ADDED : மார் 23, 2024 02:04 PM

தென்னந்தோப்புக்கு நடுவே, சிட்டியோட பரபரப்பு, வண்டிகளோட ஹாரன் சத்தமே இல்லாம, ரம்மியமாய் காட்சியளிக்கிறது, 'பா வில்லேஜ்- போர்டிங் அண்டு ஸ்பா'. கோவை, பன்னீர்மடை அருகே, கிட்டத்தட்ட 30 சென்ட் இடத்துல, ஏசி ஹால், குரூமிங் சென்டர், பிளே ஏரியா, பிரைவேட் ரூம்னு, கென்னல்ல இருக்க ஹைடெக் வசதிகளை அடுக்கினார், ஓனர் ஹரீஷ்.
'' நான் பேசிக்கா டாக் லவ்வர். வீட்டுல, 5,6 டாக்ஸ் இருக்கும். வெளியூருக்கு போகும் போதெல்லாம், யார்கிட்ட நம்பிக்கையா விடுறதுங்கறதுல தான் போராட்டமே தொடங்குச்சு. டாக் டிரெய்னிங், ப்ரீடிங்னு இந்த துறையில, 23 வருட அனுபவம் இருந்ததால, பெட் பேரண்ட்ஸோட விருப்பத்தை பூர்த்தி செய்ற மாதிரி, கென்னல் உருவாக்கியிருக்கேன்.இங்க, ஒவ்வொரு ப்ரீடுக்கும் தனித்தனி ரூம், ஏசி ஹால், குரூமிங் சென்டர், பிளே ஏரியான்னு, நிறைய வசதிகள் அமைச்சிருக்கேன். வெளியூர்களுக்கு செல்வோர், தங்களின் செல்லப்பிராணியை நம்பி விடலாம். மூணு டாக்டர்ஸ் சுழற்சி முறையில வந்து, டாக் ஹெல்த் ரிப்போர்ட் செக் பண்ணுவாங்க'' என்றார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே, வெல்வெட் கலர்ல ஒரு விப்பட் டாக், கார்ல இருந்து ஒய்யாரமாய் இறங்குச்சு. ஓனரிடம் இருந்து ஓடி வந்து, ஹரீஷ்க்கு ஹாய் சொல்லிட்டு, நாலு கால் பாய்ச்சலில் பிளே ஏரியாவுக்குள் போனது. ரெகுலர் கஸ்டமர்தாங்கன்னு சொல்லிட்டு, நம்மோடு பேச்சை தொடர்ந்தார்.
''இங்க 20 டாக் தங்குற அளவுக்கு வசதி இருக்கு. வீட்டுக்கே சென்று குரூமிங் செய்றோம். கென்னல்லயும் குரூமிங், ஸ்பா சென்டர் இருக்கு. நீண்ட நாட்கள் தனியா செல்லப்பிராணியை விடுறபட்சத்துல, போர்டிங் வர்றதுக்கு முன்னாடி, வீட்டுக்கே போய், அறிமுகம் ஆகிடுவோம். அவங்க வீடு, சுற்றுச்சூழல், 'டாக்' ஹெல்த் ரிப்போர்ட், புட் மெனு தெரிஞ்சிக்கிட்டு, அடிக்கடி மீட் பண்ணி, அதோட நட்ப வளத்துக்கிட்டு, அப்புறம் தான் கென்னல்ல தங்க வைப்பேன். இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் ரொம்ப மெனக்கெடுறதால தான், பிக்னிக் வர்ற மாதிரி, டாக்ஸ் ஜாலியா என்ஜாய் பண்றாங்க,'' என்றார் ஹரீஷ்.
அது சரி, வூட்டுக்கு போகமாட்ேடன்னு டாக் அடம்பிடிச்சா, ஓனர் என்னா பண்ணுவாராம்?

