ADDED : ஜூன் 15, 2024 08:26 AM

நாட்டுக்கு ஒரு ராஜா மாதிரி, டேங்குக்கு ஒரு பிளவர்ஹார்ன் தான் வளர்க்க முடியும் என, அதிரிபுதிரியாய் ஆரம்பித்தார், கோவை, ஏஞ்சல் அக்குவாரியம் பெட் ஓனர் சுரேஷ். ஆரம்பமே அசத்தலா இருக்கே என்றதும், தரையில் போட்ட மீன் போல, துள்ளலோடு பேச ஆரம்பித்தார்.
நிறைய பிஷ் வெரைட்டி இருக்கு. இதுல, சில வெரைட்டியை, எவ்ளோ விலை கொடுத்தும் வாங்கி வீட்டுல வளர்க்க, பெட் லவ்வர்ஸ் விரும்புவாங்க. அந்த வரிசையில முன்னணியில இருக்கறது பிளவர்ஹார்ன்.
ரெட், ஆரஞ்ச், ப்ளூ, கிரீன்னு மல்டி கலர்ல, யுனிக்கான காமினேஷன்ல இருக்கறதால, பாக்குறதுக்கே ஷைனிங்கா இருக்கும். தண்ணீயில நீந்துனா, ரசிச்சிட்டே இருக்கலாம். மண்டை மேல இருக்கற கொண்டை தான், இதோட அழகே. அது எந்த அளவுக்கு வளருதோ, அந்த அளவுக்கு செல்வமும் வளரும்ணு, பிஷ் லவ்வர்ஸ் நம்புறாங்க.
'மேல்' பிளவர் ஹார்ன் அதிகபட்சமா 30 செ.மீட்டரும், 'பீமேல்' பிஷ், 15 செ.மீ., வரைக்கும் வளரும். இதோட டேங்கில் மோட்டார் கட்டாயம் செட் பண்ணணும். நல்ல புட், மெயின்டனென்ஸ் இருந்தா, 12 வருஷம் வரைக்கும் வாழும். ஆனா, இது வளரும் போது விளையாடுறதுக்கு ஏத்தமாதிரி, டேங்க் பெருசா வைக்கணும்.
ஒரு டேங்குல ஒரு பிளவர்ஹார்ன் தான் வைக்கணும். இது ரொம்ப கோவக்காரன். மத்த மீனை புடிச்சி சாப்பிடும். ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகிடும். இதோட டேங்க் வெளிய கை நீட்டுனா, ஹாய் சொல்ல வர்ற மாதிரி, வேகமா வந்து பப்பிள்ஸ் விடும். இதை பார்த்தாவே, குட்டீஸ் குஷியாகிடுவாங்க.
2 செ.மீ., சைஸ்ல இருக்கற ஒரு பிளவர்ஹார்ன் வெறும் 150 ரூபாய் தான். குட்டியா இருக்கும் போது, தனியா பவுல்ல வச்சியும் வளர்க்கலாம்.

