ADDED : ஜன 21, 2024 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கள் வீட்டில் பூனைகள் வளர்க்கிறோம். இரண்டும் 'கிரே' நிறம். அதில், ஒன்று அரிய வகையான புளூகிரே நிறம். இவை குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகும். பூனைகளுடன் விளையாடுவது தான், அவர்களின் பொழுதுபோக்கு.
பெர்சியன் வகை பூனை வாங்கியவுடன் இரு மாதங்களுக்கு பின், கால்நடை மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து, மருந்து, பவுடர், அதன் சிறப்பு உணவு வகைகளை டாக்டர் பரிந்துரையின் படி வழங்கி வருகிறோம். அதன் பராமரிப்புக்கென நேரத்தை செலவிடுகிறோம். பூனைகளும் எங்கள் வீட்டின் முக்கியமான உறுப்பினர்கள்.
- முகமதுகனி, ஊட்டி.

