sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா

 கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா

 கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா


ADDED : மே 23, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 07:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்லப்பிராணிகளை கொஞ்ச, அதன் திறமையை ரசிக்க, அவற்றுடன் நேரம் செலவிட, கோவையில் இன்றும், நாளையும் நடக்கிறது செல்லப்பிராணிகள் திருவிழா.

சரவணம்பட்டி, புரோசோன் மாலில், ஐபாஸ் அமைப்பு சார்பில், 2 வது செல்லப்பிராணி திருவிழா, இன்றும் (மே 23ம் தேதி), நாளையும் நடக்கிறது. உடல் முழுக்க மென்மையான முடிகளுடன், ஒய்யாரமாக நடந்து வரும் வித்தியாசமான வெளிநாட்டு இன பூனைகள், அபார திறமையால் சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் நாய்களுக்கு பிரத்யேக கண்காட்சி நடக்கிறது. மேஜிக் ஷோ, குட்டீஸ்களுக்கு ஓவியப்போட்டி என, மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பஞ்சமிருக்காது. கால்நடை மருத்துவர்களின் கருத்தரங்கு இருப்பதால், செல்லப்பிராணிகளை பற்றிய சந்தேகங்களையும் கேட்டறியலாம்.

தொடர்ந்து நாளை, இந்தியாவின் ஒபீடியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்ற பப்பியின் சேட்டைகளை கண்டு ரசிக்கலாம். எப்படி பப்பிக்கு பயிற்சி அளிப்பது என்பது குறித்து தொழில்முறை பயிற்சியாளர் ஷெமீக் செயல்முறை வாயிலாக விளக்குகிறார்.

நாய், பூனை மட்டுமல்ல, புளோரான், கப்பீஸ், பீட்டர் இன மீன்களுக்கும் பிரத்யேக கண்காட்சி போட்டி உண்டு. குதிரை, ஒட்டகம், புங்கனுார் குட்டை மாடு, ஆடுகளை காணலாம். இங்கே வருவோர் டாட்டூ, மெஹந்தி இலவசமாக போட்டு கொள்ளலாம். இதில் உங்கள் செல்லப்பிராணியும் பங்கேற்க விரும்புவோர், 98422 30865 என்ற எண்ணிலும், www.ipaws.co இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us