உங்க லைப் ஸ்டைலுக்கு பப்பியை பழக்கணும்!: சொல்கிறார் சரத்குமார்
உங்க லைப் ஸ்டைலுக்கு பப்பியை பழக்கணும்!: சொல்கிறார் சரத்குமார்
ADDED : மே 11, 2024 10:18 AM

ஒபீடியன்ஸ், ஷோ ட்ரைனிங், மெயின்டனென்ஸ்னு பிசியா இருந்த, சென்னையை சேர்ந்த, டாக் ட்ரைனர் சரத்குமாரை, தொடர்பு கொண்டோம். சோசியல் மீடியால வர்ற பெட்ஸ் மட்டும், எப்படிங்க இவ்ளோ சமத்துக்குட்டியா இருக்குன்னு கேட்டதும், சிரிச்சிட்டே பேச ஆரம்பித்தார்.''பேசிக்கா எல்லா டாக்ஸூம், ட்ரைனிங் கொடுத்தா, ஒபீடியன்ட்டா நடந்துக்கும். பெட் ஓனர்ஸ் பண்ற, சின்ன சின்ன தவறுகளால தான், அது ஸ்ட்ரஸாகி அக்ரசிவ் ஆகிடுது. ஒரு பப்பி வாங்குறதுக்கு முன்னாடி, எந்த பர்ப்பஸ்காக, என்ன ப்ரீட் வாங்கணும்னு முடிவு பண்ணணும். அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கறவங்களுக்கு, 'டாய்' ப்ரீட் தான் பெஸ்ட்.
இதேமாதிரி பப்பியும், குழந்தையும் ஒண்ணு. தாய்ப்பால் குடிக்கற வரைக்கும், பீடிங் முடிஞ்ச, அடுத்த நொடியே, பப்பி 'ஒன் அண்டு டூ' போயிடும். சமைச்ச உணவு, ட்ரை புட்ஸ்னு எது சாப்பிட்டாலும், கொஞ்ச நேரத்துல, டாய்லெட் கூட்டிட்டு போனா, அதுவே பழகிக்கும். எங்க டாய்லெட் கூட்டிட்டு போகணும்னு, ஓனர் தான் முடிவு பண்ணணும். ஒரு வாரம் இதை பாலோ பண்ணிட்டா, வீட்டுக்குள்ள கண்ட இடத்துல, டாய்லெட் போகாது.பேசிக் வெக்சினேஷன் முடிஞ்சதும், மூணுல இருந்து நாலு மாசத்துல, ஒபீடியன்ஸ் ட்ரைனிங் தொடங்கிடணும். ஓனரோட ஆர்டருக்கு கீழ்படிய கத்து கொடுத்துட்டா, அது ப்ரெண்ட்லி பெட்டாகிடும்,'' என்றார்.
எதுக்கெல்லாம் ட்ரைனிங் கொடுப்பீங்க?
சிட், ரன், கேட்ச் மாதிரியான ஆர்டரால, எந்த பிரயோஜனமும் இல்ல. ஓனரோட லைப் ஸ்டைலுக்கு ஏத்தமாதிரி, அந்த பப்பிக்கு ட்ரைனிங் கொடுக்கணும். குடும்பத்துல ஒருத்தராவே மாறிடுறதால, எல்லா வெதர் கண்டிஷன், சவுண்ட்ஸ், மூவ்மென்ட்டுக்கும், பழக்கப்படுத்தணும். மார்னிங், ஈவினிங்ல, வாக்கிங் கூட்டிட்டு போகும் போது, தெருநாய்களை பார்த்தா குரைக்க கூடாது. ஓனர் மேல திடீர்னு ஜம்ப் பண்ண கூடாது. 'லீஸ்' கட்டியிருந்தாலும், மத்த டாக்ஸ பாத்ததும், தாவக்கூடாது. வீட்டுக்கு யார் வந்தாலும் அக்ரசிவ்வாகி குரைக்க கூடாது. இந்த மாதிரியான விஷயங்களுக்கு தான், ட்ரைனிங் ரொம்ப அவசியம்.
அதெப்படி, நீங்க சொல்றதை டாக் கேக்கும்?
முதல்நாளே இதெல்லாம் டாக் கேக்காது. அதோட சோசியலா பழகணும். வாரத்துல மூணு நாள் ட்ரைனிங் கிளாஸ் இருக்கும். அப்போ ஓனரும் கூடவே இருக்கணும். நான் சொல்ற கமெண்ட்ஸ, ஓனர் மூலமா தான் செய்ய வைப்பேன். கை அசைவு புரிஞ்சிக்கிட்டு, டாக் ரியாக்ட் பண்ண வைப்பேன்.
அப்புறம், சிக்னல், சவுண்ட்டுக்கும், டாக் பழகிடும். மார்னிங், ஈவினிங் சாப்புடுறதுக்கு முன்னாடி, கிளாஸ் தொடங்கும். ஒரு டாஸ்க் கொடுத்து சரியா செய்தா, கொஞ்சம் புட் கொடுப்பேன். பசியில இருக்கறதால, சாப்புடுறதுக்காவே, ஓனர் சொல்ற எல்லா ஆர்டருக்கும் ஒத்துழைக்க ஆரம்பிச்சிடும். கிளாஸ் முடியும் போது, புட் கொடுத்துட்டு, ப்ரீயா விட்டுடணும்.
என்கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கிட்ட பப்பிஸ், ஈஸியா மத்தவங்க கூட சோசியலாகிடும். ட்ரைனிங் பொறுத்தவரை, அப்டேட்ல இருந்தா தான், இந்த பீல்டுல நீடிக்க முடியும், என்றார்.உங்க பப்பிய சமத்துக்குட்டியாக்க, 95517 74900 எண்ணில் அழைக்கலாம்.