ADDED : ஜூலை 20, 2024 09:55 AM

நான் பெர்சியன் லாங் ஹேர் பூனை வளர்க்கிறேன். மழைக்காலம் துவங்கியதில் இருந்து, சற்று சோர்வாகவே இருக்கிறது. இதை எப்படி பராமரிப்பது?- என்.கலைவாணி, கோவை.
பூனை மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு என்பதால், தட்பவெப்ப மாற்றத்தால் பாதிக்கப்பட்டு சோர்வாக இருக்கலாம். பொதுவாக மழைக்காலம் துவங்கிவிட்டால், பூனைகளை சற்று சூடான, கதகதப்பான இடத்தில் வைப்பது அவசியம். இளம் சூடான உணவு கொடுக்கலாம். உடல் முழுக்க முடி இருப்பதால், எக்காரணம் கொண்டும் மழையில் நனைய விட கூடாது.
காய்ச்சல், உடல் வெப்பநிலை குறைதல் போன்ற அறிகுறிகளால், பூனை சோர்வாக இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்வது அவசியம். சிலர், நாம் உட்கொள்ளும் 'பாரசிட்டமால்' மருந்துகளை, பூனைக்கும் கொடுத்து விடுகின்றனர். இம்மருந்து, எதிர்வினையாற்றி பூனையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். மேலும், நாய் உள்ளிட்ட பிற விலங்குகளுக்கான, மருந்துகளையும் பூனைக்கு கொடுக்கக்கூடாது.
- பி.பி.ஜிஸ்னா ஜமால்,கால்நடை மருத்துவர், கோவை.

