
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெ ளிநாட்டு ரக வெள்ளை எலியை (ஹாம்ஸ்டர்) செல்லப்பிராணியாக வளர்க்கிறீர்களா? அவை, எந்நேரமும் கொறிக்கும் வகையிலும், விளையாடவும், மரத்தால் செய்யப்பட்ட நிறைய விளையாட்டு பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன.
ஹாம்ஸ்டர் வைத்திருக்கும் கூண்டிற்குள், ஏணி போல சறுக்கி விளையாடும் பொம்மையை மாட்டிவிடலாம். சக்கரம் போல சுழலும் ரோலரை வாங்கினால், அவை உருட்டி கொண்டே விளையாடும். இதேபோல அவை கொறிப்பதற்கும் சில விளையாட்டு பொருட்கள் உள்ளன. இதையெல்லாம் உங்க செல்லத்துக்கு வாங்கி கொடுத்து அசத்துங்க.