ADDED : பிப் 15, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டுக்குள்ள சமத்துக்குட்டியா இருக்கற உங்க பப்பி, வெளியில போனா சொல்பேச்சு கேக்குறதில்லையா... ஒருத்தனை சமாளிக்கறதே பெரிய சிரமமா இருக்கும் போது, ரெண்டு வான்டு செல்லங்கள் இருந்தால், ஷிப்ட் முறையில் வாக்கிங் கூட்டிட்டு போறதுக்குள்ள, நீங்களே டயர்ட் ஆகிடுறீங்களா? இனி அந்த கவலை இல்லை.
இரு 'லீஷ்' இணைக்கப்பட்ட ஒரு வாக்கிங் ஹேண்டுலர், மார்கெட்டில் கிடைக்கிறது. இரு லீஷ் கன்ட்ரோலரும் இதில் இருப்பதால், குறிப்பிட்ட துாரத்திற்கு மேல், பப்பியால் தாவி ஓட முடியாது. ஓரிரு நாட்கள் பழக்கப்படுத்தினால், இரு பப்பிகளும் சேர்ந்து நடக்க கற்று கொள்ளும். இரு கைகளிலும் தனித்தனியாக பப்பியின் கயிற்றை பிடித்து கொண்டு நடக்க தேவையில்லை. இது, கடைகளிலும், ஆன்லைனிலும் கிடைப்பதால், உடனே வாங்கிடுங்க.