண்டர்களும், மக்களும் எப்படிப் பார்க்க முடியும்ன்னு கேக்கறாங்களாம்.

''ஆனா, லோகேஷ், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டப்ப கூட, கட்சித் தலைவருங்க யாரும் வந்து பார்க்கலேன்னு குற்றஞ்சாட்டுறாரு...

''அவிநாசில இந்த தடவை உள்ளூர் அ.தி.மு.க. காரங்களுக்கு 'சீட்' கிடைக்கும்ன்னு சொல்றாங்களாம்... என்னதான் இருந்தாலும் லோகேஷ், அ.தி.மு.க. மேல பழியைத் துாக்கிப்போட்டுட்டு கட்சி தாவுனது கட்சிக்காரங்களை 'ஹர்ட்' பண்ணிருச்சு... இதுக்குப் பின்னாடி யாரு இருந்திருப்பாங்கங்கற விவாதம் சூடு பிடிச்சுருச்சாம்''

''மித்து... அவிநாசில போன தடவை தி.மு.க.ல ஆதித்தமிழர் பேரவை அதியமான் போட்டியிட்டார். தி.மு.க.ல பலருக்கும் இது பிடிக்கல...

''இந்த தடவை தி.மு.க. காரங்களுக்குத் தான் 'சீட்' கொடுக்கணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறாங்களாம்...

''வி.சி.க.வும் 'சீட்' கேக்கறதா சொல்றாங்க...''

''கேக்கறதுக்கு அவங்களுக்கும் உரிமை இருக்குல்லக்கா''

இருவரும் புன்னகைத் தனர்.

'துண்டு' போட்ட ம.தி.மு.க. ''அக்கா... திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ம.தி.மு.க. இப்பவே துண்டு போடுது...''

''ஆமா மித்து, மாநகர் மாவட்ட செயலர் நாகராஜூக்கு சீட் கொடுக்கணும்ன்னு தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க...

''திருப்பூர் வடக்குல கடந்த மூனு தேர்தல்லயும் அ.தி.மு.க.தான் ஜெயிச்சுது... தி.மு.க.ல 2011ல எக்ஸ் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, 2016ல அமைச்சர் சாமிநாதன் போட்டியிட்டாங்க... ஜெயிக்க முடியல.

''2021ல 'தோழர்' நின்னாரு... தோல்வியைத் தழுவினாரு...

''இந்த முறை 'தோழர்'கள் தயக்கம் காட்டுனா, நாம நிக்கலாமேன்னு தான் ம.தி.மு.க. 'துண்டு' போட்ருக்காம்''

''ஆமாக்கா... அதேபோல, இந்த தொகுதிக்குத்தான் அ.தி.மு.க.ல போட்டியிட கடும் போட்டி''

''தொடர்ந்து ஜெயிக்கறதுனாலதான் இவ்ளோ ஆர்வம் மித்து''

வெளிப்படுத்தினாள், சித்ரா.

அ.தி.மு.க.வில் மாற்றம் ''அக்கா... திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.ல பல மாற்றங்கள் நடந்திருக்குது...

''எம்.எல்.ஏ. ஆனந்தனோட உறவினர் கோகுலுக்கு ஒன்றியச் செயலாளர் பதவி கிடைச்சிருக்காம்.

''மாவட்ட அவைத்தலைவராக இருந்த எக்ஸ் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு மாநிலப்பொறுப்பு கொடுத் திருக்காங்க.

''மங்கலம் பகுதி 'வீக்'கா இருக்காம். தெற்கு ஒன்றிய செயலாளரா அந்தப்பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியத்தை நியமிச்சிருக்காங்க.

''எக்ஸ் எம்.எல்.ஏ. கரைப்புதுார் நடராஜன் ஒன்றியச் செயலாளராவே தொடர்றாராம்''

''மித்து... மாநகர் மாவட்ட அ.தி.மு.க.ல சில பகுதிகள்ல செயலாளர்கள் 'ஆக்டிவ்'வா இல்லையாம். பழைய நிர்வாகிகளை கட்சித்தலைமை சரியா பயன் படுத்தலைன்னு குற்றச்சாட்டும் எழுந்திருக்கு''

கட்சி விஷயங்களை இருவரும் அம்பலமாக்கினர்.

மாஜி மேயர் மீது 'பாசம்' ''அக்கா... அ.தி.மு.க. கூட்டணில அ.ம.மு.க. வந்திருக்கு...

''பழனிசாமியும், தினகரனும் கனெக்ட் ஆகறாங்களோ இல்லையோ, அ.ம.மு.க. மாவட்ட செயலாளரான மாஜி மேயர் விசாலாட்சி, இங்க இருக்கிற அ.தி.மு.க. காரங்களோட கனெக்ட் ஆயிட்டாராம்.

