ADDED : நவ 09, 2024 09:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பப்பி, மியாவ் என எந்த செல்லப்பிராணியாக இருந்தாலும், அதோடு நேரத்தை செலவிட, பிசியாக வைத்திருக்க, சில பொம்மைகள் கொடுத்து விளையாடலாம். இந்த 'ஹிடன் டாய்ஸ்' , மார்கெட்டில் புதுவரவாக அறிமுகமாகியுள்ளது.
மிருதுவாக, குட்டி மெத்தை போல இருக்கும் இந்த பாக்ஸில், ஸ்டாபெர்ரி உருவ பொம்மைகள் இருக்கும். இதன் கீழ் பகுதியில் பப்பிக்கு பிடித்த ட்ரீட்ஸ், டாய்ஸ் ஒளித்து வைத்து, தேடி கண்டுபிடிக்குமாறு கூறலாம். பப்பியாக இருந்தால் அதன் மோப்பத்திறனை பயன்படுத்தி, ஒளித்து வைத்ததை எடுத்துவிடும்.
இதேபோல பூனைக்குட்டியும், ஒவ்வொரு பொம்மையாக எடுத்து, மியாவ் என கத்தியே கண்டுபிடித்துவிட்டதாக கூறும். இப்படி ஒவ்வொரு முறை தேடி எடுக்கும் போதும், அதன் முகபாவனையை ரசித்தபடி, பாராட்டி, உற்சாகப்படுத்தி விளையாடலாம்.