
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்க பப்பி பழங்களை பார்த்தாலே, பத்தடி துாரம் ஓடுதா? இப்படி செஞ்சி கொடுத்தா, புட் பவுல் உடனே காலியாகிடும். 100 கிராம் ப்ளூபெர்ரி, நான்கைந்து புதினா இலைகள், சிறிது யோகர்ட் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதை, வித்தியாசமான வடிவங்களுடன் கடைகளில் கிடைக்கும் சிலிக்கான் மோல்டில் நிரப்பி, இரவு முழுக்க, பிரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்கவும்.
அடுத்த நாள் காலையில், இதை எடுத்து, பப்பிக்கு கொடுத்தால், விரும்பி சாப்பிடும். மீதமுள்ளவற்றை காற்று புகாத பாட்டிலில் நிரப்பி, உணவுடன் சேர்த்து, அவ்வப்போது கொடுக்கலாம். ப்ளூ பெர்ரியில், பப்பியின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின்கள் இருப்பதால், ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது கைக்கொடுக்கும்.
கலர்புல்லா இருக்கேன்னு
டேஸ்ட் பண்ணிடாதீங்க!

