sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

ஆளுங்கட்சிக்கு 'ஷாக்' குடுத்த உளவுத்துறை!

/

ஆளுங்கட்சிக்கு 'ஷாக்' குடுத்த உளவுத்துறை!

ஆளுங்கட்சிக்கு 'ஷாக்' குடுத்த உளவுத்துறை!

ஆளுங்கட்சிக்கு 'ஷாக்' குடுத்த உளவுத்துறை!


UPDATED : ஏப் 30, 2024 05:10 AM

ADDED : ஏப் 29, 2024 11:48 PM

Google News

UPDATED : ஏப் 30, 2024 05:10 AM ADDED : ஏப் 29, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக கலெக்டர் அலுவலகம் வந்திருந்த சித்ரா, கேன்டீன் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

தேர்தல் பிரிவுக்குச் சென்று திரும்பிய மித்ரா, ''உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிறது மாதிரி, கட்சிக்காரங்களுக்கு எலக்சன்ல தோற்றால் மட்டுமே இடி கிடைக்கும்; ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ், அதிகாரிகளுக்கு, யாரு ஜெயிச்சாலும், தோத்தாலும் சென்ட்ரல் கவர்மென்ட் அல்லது ஸ்டேட் கவர்மென்ட்டுன்னு, ஏதாவது ஒரு பக்கம் இடி விழும்னு பேசிக்கிறாங்க,''

''இதுல, வேறெந்த ஆபீசருக்கும் வராத டென்ஷனும், பிரஷரும் நம்மூர் ஆபீசருக்கு வந்திருக்கு. எலக்சன்ல ஆளும்கட்சி நினைச்சதை செய்றதுக்கு, சில விஷயங்கள்ல, அந்த ஆபீசர் ஒத்துப்போகலையாம். ரிசல்ட் எப்படி வந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததுமே, ஆபீசருக்கு டிரான்ஸ்பர் ஓலை வந்துரும்னு, கவர்மென்ட் ஆபீஸ் வட்டாரத்துலயும், ஆளும்கட்சி வட்டாரத்துலயும் பேசிக்கிட்டு இருக்காங்க,''

உளவுத்துறை அறிக்கை


''நம்ம தொகுதி நிலவரத்தை சி.எம்., விசாரிச்சாராமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! எலக்சன் முடிஞ்சதும், ஆளும்கட்சி வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சித்தலைவர்களையும் கூப்பிட்டுப் பேசுன முதல்வர், எந்தெந்த தொகுதியில யார் யார் ஜெயிப்பாங்க; எவ்வளவு ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பாங்கன்னு கேட்டிருக்காரு.

ஒரு லட்சம், ரெண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல, ஜெயிப்போம்னு சொல்லிருக்காங்க...''

''உளவுத்துறை ரிப்போர்ட்டுல, 'டவுட்'டாதான் உறுதி கொடுத்திருக்காங்களாம். கவர்மென்ட் ஆபீஸ் அலுவலர்கள், போலீஸ்காரங்க, இண்டஸ்ட்ரிக்காரங்க, வயசானவங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ன்னு யாரைக் கேட்டாலும், 'அவருக்குதான் ஓட்டு போட்டேன்'னு சொல்றதால, ஆளும்கட்சியில கொஞ்சம் ஆடித்தான் போயிருக்காங்க,''

கட்சிக்காரரின் தவிப்பு


''கோடிக்கணக்குல நிதி திரட்டியும், கட்சிக்காரங்களுக்கு பட்டுவாடா செய்யாம தவிக்க விடுறாங்களாமே...''

