தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/மதிப்பெண் குறைந்தால் திட்டுவதா? பெற்றோர் அறிய வேண்டியவை

மதிப்பெண் குறைந்தால் திட்டுவதா? பெற்றோர் அறிய வேண்டியவை

மதிப்பெண் குறைந்தால் திட்டுவதா? பெற்றோர் அறிய வேண்டியவை


UPDATED : அக் 10, 2026 12:38 PM

ADDED : அக் 10, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:38 PM ADDED : அக் 10, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி மற்றும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் காலகட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என இருவருக்குமே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை.

எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால், ஒரு மாணவரின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை என்பதை பெற்றோரும், மாணவர்களும் உணர வேண்டும்.

நிதானமும் அமைதியும்…



தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே கோபத்தையோ, கடுமையான அதிருப்தியையோ பிள்ளைகளிடம் காட்டுவது பெரும் தவறு. பெற்றோரின் கோபமும் நீண்ட நேர மௌனமும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். மதிப்பெண் குறைந்ததை விட, பெற்றோரின் எதிர்மறையான வெளிப்பாடு தான் எப்போதும் குழந்தைகளின் நினைவில் நிற்கிறது.

முடிவுகள் எதிர்பார்த்ததைப் போல் இல்லை என்றாலும், பெற்றோர் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். பெற்றோர் எப்பொழுதும் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பதை தெரிவிக்க வேண்டும். அதிகமாக அறிவுரைகளை வழங்குவதற்கோ, திட்டுவதற்கோ பதிலாக, பிள்ளைகளின் மனநிலைக்குப் பெற்றோர் செவிசாய்க்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்து அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். அவர்களின் பயம், அழுகை, வருத்தம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முழு சுதந்திரம் தர வேண்டும்.

குழந்தைகளைப் பற்றிய எந்தவித கணிப்பும் இல்லாமல், பொறுமையாகக் கேட்பதே அவர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆறுதலாகும். நீ கடுமையாக உழைத்தாய், முடிவு என்னவாக இருந்தாலும் உன்னுடைய முயற்சிக்கு என் பாராட்டு உண்டு போன்ற வார்த்தைகள் மாணவர்களுக்கு மேலும் ஊக்கம் அளித்து, மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும்.

ஒப்பிட்டுப் பேசுவது…



பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய பிழை, தங்கள் பிள்ளைகளை வேறு பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது தான். அவனை பார், எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறான், உன்னால் ஏன் முடியவில்லை? என்று கேட்பது மிகவும் தவறான செயல். ஒப்பிட்டுப் பேசுவது மாணவர்களின் தன்னம்பிக்கையை அழித்துவிடும்.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை, கற்கும் வேகம் மற்றும் ஆர்வமுள்ள துறை உண்டு. அனைவருமே படிப்பில் மட்டுமே முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தற்காலிகத் தோல்வி வாழ்க்கையின் முடிவல்ல, என்பதைப் பெற்றோர் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான குடும்பச் சூழலே மாணவர்களை திறமையாக செயல்பட வைக்கும் என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us