ADDED : பிப் 17, 2024 08:35 AM

செல்லப்பிராணிகளை வெளியூர்களுக்கு ரயிலிலும் இனி அழைத்து செல்லலாம் என, ரயில்வே அறிவித்துள்ளது. ஏ.சி., அல்லது பர்ஸ்ட் கிளாஸ் கோச்சில் பெட்ஸை அழைத்து செல்ல முடியும். ஒருவருடன், ஒரு செல்லப்பிராணி மட்டுமே... இரண்டு சீட் கொண்ட 'கூப்பே' அல்லது நான்கு சீட் கொண்ட 'கேபினில்' பயணிக்கலாம். கேபினில், தனி டோர் இருப்பதால், மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாது.
பயணிப்பதற்கு முந்தைய நாளே, டிக்கெட் முன்பதிவு அலுவலகத்தில் பெட்ஸ் எடுத்து செல்வதற்கு அனுமதி கடிதம் கொடுக்கணும். அதில், ஓனர் விபரம், புறப்படும் இடம், சேரும் இடம் குறித்த விபரங்கள், செல்லபிராணி வயது, பிரீட் வகை, மெடிக்கல் சர்பிடிகேட் இணைக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் கிடைத்ததும், டிரெயின் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பார்சல் அலுவலகத்திற்கு சென்று, அங்கு செல்லப்பிராணியின் மருத்துவ சான்றிதழ், ஓனர் அடையாள அட்டை, முன்பதிவு செய்த டிக்கெட் ஆகியவற்றை கொடுத்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
பாத்ரூம் செல்ல பழக்கியிருந்தால் பிரச்னை இருக்காது. இல்லாவிட்டால், எந்தெந்த ஸ்டேஷனில், எந்த நேரத்தில், ட்ரெயின் நிற்கும் என்ற விபரங்களை தெரிந்து கொண்டு, ஒரு ஸ்டேஷன் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே உணவு கொடுக்கலாம். ட்ரெயின் நின்றதும் வெளியில் அழைத்து சென்றால் 'ஒன் அண்டு டூ' போய்விடும். இதற்கு பிரத்யேக 'பேட்'கள், கடைகளில் கிடைப்பதால் கவலை வேண்டாம்.