''அதுவா... வேட்பாளர் பிரசாரம் செய்யறதுக்கு, பிரத்யேகமா ஒரு வாகனம் தயார் செஞ்சாங்க. டிராவல்ஸ் நடத்துற ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தர், வண்டியை எப்.சி.,க்கு அனுப்பி, புது பெயின்ட் அடிச்சு, பக்காவா தயார் பண்ணிட்டு, வாடகை பத்தி பேசியிருக்காங்க. ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் ரூபாய் தர்றதா உறுதி சொல்லியிருக்காங்க. அதை நம்பி, வண்டியை தினமும் அனுப்பியிருக்காரு,''

''10 நாள் கழிச்சு, வாடகை கேட்டதுக்கு, தேர்தல் முடியட்டும் பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்காங்க. தேர்தல் முடிஞ்சதும் கேட்டதுக்கு, 'கட்சியை வச்சு எவ்ளோ சம்பாதிக்கிறீங்க. இதெல்லாம் ஒரு பணமா, பில்லை துாக்கிட்டு வர்றீங்க'ன்னு பேசிட்டு, ரொம்பவே அவமானப்படுத்துற மாதிரி, 'டீல்' பண்ணியிருக்காங்க,''

''அதுக்கப்புறம் வண்டி ஓனரே... சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு நேர்ல போயிருக்காரு. அவருக்கு பெரிய 'ஷாக் டிரீட்மென்ட்' கொடுத்திருக்காங்க. வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு... வெளியே போயிருக்காருன்னு, வாசல்லயே நிற்க வச்சு, திருப்பி அனுப்பிட்டாங்களாம். நொந்துபோன அவரு, ரொம்ப 'அப்செட்'டுல இருக்காரு,''

கோல் போட்ட அ.தி.மு.க.,


''தி.மு.க., ஆளுங்கட்சியா இருந்தாலும், வழக்கம்போல, அ.தி.மு.க., கோல் போட்டிருச்சாமே...''

''ஆமாக்கா, ஒவ்வொரு வருஷமும் கோடை காலத்துல நீர் மோர் பந்தல் திறக்கறதை அ.தி.மு.க.,காரங்க பழக்கமா வச்சிருக்காங்க. மோர், திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணின்னு பழங்களும் கொடுப்பாங்க. மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில, சிட்டி லிமிட்டுக்குள்ள தேவையான இடங்கள்ல, திறந்துட்டு இருக்காங்க,''

''துாங்கி வழிஞ்ச தி.மு.க.,காரங்க லேட்டா எந்திரிச்சு, நாங்களும் நீர் மோர் கொடுத்தோம்னு சொல்றதுக்காக, அவசர அவசரமா திறந்து வச்சிருக்காங்க. ஆளுங்கட்சி நிர்வாகிகள் இப்படி இருந்தா, எலக்சன்ல எப்படி ஓட்டு விழுந்திருக்கும்னு, நாமளே கணக்குப் போட்டு பார்த்துக்க வேண்டியது தான்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,'' என்றபடி, கலெக்டர் அலுவலக பின்புற பகுதிக்கு சென்றாள் மித்ரா.

கமிஷனருக்கு 'ஷாக்'


ஆங்காங்கே குப்பை பரவிக்கிடந்ததை கவனித்த சித்ரா, ''மித்து, வெள்ளலுார் குப்பை கிடங்கு பத்தி எரிஞ்சதே. உள்விவகாரத்தை கேட்டா, ரொம்ப ஷாக்காகிடுவே. இந்த தடவை தீயை அணைக்கிறதுக்கு, ரொம்பவே கஷ்டப்பட்டாங்களாம். டேங்கர் டேங்கரா லாரி தண்ணீ ஊத்தி அணைச்சிருக்காங்க,''

''தீயை அணைச்சதுக்கு அப்புறம், உக்கடம் கழிவு நீர் பண்ணையில இருந்து சுத்திகரிச்ச தண்ணீரை, வெள்ளலுார் கொண்டு வர்றதுக்கு பைப் பதிச்சிருக்கோம்; தொட்டியும் கட்டியிருக்கோம். அதை யூஸ் பண்ணியிருந்தா, லோடு லோடா லாரி தண்ணீ கொண்டு வந்திருக்க வேண்டியதில்லைன்னு, கமிஷனர் காதை யாரோ ஓதியிருக்காங்க.

