ADDED : அக் 25, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்கள் மீது அளவில்லாத அன்பை பொழியும் பப்பிக்கு, பிடித்த கேக் செய்து கொடுத்து அசத்துங்க. இதற்கு தோல் நீக்கிய இரு வாழைப்பழங்கள், அரை கப் பீனட் பட்டர், துருவிய இரு கேரட், இரு முட்டை ஆகியவற்றை கூழ் பதத்திற்கு கலக்கி கொள்ள வேண்டும். இதில், ஒரு கப் ஓட்ஸ் பவுடர், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் நிரப்பவும். இதை, மைக்ரோவேவ் ஓவனில், 180 டிகிரி செல்சியஸில், 30 நிமிடங்கள் வரை வைத்தால், கேக் தயாராகிவிடும். இதன்மீது, கிரீக் யோகட் மற்றும் பீனட் பட்டர் கலந்த கலவையை, க்ரீம் போல தடவி, பப்பி பிஸ்கட், ட்ரீட்ஸ் ஆகியவற்றை கொண்டு அழகுப்படுத்தி, உங்க செல்லத்துக்கு சர்ப்ரைஷ், கொடுக்கலாம்.
இது பப்பி கேக்; மறந்து கூட சாப்பிடாதீங்கோ!