ADDED : ஆக 10, 2024 11:05 AM

என் குட்டீஸோட சேர்ந்து ரூகியும், லியாவும் பண்ற சேட்டைக்கு அளவே இல்லை. இவங்க இல்லாம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது, என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா.
தன்னோட செல்லப்பிராணிகள் பற்றி பகிர்ந்தவை: என் கணவர் ராஜேஷ் பாரஸ்டர். காட்டுக்கு அவர் காவல்னா, எங்க வீட்டுக்கு, ரூகியும், அவள் மகள் லியாவும் காவல். ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் (ரூகி) வாங்குனோம். ரொம்ப பிரெண்ட்லியான டாக். என்ன சொன்னாலும் கேட்கும். வீட்டுக்கு புதுஆட்கள்யாரும் உள்ள வர்ற முடியாது. கண்ணும் கருத்துமா எங்களை பாத்துக்கும். அதே சமயம், என் பொண்ணுங்களோட (மவுரியா, 12 மற்றும் தேஷ்விஹாரா, 2) சேர்ந்து விளையாட ஆரம்பிச்சா, சேட்டைக்கு அளவே இருக்காது. கண்ணாமூச்சி, ஓடி புடிச்சு விளையாடுறது, பந்து போட்டு கேட்ச் புடிக்கறதுன்னு ஈவினிங் ஆகிட்டா, ஜாலியா விளையாடிட்டே இருப்பாங்க.இவங்க சேட்டையை ரசிச்சு பார்த்துட்டு இருப்பேன்.
கொஞ்ச நேரம் என் குரல் கேட்கலைன்னாலும், வீட்டையே சுத்தி சுத்தி வருவாங்க. என்னை மாதிரியேரூகி ரொம்ப பொறுப்பானவ. அவளோட பப்பி லியாவை நல்லா பாத்துக்குவா. இவங்க ரெண்டு பேருக்கும், தனித்தனியா கூண்டு இருந்தாலும், எங்களோட தான் துாங்குவாங்க. என் பொண்ணுங்க டாய்ஸ் வாங்குனாகூட, ரூகி, லியாவுக்கும் தனி லிஸ்டே போடுவாங்க. அவ்ளோ அட்டாச் ஆகிட்டாங்க. செல்லப்பிராணிகள் நம்ம மேல காட்டுற அன்பை, வார்த்தைகளால சொல்லி விவரிக்க முடியாது என,நெகிழ்ச்சியோடு பேசினார்.