அதைக்கேட்டு டென்ஷனான கமிஷனர், உண்மையான்னு விசாரிச்சதும், குப்பை கிடங்கு பொறுப்பு அதிகாரியை வார்டுக்கு துாக்கியடிச்சிட்டாராம்... லாரி தண்ணீக்கு எவ்ளோ செலவாச்சோ... அந்த தொகையை கணக்கு போட்டு, சம்பந்தப்பட்ட இன்ஜினியர்கிட்ட வசூலிக்கணும்னு நேர்மையான ஆபீசர்ஸ் சொல்றாங்க,''

போட்டோ வைரல்


கலெக்டர் அலுவலக சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்த மித்ரா, ''ஆளுங்கட்சி கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர் போட்டோ மேல, ஒருத்தரு கால் வச்சிருக்கிற மாதிரி போட்டோ சமூக வலைதளத்துல வைரலாச்சே... என்ன விவகாரம்னு விசாரிச்சிங்களா,'' என கேட்டாள்.

''கார்ப்பரேஷன்ல காங்கிரஸ் கட்சியில, ஒன்பது கவுன்சிலர்கள் இருக்காங்க. இவுங்க கட்சிக்கான மாநகர் மாவட்ட ஆபீஸ் கீதா ஹால் ரோட்டுல செயல்படுதுப்பா. அந்த ஏரியாவுல ஒட்டியிருந்த போஸ்டர்ல, காங்கிரஸ் கவுன்சிலர் போட்டோ மேல, கட்சிக்காரர் ஒருத்தரு கால் வச்சு போஸ் கொடுத்து, ஸ்மார்ட் போன்ல, போட்டோ எடுத்து சமூக வலைதளத்துல பரவ விட்டுட்டாரு.

இது, கதர் சட்டைக்காரங்களை உசுப்பேத்தி இருக்கு. இதுக்கெல்லாம் அந்த கட்சி நிர்வாகி ஒருத்தரு தான் காரணம். அவர் துாண்டிதான் இப்படி செஞ்சிருக்காங்க. அந்த நிர்வாகி பதவியை பறிக்கணும்னு, கட்சி ஆபீசுல பேசிக்கிறாங்க,''

தாறுமாறா பேசும் இன்ஸ்.,


''கொஞ்ச நாளாவே போலீஸ் மேட்டர் எதுவுமே சொல்லலையே...''

''மித்து! ஸ்டேஷன்ல நடக்குற கட்டப்பஞ்சாயத்தை பேச ஆரம்பிச்சா... ஒரு புத்தகமே அச்சடிக்கலாம்; அந்தளவுக்கு பிரச்னைங்க இருக்குது. வர்த்தக பகுதி அதிகமா இருக்கற ஸ்டேஷன்ல இருக்குற லேடி இன்ஸ்., ஒருத்தரு, சக போலீஸ்காரங்களை மரியாதை இல்லாம ஒருமையில பேசுறாங்களாம். உயரதிகாரிகிட்ட கம்ப்ளைன்ட் சொல்லப் போறோம்னு யாராச்சும் சொன்னா, அந்த உயரதிகாரியை பத்தியும், தரக்குறைவா தாறுமாறா வசைபாடுறாராம். ஸ்டேஷன்ல டூட்டி பார்க்குற போலீஸ்காரங்க மன உளைச்சல்ல இருக்காங்க,''

செம டோஸ்


''அதெல்லாம் இருக்கட்டும்... ரூரல் போலீஸ்காரங்களுக்கு எஸ்.பி., ஆபீஸ்ல இருந்து செம டோஸ் விட்டாங்களாமே...''

''அந்தக் கொடுமையை ஏன் கேக்குற... மேட்டுப்பாளையத்துல இருந்து கோத்தகிரி போற ரோட்டுல, குஞ்சப்பனை பக்கத்துல 'வியூ பாயின்ட்' இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நைட் 2:00 மணிக்கு ரெண்டு தரப்புல குடிபோதையில தகராறு ஏற்பட்டுருக்கு; பைக்குல வந்தவங்கள்ல ரெண்டு பேர் மேல காரை ஏத்தி கொன்னுட்டாங்க,''