''கவுன்சிலருங்களும், நிர்வாகிகளும், பழைய பாசத்தோட, 'மேயர் அக்கா'ன்னு கூப்பிடறாங்களாம்''

''மித்து... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சிட்டதால, மாவட்டத்துல, பிரசாரத்துக்கு சீக்கிரமே வலம் வர ஆரம்பிச்சுடுவாங்க...

''பிரசாரத் திட்டங்களை வகுக்கத் துவங்கீட்டாங்களாம்.

''மாவட்டத்துல த.வெ.க. காரங்க, தொகுதி வாரியா, உறுப்பினர் சேர்க்கை விவரத்த, நிர்வாகிகள் மட்டத்துல, கட்சி மேலிடம் வெளியிடுதாம்.

''போன வாரத்துல, திருப்பூர் வடக்கு தொகுதில புது உறுப்பினர் சேர்க்கை கூடுதலா இருந்திருக்காம்.

''இதனால த.வெ.க. காரங்க ஆர்வத்தோட இருக்காங்களாம்''

''அக்கா... தி.மு.க. கூட்டணில தே.மு.தி.க. இணைஞ்சதுனால நம்ம ஊர் தி.மு.க.காரங்க உற்சாகமா இருக்காங்களாம்.

''ஏன்னா... தே.மு.தி.க.வுக்கு இங்க 'வோட்பேங்க்' ஜாஸ்தின்றாங்களாம்''

''மித்து... அது முந்தி... இப்பவுமா அப்படி''

''எப்பவுமே கட்சிக்காரங்க தங்களுக்கு பாசிடிவ்வான விஷயத்தை மட்டும்தானே பார்ப்பாங்கக்கா''

அரசியல் பேச்சுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

கீரி வளர்த்தவர் பரிதாபம் மித்து... பொது நுாலக இயக்கம் சார்புல மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான இலக்கியத் திருவிழா, நம்ம ஊர்ல நடந்துச்சு.

''இதை 'அரேஞ்ச்' பண்றதுக்குன்னு ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள்ல இருந்து நுாலக ஊழியர்கள் வந்திருந்தாங்க...

''கருத்தரங்குல பேச்சாளர்கள் பேசத் துவங்கினபிறகுதான், மாணவ, மாணவியரையே அமர வச்சிருக்காங்க... அவசர கதியா ஏற்பாடு பண்ணியிருக்காங்க''

''அக்கா... அடைக்கலம் தேடி வந்த கீரிப்பிள்ளைகளை கருவலுாரை சேர்ந்த இளைஞர் ஒருத்தரு வளர்த்திருக்காரு... சமூக வலைதளப் பக்கத்துல இதைப் பதிவிட, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றம்னு அவரை அரெஸ்ட் பண்ணீட்டாங்க...

''பாசத்தோட வளர்த்த அவரை கீரிப்பிள்ளைங்களுக்குப் பிரிய மனசு இல்ல... பத்திரிகை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கப்போனப்ப, அனுமதி இல்லைன்னுட்டாங்க.

''அப்புறம் கையும், களவுமா பிடிச்சதா போட்டோவை அனுப்பிவச்சாங்களாம்.

''வனத்துறை சார்புல மொதல்ல எந்த விலங்கெல்லாம் வளக்கலாம்ன்னு மக்கள்ட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணும்...''

சித்ரா ஆமோதித்தாள்.

கல்லா கட்டுவது யார்? ''மித்து... மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆபீஸ் மூலமா மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர், வீல் சேர், ஸ்மார்ட் போன்லாம் தர்றாங்க. ஆனா, தங்களால தான் இது கிடைச்சுதுன்னு சொல்லி, இதுக்காக மூவாயிரம் ரூபாய் வரைக்கும், சிலரு கல்லா கட்றாங்களாம்.

''இந்த துறை ஆபீசர் வர்றவங்ககிட்ட, ஒரு பைசா கூட கொடுக்க வேணாம்ன்னு விழிப்புணர்வு ஏற்படுத்துறாராம்.

''ஆபீஸ்ல லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு போர்டு வைக்கணும்ன்னு மாற்றுத்திறனாளிகள் சொல்றாங்களாம்''

''அக்கா... அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையத்துல, ஊராட்சி செயலரா இருந்த 'ராஜசிவா', முறைகேடு புகார்ல சிக்கி, அஞ்சு வருஷத்துல மூனு தடவை சஸ்பெண்ட் ஆயிருக்காரு.

