ADDED : பிப் 17, 2024 08:29 AM

ரஜினியும், சிகப்பியும் படைத்தளபதிகள். மற்ற நான்கு நாய்களையும் இவங்க தான் வழிநடத்துவாங்க என்கிறார், கோவையை சேர்ந்த பேஷன் டிசைனர் ஷோபனா.
ஒரு பெட் வளர்க்கணும்னு ஆசைப்பட்டா அதுக்காக நேரம் செலவிடணும், பராமரிக்கணும். வெளியூர் சென்றால் கூட அவங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யணும். நீங்க எப்படி 6 நாய்கள் வளர்க்குறீங்கன்னு கேட்டதும் சிரித்தபடியே ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தார்.
''சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை என, பாரம்பரிய நாட்டு ரக நாய்களை வளர்க்கறதால, பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அவங்களுக்குள்ளே விளையாடிக்குவாங்க; சண்டை போட்டுக்குவாங்க. வெளியாட்கள் யாரையும் நெருங்க விடமாட்டாங்க.
இதில ரஜினியும், சிகப்பியும் படைத்தளபதிகள் மாதிரி, மற்றவங்கள வழிநடத்துவாங்க. என்னோட பலமே இந்த ஆறு பேரும் தான். பெட் வளர்க்கறது உணர்வு ரீதியான அனுபவம்.
ஒருமுறை பழகிட்டா, அவங்க அன்பை உணர ஆரம்பிச்சிட்டா,
பிரியவேமுடியாது,'' என மலர்ச்சியோடு பேசினார்.