ADDED : ஜன 27, 2024 09:21 AM

வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 'வாட்ஸ் ஆப்'பில் 'டெக்ஸ்ட்' பண்ணுங்க; அல்லது, 'வாய்ஸ் நோட்' அனுப்புங்க.... உங்கள் கருத்தறிய ஆர்வமுடன் காத்திருக்கிறோம்!
'தினமலர்' நாளிதழில் வெளியான செல்லமே பக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. படிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வீட்டின் செல்லத்தையும் கூடுதலாக கவனித்துக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மோகன், எஸ்.வி.புரம், உடுமலை.
எங்கள் வீட்டின் குட்டிசெல்லம் செய்யும் குறும்புகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோல் செல்லபிராணிகளின் மீதான பலரின் அன்பையும், அரவணைப்பையும் 'தினமலர்' செல்லமே பக்கத்தின் வாயிலாக பார்க்க முடிகிறது. செல்லபிராணிகளின் வளர்ப்பு குறித்த டிப்ஸ்களும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிப்பதற்கு ஆர்வமாக உள்ளோம்.
உமா, ஓலபாளையம், உடுமலை.
உங்களின் விவரம்!
செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை அனுப்பலாம்.
மொபைல்: 98940 09310

