ADDED : மே 11, 2024 10:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரும்பு திங்க கூலியாங்கற மாதிரி,கத்திரி வெயில் அடிக்கிற இந்த டைம்ல, ஊட்டில இன்னைக்கும், நாளைக்கும், டாக் ஷோ நடத்துறாங்க,'தி சவுத் ஆப் இண்டியா கென்னல் கிளப்'.ஊட்டி டாக் ஷோக்கு தனி மவுசு இருக்கு. இங்க, டைட்டில் அடிக்கிற பெட் பத்தி தான், ஊரே பேசும் என்கின்றனர் பெட் லவ்வர்ஸ்.
இன்னைக்கு நடக்குறது, 135 வது, டாக் சேம்பியன் ஷோ. இதுக்கு, பிலிப்பைன்ஸை சேர்ந்த மேரியோ மாக்சேசேவும், நாளைய ஷோக்கு,தைவான்ல இருந்து அலெக்ஸ் ஜீ-ம் நடுவர்களா இருப்பாங்க. 52 வகை ப்ரீட்ஸ்ல இருந்து, 450 டாக்ஸ் பங்கேற்கறதால, போட்டியும் ரொம்ப 'டப்'பா இருக்கும். இதை பார்க்க வருவோருக்கு, நுழைவுக்கட்டணம் உண்டு. கூடுதல் தகவலுக்கு, www.dogsnshows.com வெப்சைட்ட பார்வையிடலாம்.