sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சிந்திப்போமா

/

 சலசலத்து போன இண்டி கூட்டணி முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

/

 சலசலத்து போன இண்டி கூட்டணி முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

 சலசலத்து போன இண்டி கூட்டணி முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

 சலசலத்து போன இண்டி கூட்டணி முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு


ADDED : பிப் 17, 2026 05:59 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: தமிழகத்தில் இண்டி கூட்டணி சலசலத்து ஆடிப்போய் நொண்டி கூட்டணியாக உள்ளது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி நிர்வாகம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 ஆண்டு தூங்கிவிட்டு தற்போது ஆட்சி முடிகிற நிலையில் தூக்கம் வராமல் மகளிர் உரிமைத் தொகையை சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கியிருப்பது தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதேபோன்று ஏற்கனவே 5 மாநிலங்களில் செய்தது தோல்வியைத்தான் கொடுத்தது.

கடந்த 5 ஆண்டுகளிலும் கோடை வந்தது, அப்போது ஏன் வழங்கவில்லை. இது மக்களை ஏமாற்றுகிற வேலை. ஒட்டுமொத்த இண்டி கூட்டணியே ஆடிப் போய் சலசலத்து உள்ளது.

அங்குள்ள கூட்டணி கட்சியினர் நாங்கள் உழைத்து தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டுமா என கேள்வி கேட்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணியாக, விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இண்டி கூட்டணி நொண்டி கூட்டணியாக மாறிக் கொண்டிருக்கிறது.

அரசியலில் விஜய்க்கு அனுபவம் பத்தாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை.

கருணாநிதி தலைமையில் மைனாரிட்டி அரசு தான் இருந்தது, கூட்டணி ஆட்சி கிடையாது.

நடிகர் விஜய் தமிழ்நாட்டை காப்பாற்றுகிறாரோ, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது ஆபத்துன்னு ஓடி வருகிறாரோ இல்லையோ, அவரைப் பார்க்க வருபவர்கள் செத்துப் போகாமல் இருப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க முன்வருவாரா.

அரசியல் களத்தில் பின்தங்கி உள்ளார். களத்தில் இருக்கிற மாதிரி காட்டிக் கொள்கிறார். காலமும் மக்களும் அதற்கு தீர்ப்பு கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us