என் மனச கொள்ளையடிச்ச மஸ்தானி! சிலிர்க்கிறார் தேவேந்திரபிரதாப்
என் மனச கொள்ளையடிச்ச மஸ்தானி! சிலிர்க்கிறார் தேவேந்திரபிரதாப்
ADDED : ஜூன் 29, 2024 08:12 AM

''இளங்கன்று பயமறியாதுங்கற பழமொழி குதிரைக்கும் பொருந்தும். எப்பவும் எனர்ஜிடிக்கா இருக்கறதால, காலேஜ் படிக்கும் போதே, குதிரை மேல கிரேஸ் வந்துடுச்சு. ஆனா இது ரொம்ப காஸ்ட்லி. இப்போ பிசினஸ் பண்றதால, ஆறு குதிரை வாங்கிட்டேன். இதுல மஸ்தானி தான் என்னோட பேவரட்,'' என்கிறார், திருப்பூரை சேர்ந்த தேவேந்திரபிரதாப்.
உங்க மஸ்தானிய எங்க மீட் பண்ணீங்க--ன்னு கேட்டதும், சிலிப்போடு பேச ஆரம்பித்தார்.'' அது ரொம்ப சுவாரஸ்யமான கதை. ராஜஸ்தான் தான் அப்பாவோட பூர்வீகம். ஆனா, நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே திருப்பூர். நல்ல வனப்பான குதிரை வாங்க, ராஜஸ்தான் போனோம். வேற குதிரையை போட்டோல பார்த்து, ஓகே பண்ணிட்டோம். ஆனா குதிரை பண்ணைக்கு போனதும், மஸ்தானியோட கலர் எனக்கு ரொம்ப புடிச்சதால வாங்கிட்டு வந்துட்டேன். ஒன்றரை வயசுல வாங்கும் போது, மஸ்தானியோட விலை நாலரை லட்சம். இப்போ அதுக்கு மூன்றரை வயசாகுது.
ராஜஸ்தான்ல இருந்து நம்மூருக்கு வந்ததும், ரெண்டு மூணு நாள்லயே, என்னோட ரொம்ப அட்டாச் ஆகிடுச்சு. டெய்லி மார்னிங், ஈவினிங் சவாரி போவோம். நான் ஏறி உட்கார்ந்தா, என்னோட மைண்ட் செட்டுக்கு ஏத்தமாதிரி ஓடுவா. என்னோட எல்லா பீலிங்சும் அவளுக்கு புரியும். ஜாலியா இருந்தா, சீறிபாயும். டயர்டாவோ, சோகமாவோ இருந்தா, ரொம்ப மெதுவா ஓடும். இதெல்லாம் தான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.
மஸ்தானியோட டெய்லி ஆக்டிவிட்டி?
இது, மார்வாரி ப்ரீட். ரொம்ப எனர்ஜிடிக்கானது. டெய்லி குரூம் பண்ணிவிடுவோம். இதோட இடத்துல நடந்துக்கிட்டே இருக்கும். மார்னிங், ஈவினிங் ரெய்டு போகும். பச்சை புல் விரும்பி சாப்பிடும். நிறைய தண்ணீர் குடிக்கும். இதுக்கு, ஈஸியா செரிக்கற மாதிரியான புட் கொடுக்கணும். வயிறுவலி வராம பாத்துக்கணும். லாடம் மாத்திட்டே இருக்கணும். மத்தப்படி பெருசா மெனக்கெட வேண்டியதில்ல.
என் ப்ரெண்ட்ஸ், பேமிலி மெம்பர்ஸ, மஸ்தானிக்கு நல்லா தெரியும். அவங்ககிட்டயும் சாதுவா நடந்துக்குவா. வெளியாட்களை தொட கூட விட மாட்டா. வெளியூருக்கு போயிட்டு வந்தா, சத்தம் போட்டு கூப்பிட்டு, மிஸ் பண்ணதை வெளிப்படுத்துற மாதிரி, முகத்தோட முகம் வச்சி கொஞ்சுவா. இதனாலயே மஸ்தானிக்கு என் மனசுல தனி இடம் இருக்கு.