''இதுல, கொடுமையான விஷயம் என்னன்னா, இறந்தவங்க, பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவங்க. நடுராத்திரில ஒரே பைக்குல மூணு பேரு வந்திருக்காங்க. கார்ல வந்தவங்க துடியலுாரை சேர்ந்தவங்க. பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம்னு மூணு போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டை தாண்டி போயிருக்காங்க. கோத்தகிரி ரோட்டுல பாரஸ்ட் செக்போஸ்ட்டும் இருக்கு. ஒருத்தருமே ஒழுக்கமா சோதனை செய்யலைன்னு தெரியுது; ரோந்து போலீசும் ஒழுங்கா ரோந்து போறதில்லை போலிருக்கு,''

''போலீஸ்காரங்க கடமையை கரெக்ட்டா செஞ்சிருந்தா, ரெண்டு உசுரு போயிருக்காதாம். இவ்ளோ விஷயம் நடந்த பிறகே, எஸ்.பி., ஆபீசுக்கு தகவல் வந்துருக்கு. எஸ்.பி., ஆபீசுல இருந்து, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீஸ்காரங்க, ரோந்து போலீஸ்காரங்களை 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கிட்டாங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

உணவு திட்டத்துல கசமுசா


''அதெல்லாம் சரி... காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்துறதுல கசமுசா நடக்குறதா கேள்விப் பட்டேனே... உண்மையா... ''

''சூலுார் ஏரியாவுல அரசூர் ஸ்கூல்ல நடக்குற பிரச்னையை தானே கேக்குறீங்க. அந்த ஸ்கூல்ல, 560 ஸ்டூடண்ட்ஸ் படிக்கிறாங்க; ஆனா, 470 ஸ்டூடண்ட்ஸ்க்கு தான் உணவு கொடுக்குறதுக்கு, 'அலாட்மென்ட்' ஆகியிருக்குன்னு சொல்லியிருக்காங்க.

எல்லாருக்கும் உணவு கொடுக்கணும்னா, 'ஆப்சென்ட்' ஆனவங்களை கணக்கெடுத்து, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்குங்கன்னு சொல்லி இருக்காங்க. ஸ்கூல் டீச்சர்ஸ், ஊர்க்காரங்க சேர்ந்து, பணம் திரட்டி, மீதமுள்ள பசங்களுக்கு உணவு ரெடி பண்ணி, கொடுத்திருக்காங்க,''

''ஸ்கூலுக்கு வந்த ஆபீசர், 470 பேருக்கு தானே புட் தர்றோம்; நீங்க எப்படி மத்தவங்களுக்கு கொடுக்குறீங்க. அந்த தொகையை எங்களுக்கு தரணும்னு சொல்லியிருக்காங்க. இதை கேட்டு டீச்சர்ஸ் அதிர்ச்சி ஆகிட்டாங்களாம். உணவு பத்தலைனு கை காசு போட்டு ஏற்பாடு செஞ்சா, அந்த பணத்தை எங்களுக்கு கட்டணும்னு கேட்டா, என்ன லாஜிக்னு புரியலையேன்னு புலம்புறாங்க,''

மெடிக்கல் ஷாப் அருகே ஸ்கூட்டரை நிறுத்தச் சொன்ன மித்ரா, இறங்கிச் சென்று, இருமலுக்கு மருந்து வாங்கி வந்தாள்.

''மெடிக்கல் ஷாப்பை பார்த்ததும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து, சுகாதார ஆய்வாளர் ஒருத்தரு, சூலுார் ஏரியாவுல மெடிக்கல் ஷாப் உரிமையாளர்களை மிரட்டி, வசூல் வேட்டை நடத்தியிருக்காரு. அவரை, 'சஸ்பெண்ட்' செய்றதுக்கான வேலை நடந்துக்கிட்டு இருக்கு,''

''விசாரணையில, அரசு வேலை வாங்கித் தர்றதாச் சொல்லி, பல பேர்கிட்ட பல லகரங்களை லவட்டி இருக்கிறது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. வேலையும் வாங்கித் தராம, பணத்தையும் திருப்பித் தராம இருக்கறதுனால, ஏமாந்தவங்க ஒன்னு சேர்ந்து கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறாங்களாம்.

இந்த விவகாரத்துல இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்குதாம். விசாரணையை துரிதப்படுத்தி நேர்மையா நடத்துனா, மோசடி பேர்வழிகள் கைதாகுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us