தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/படிப்பில் கவனத்தை அதிகரிக்க எளிய வழிகள்

படிப்பில் கவனத்தை அதிகரிக்க எளிய வழிகள்

படிப்பில் கவனத்தை அதிகரிக்க எளிய வழிகள்


UPDATED : அக் 10, 2026 12:38 PM

ADDED : அக் 10, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:38 PM ADDED : அக் 10, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

படிக்கும் போது கவனம் சிதறுவது பல மாணவர்களுக்கு இயல்பாக நடக்கும் ஒன்று தான். புத்தகம் முன்னால் இருந்தாலும் மனம் வேறு எங்கோ யோசித்துக் கொண்டிருப்பது போன்ற கவனச் சிதறல்கள் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

இன்றைய சூழலில் செல்போன், சமூக வலைதளங்கள் என பல விஷயங்கள் கவனத்தை எளிதில் ஈர்த்துவிடுகின்றன. ஆனால், சில எளிய பழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம் படிப்பில் முழு கவனத்தையும் மாணவர்களால் கொண்டுவர முடியும்.

இடைவெளி



முதலாவதாக, ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து படிப்பதற்குப் பதிலாக, நேரத்தைப் பிரித்துப் படிப்பது நல்லது. உதாரணமாக, 20 அல்லது 25 நிமிடங்கள் படித்துவிட்டு, ஒரு 5 நிமிடம் சிறிய இடைவெளி எடுக்கலாம். அந்த நேரத்தில் எழுந்து கொஞ்ச தூரம் நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது உடலை லேசாக ’ஸ்ட்ரெட்ச்’ செய்யலாம். சிறிய நடைபயிற்சியும், அசைவுகளும் மூளைக்கு ரத்த ஓட்டத்தை வழங்கி, சோர்வை நீக்கி மீண்டும் படிக்க புதிய ஆற்றலைத் தரும்.

'மெமரி கேம்ஸ்’



கவனமும், நினைவாற்றலும் பயிற்சி செய்யச் செய்ய வளரக்கூடியவை தான். படிக்கும் போது நம் மனம் அலைபாய்கிறதா என்பதை நாமே அவ்வப்போது கவனித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை கவனம் வேறு எங்காவது போனால், அதை உணர்ந்து மீண்டும் பாடத்தின் மீது கவனம் செலுத்த பழக வேண்டும். இது தவிர, மூளைக்கு வேலை தரும் சிறு புதிர்கள் அல்லது ’மெமரி கேம்ஸ்’ போன்ற விளையாட்டுகளை ஓய்வு நேரத்தில் விளையாடுவதும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.

தேவையான புத்தகம் மற்றும் பேனா



படிக்கும் இடம் அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது முக்கியம். நாம் உட்காரும் மேஜையில் தேவைக்கு அதிகமான பொருட்கள், தேவையில்லாத காகிதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக செல்போன் போன்றவை இருந்தால் கவனம் எளிதில் திசைமாறும். அதனால், படிப்பதற்குத் தேவையான புத்தகம் மற்றும் பேனாவை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையில்லாத கவனச்சிதறல்களை விலக்கி வைப்பது நல்லது.

இதைத் தவிர, ஒரு பெரிய அத்தியாயத்தை மொத்தமாக ஒரே நேரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் சலிப்பாக இருக்கும். அதற்குப் பதிலாக, அந்தப் பாடத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் படிக்கலாம். ஒரு சிறிய தலைப்பை முடித்துவிட்டு அடுத்த பகுதிக்கு செல்லும் போது படிப்பு எளிதாகத் தோன்றும். புரியாத கடினமான பகுதிகளை நண்பர்களுடன் சேர்ந்து விவாதித்துப் படிப்பதும் பாடத்தை எளிதில் புரிந்துகொள்ள உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us