ADDED : ஆக 29, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க ட்டளைக்கு அன்புடன் கீழ்படியும் உங்கள் பப்பியை பாராட்ட அவ்வப்போது நொறுக்ஸ் கொடுத்தால் புத்துணர்வாகிவிடும்.
விதை நீக்கப்பட்ட மஞ்சள்பூசணி, வேர்கடலையை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் இக்கலவையை ஒன்றாக சேர்த்து இரு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். ஓட்ஸ் பவுடர் சேர்த்து, ஒரு ஸ்பூன் பட்டை பவுடர், இரு ஸ்பூன் தேன் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் இதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மைக்ரோவேவ் ஓவனில், 350 டிகிரி செல்சியஸில், 30 நிமிடங்கள் வைத்தால், ஸ்நாக்ஸ் ரெடி. இதேபாணியில், மஞ்சள் பூசணிக்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள் அல்லது உங்கள் பப்பிக்கு பிடித்த காய்கறி, பழங்கள் சேர்த்தும், நொறுக்ஸ் தயார் செய்யலாம்.