sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

எல்லாமே இருக்கு... ஆனா, உங்களுக்கல்ல!

/

எல்லாமே இருக்கு... ஆனா, உங்களுக்கல்ல!

எல்லாமே இருக்கு... ஆனா, உங்களுக்கல்ல!

எல்லாமே இருக்கு... ஆனா, உங்களுக்கல்ல!


ADDED : மார் 16, 2024 07:47 AM

Google News

ADDED : மார் 16, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கொளுத்துற கோடை வெயில்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தவியாய் தவிச்சிகிட்டு இருக்குறவங்களுக்கு ஓர் நற்செய்தி. ஏறத்தாழ 10 ஆயிரம் சதுர அடியில ஜாலியா ஒரு என்டர்டெய்ன்மென்ட் கேம்பஸ் கோவையில இருக்கு... வாங்க ஒரு தடவை போயிட்டு வரலாம்'னு கூப்பிடத்தான் ஆசை. ஆனா, அது உங்களுக்கு இல்லையாம்; செல்ல நாய்களுக்காம்...

என்னங்க... பொறாமையில வேர்க்குதா? உண்மைதாங்க!

'பெட் பாத்' சர்வீஸ், சம்மருக்கு ஆயில் பாத், வெரைட்டி புட்ஸ், ட்ரீட்ஸ், விளையாட பென்சிங்னு, செல்லப்பிராணிகளை குஷிப்படுத்தவே ஒரு பிரத்யேக வளாகத்தை நடத்துகின்றனர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி அன்பில் பிரியாள். கோவை, பி.என்.புதுாரில் கோவை பெட்ஸ் கார்னிவல் உள்ளது.

அங்கு நாம் விசிட் செய்தோம். பிளாக் வித் பிரவுன் கலர்ல ஷைனிங் ஹேர்ரோட ஸ்டைலா உடம்பை சிலுப்பிக்கிட்டே ஓனரோட ஒய்யாரமாக, லிப்ட்ல இருந்து வெளியே வந்துச்சு ஜெர்மன் ஷெப்பர்டு. இப்போ தான் ஸ்பா, ஸ்விம்மிங் முடிச்சிட்டு, ஹேப்பியா போறான் என்றார் சுரேஷ்.

மேலும் அவர் கூறுகையில், ''சம்மர் வந்துட்டா, ஸ்விம்மிங் புக்கிங் எகிறும். கிட்டத்தட்ட 25 அடி நீளம், 4 அடி அகலம், மூன்றரை அடி ஆழத்துல, பெட்ஸ் என்ஜாய் பண்ற மாதிரி, ஷவரோட ஸ்விம்மிங் பூல் இருக்கு. இங்க வந்தா ஒரு மணி நேரம், தண்ணில ஆட்டம் போடுவாங்க.

டைவ் அடிக்கிறது, ஜம்ப் பண்றதுன்னு, கைவசம் இருக்கும் மொத்த வித்தையும் டாக் காட்ட ஆரம்பிச்சிடும். ஓனரும் சேர்ந்து நீச்சலடிச்சு விளையாடுவாங்க. ஷோ வுக்கு போற டாக் நிறைய போஸ் கொடுக்க, ஸ்விம் பண்றது ரொம்ப முக்கியம். செஸ்ட், கால் வலியா இருந்தா, தெரபியாவும், டாக்டர்ஸ் அட்வைஸ் பண்றாங்க'' என்றார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒயிட் வித் பிளாக் கலர்ல, ஒரு சிட்ஜூ வந்துச்சு. தண்ணிய பாத்ததும் துள்ள ஆரம்பிச்சுடுச்சு. தொட்டியில இருந்த மொத்த தண்ணியையும் வெளியேற்றி சுத்தப்படுத்தி, மறுபடியும் நிரப்புனாங்க. 'இனி இந்த கைப்புள்ளய யாராலையும் கட்டுப்படுத்த முடியாது'ங்கற மாதிரி திமிறிக்கிட்டு தண்ணிய பார்த்ததும் தாவ ஆரம்பிச்சுடுச்சு அந்த சிட்ஜூ.

இதோட சேட்டைய பார்த்துட்டு மொட்டை மாடியில இருந்து கீழே இறங்கும் போதே, 'மியாவ்' சத்தம் கேட்டுச்சு. கதவை திறந்தால் ஷாம்பு நுரைக்குள் தலையை எட்டி பார்த்தபடி, மசாஜ்ஜில் பிசியாக இருந்தார் பூனையார்.

ஆச்சரியத்துடன் நாம், இங்க வேற என்னலாம் இருக்குன்னு கேட்டதும்,''குரூமிங், டிரைனிங், பெட் பாத் சர்வீஸ் இருக்கு. சம்மருக்கு, ஆயில் பாத் எடுக்க நிறைய பெட்ஸ் வரும். எல்லா வெரைட்டி புட்ஸ், ட்ரீட்ஸ், விளையாடுறதுக்கு பென்சிங், டிராவல் கேஜ், டிராவல் பேக், டாய்ஸ் கிடைக்கும். டாக் சேல் பண்றோம். 9,800 சதுர அடியில, கடை இருக்கறதால, பெட் ஓனர்ஸ் தேடுற எல்லாமே கிடைக்கும். பெட் கிளீனிக்கும் இங்க இருக்கறதால, டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ற எல்லா மருந்துகளும் வாங்கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us