''அவரை டிஸ்மிஸ் செய்யணும்னு, பொதுமக்களோட வந்து, முன்னாள் பெண் தலைவர் கலெக்டர்ட்ட புகார் கொடுத்தாரு...

''அப்புறம் முன்னாள் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், செயலாளருக்கு எதிரா இன்னொரு தரப்பினர் வந்து மனு கொடுத்தாங்களாம்.

''இதுல இருக்கிற 'பாலிடிக்ஸ்' புரியாம ஆபீசர்ஸ் மண்டையப் பிச்சுக்கிறாங்களாம்''

'டாஸ்மாக்'கே துணை ''மித்து... சிட்டில ஸ்டேஷன் வாரியா இருக்கிற நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரங்க பெரும்பாலானவங்க, ஸ்டேஷன் அதிகாரிகளோட கைகோத்து, கமிஷனர் காதுக்கு எதுவுமே கொண்டுபோறதில்லையாம். கமிஷனர் கண்டிச்சா தான் சரியா வரும்''

''அக்கா... சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், மாற்றுத்திறனாளிகள்ன்னு தினசரி போராட்டம் நடத்துனாங்கள்ல...

''போலீஸ், அவங்கள டெய்லி அரெஸ்ட் பண்ணுச்சு... அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதுக்கு டாஸ்மாக் 'பார்' காரங்களைத்தான் கைக்குள்ள போட்டுக்கிட்டாங்களாம்.

''டாஸ்மாக் இன்றி ஓர் அணுவும் அசையாதுங்கிறது உண்மைங்க்கா''

மித்ரா தத்துவம் பேசினாள்.

வசூலுக்கு கெளம்பீட்டாங்களோ! மித்து... போன வாரம் பத்திரப்பதிவு ஆபீசர் 'வசூல் வேட்டை' தொடர்பா பேசுனோம்ல...

''அந்த ஆபீசுக்கு நாலு பேரு போயிருக்காங்க... நாங்க ரிப்போர்ட்டர்ஸ்ன்னு சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாங்க.

''நாங்க சொல்லித்தான், ஆபீஸர் பத்தி, 'சித்ரா -மித்ரா'ல தகவல் வெளியாயிருச்சுன்னு சொன்னாங்களாம்.

''எங்களுக்கு கப்பம் கட்டுனாதான் உங்களப் பத்தி மீண்டும் வராமப் பாத்துக்குவோம்னு இந்த 'டுபாக்கூர்ஸ்' சொல்லியிருக்காங்களாம். டுபாக்கூர்ஸ்ங்க 'வசூல் வேட்டை'யை நம்பி ஏமாறாம ஆபீசர்ஸ் இருக்கணும்... தைரியமா அவங்க மேல புகார் கொடுக்கணும்''

''அக்கா... கரைப்புதுார் வில்லேஜ்ல குப்பை பிரச்னை ஓயவே மாட்டேங்குது...

''ஸ்பெஷல் ஆபீசர் கன்ட்ரோல்ல இருந்தாலும், ஆளும்கட்சிக்காரங்கதான் இன்னுமே கன்ட்ரோல்ல வச்சிருக்காங்களாம்.

''பினாமி பேருல டெண்டர் எடுத்து பணத்தைச் சுருட்டுனதா சொல்றாங்க. குப்பையோட சேர்ந்து இந்தப்பிரச்னையும் 'கப்' அடிக்க ஆரம்பிச்சிருச்சு''

''மித்து... பல்லடம் பகுதில ரொம்ப நாளா டேமேஜ் ஆகியிருந்த பி.ஏ.பி. வாய்க்கால இப்பத்தான் புதுப்பிச்சுட்டு இருக்காங்க... வாய்க்காலோட ரெண்டு பக்கமும் வண்டிப்பாதைக்கான இடத்தையும் எடுக்கணும். பொதுப்பணித்துறை அதிகாரிங்க ஆக்கிரமிப்பை எடுக்காம சிலருக்கு 'அட்ஜெஸ்ட்' பண்றாங்களாம்''

''அக்கா... இனியும் அட்ஜெஸ்ட் பண்ண முடியாது... சூடா ஏலக்காய் டீ போட்டுக்கொடுங்க...''

இருவரும் சிரிக்க, உரை யாடல் முற்றுப்பெற்றது.

''திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ம.தி.மு.க. இப்பவே துண்டு போடுது... மாநகர் மாவட்ட செயலர் நாகராஜூக்கு சீட் கொடுக்கணும்ன்னு தீர்மானம் நிறைவேத்தி வைகோவுக்கு அனுப்பியிருக்காங்க...''







      Dinamalar
      Follow us