
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''எங்க சிஸ்லி பம்ப்கின், ஸ்வீட் பொட்டட்டோ, குச்சி கிழங்குன்னு வெஜ் ஐட்டமா விரும்பி சாப்பிடும்.
நான்வெஜ் விட, முட்டைன்னா அவ்ளோ பிரியம். டாய்ஸ் மட்டும் கொடுத்துட்டா, ஒரு நாள் பூரா விளையாடிக்கிட்டே இருக்கும்,'' என தன் பெட் சிஸ்லி பற்றி சொல்கிறார் கோவையைச் சேர்ந்த சிந்து.
'' நான் ஒரு பெட் லவ்வர்ங்க, வீட்ல லவ் பேர்ட்ஸ், பிஷ் நெறைய வளர்க்குறோம். இது சிட்சு வகை பிரீட், 11 மாசம்தான் ஆகுது. ரொம்ப பொசசிவ்வா இருப்பா. ஜம்ப், ப்ளே, ரன் இந்த மாதிரி கமெண்ட் கொடுத்தா, சிஸ்லி ஈஸியா புரிஞ்சுக்கும். மம்மு ரெடின்னா சில்ஸி சிட்டா பறந்து வந்துடுவா,'' என்கிறார் சிந்து.

