ADDED : மே 04, 2024 08:45 AM

பாய்ஸ், ஓவர் கோட் கழட்டுற மாதிரி ஒரு அம்மணி அசால்ட்டா, டாக்கோட ஹேர் கோட் கழட்டுற வீடியோ தான், இப்போ இன்ஸ்டா பேஜ் டிரெண்டிங் லிஸ்ட்ல இருக்கு. அடடே...ன்னு மனசு சொன்னதும், அந்த வீடியோ புரொபைல் பார்த்தோம். அட்ரஸ் விசாரிச்சோம். அது, கோவை, கவுண்டம்பாளையம். ஓனர் அகிலாவை சந்தித்தோம்...
வீட்டுல பண்ற பேசிக் குரூமிங் பற்றி கேட்டோம்... ஆர்வமாய் பேச தொடங்கினார். ஹேரி ப்ரிட் வளர்த்தா, டெய்லி சீவிவிடணும். இதுக்கு நீங்க வாங்குற பிரஷ், அதோட ஸ்கின் டேமேஜ் பண்ணாத மாதிரி இருக்கறது ரொம்ப முக்கியம். பப்பிஸ் கண்கிட்ட இருக்கற ஹேர ரெகுலரா ட்ரிம் பண்ணி விடணும். இல்லாட்டி, அந்த முடி கண்ணுல குத்தி, புண்ணாகிடும். வாரத்துக்கு ஒருமுறை நகம், பாதத்துல இருக்கற ஹேர ட்ரிம் பண்ணிவிடணும். இல்லாட்டி டைல்ஸ்ல வழுக்கி, அதோட கால் ஷேப் மாறிடும்.
குளிப்பாட்டும் போதெல்லாம், காத சுத்தப்படுத்தணும். இதுக்கு, டிராப்ஸ் கடைக்கள்ல கிடைக்குது. சம்மர் வந்துட்டதால, நிறைய பேர், ஜீரோ கட் பண்ண சொல்றாங்க. ஆனா, கொஞ்சம் ஹேர் இருக்கற மாதிரி ட்ரிம் பண்றதுதான், செல்லப்பிராணிகளோட ஹெல்த்துக்கு நல்லது. ஆனா, ஹேர்ல முடிச்சி விழுந்துட்டா, ஜீரோ கட் தான் பெஸ்ட். முடிச்சி விழுந்த ஹேர்ல, நேரடியா பிரஷ் போட்டு சீவிடாதீங்க. அது ரொம்ப வலிக்கும்.
செல்லப்பிராணிகளுக்கு ஹேர்கலரிங் புராடெக்ட்ஸ் இருக்கு. நம்ம யூஸ் பண்ற புராடெக்ட்ஸ், பெட்ஸ்க்கு செட்டே ஆகாது. பேசிக் குரூமிங் கோர்ஸ் படிச்சா, உங்க செல்லங்களை நீங்களே வீட்டுல அழகுபடுத்தலாம், என்றார் குரூமர் அகிலா.