sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு

/

'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு

'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு

'மூனு'க்கு 70... 'நாலு'க்கு 30 டீலு நல்லாருக்கே கோவாலு


ADDED : பிப் 24, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.

மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த சித்ரா, காய்கறி கூடையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளுக்கு காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''ஆளுங்கட்சி தரப்புல எலக்சனுக்கு ரெடியாக ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கே. மினிஸ்டர் நேரு தலைமையில மீட்டிங் போட்டாங்களாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா... வெஸ்ட் ஜோன் அளவுல எட்டு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவங்களை கூப்பிட்டு, 'ரெவ்யூ மீட்டிங்' நடத்துனாங்க. மினிஸ்டர் நேரு கோபக்காரரு. பொது இடம்னு பார்க்காம 'டக்'குன்னு திட்டிப்புடுவாரு; வார்த்தைகளும் கடுமையானதா இருக்கும். அதனால, ஆபீசர்ஸ் பதட்டத்துலேயே இருந்தாங்க...''

'பேக்டிராப்ல மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டும் பிரிண்ட் பண்ணியிருந்தாங்க. டெபுடி சி.எம்., படம் பிரிண்ட் செய்யலை. கேட்டதுக்கு, டெபுடி சி.எம்., படம் வைக்கணும்ங்கிறது, 'ப்ரோடோகால்' இல்லைன்னு ஆபீசர்ஸ் சொல்றாங்க. அரசாணைப்படி, கருணாநிதி, ஸ்டாலின் படம் பிரிண்ட் பண்ணா போதும்; அரசு விழாக்கள்ல உதயநிதி படம் முக்கியமில்லை. சொந்த விருப்பத்துல, ஆர்வக்கோளாறுல உள்ளூர் அமைச்சர்கள் அச்சடிக்கிறாங்கன்னு சொன்னாங்க,''

''இருந்தாலும், பிரச்னை வந்துடக் கூடாதுங்கிறதுக்காக, சென்னையில இருந்து பேக்டிராப் டிசைன் வாங்கி, அதுல... இடம், தேதியை மட்டும் மாத்தி, பிரிண்ட் பண்ணுனதா சொன்னாங்க. கூட்ட நிகழ்வு 'எசகுபிசகா' நடந்துறக் கூடாதுன்னு, நம்மூர் கார்ப்பரேஷன்ல இருந்து ஒரு டீம், மதுரைக்கு போயி, அங்க நடந்த கூட்டத்தை பார்த்துட்டு வந்து, ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... சாப்பாடு செலவை அமைச்சர் ஒருவர் ஏத்துக்கிட்டாராம். அசைவம், சைவம்னு தடபுடலா விருந்து கொடுத்தாங்க. 'மாநகர் மாவட்டம்' பதவியை எதிர்பார்க்குற, இலைக்கட்சியில இருந்து ஆளுங்கட்சிக்கு தாவுன, முன்னாள் கவுன்சிலர் ஒருத்தரு, ஏற்பாடுகளை முன்னால நின்னு கவனிச்சிட்டு இருந்தாரு,''

'மாவட்டம்' கைமாறுமா


''அதெல்லாம் இருக்கட்டும்... நம்மூர்ல ஆளுங்கட்சியில கோலாச்சுற 'மாவட்டங்களை' மாத்துறதுக்கு வாய்ப்பு இருக்கா... இல்லையா... பூச்சாண்டி காட்டிட்டே இருக்காங்களே... வழக்கம்போல தப்பிச்சிருவாங்களா...''

''உடன்பிறப்புகள் அதைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம்னு உருவாக்குனா, கூடுதலா ரெண்டு பேருக்கு பதவி கெடைக்கும்னு நினைக்கிறாங்க. அதுக்கான அறிவிப்பும் வந்தபாடில்லை. இருந்தாலும், 'மாநகர் மாவட்டத்தை' கைப்பத்துறதுல பலரும் குறியா காத்துக்கிட்டு இருக்காங்க. மினிஸ்டர் செந்தில்பாலாஜி 'ரெகமண்டேஷன்' பண்றவங்களுக்கே கட்சிப் பதவி கிடைக்கும்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க. அதனால, அவரை பலரும் சுத்தி சுத்தி வர்றாங்க. எந்த ஊருக்கு பங்சனுக்கு போறாரோ, அங்க போயி, வணக்கம் வைக்கிறாங்க,''

''மாநகர் மாவட்டம் பதவியை எப்படியாவது கைப்பத்தியாகணும்னு, 'எம்'க்கு நெருக்கமான இலைக்கட்சியில இருந்து தாவுன, ரெண்டு பேரு ஆசைப்படுறாங்க. அதுல, முருகன் பெயரை கொண்ட ஒருத்தரு, கோடியில செலவு செஞ்சிட்டு இருக்காரு.

ஆனாலும், மூன்றெழுத்து நிறுவனத்தைச் சேர்ந்தவங்க தயவுல, 'அண்ணா நகர்' சப்போர்ட்டுல, பதவியை எப்படியும் தக்க வைக்கலாம்னு, 'மாஜி' நெனைக்கிறாரு. சென்னைக்கு போயிட்டு வந்ததுல இருந்து தெம்பா இருக்காராம். உடன்பிறப்புகள் யாராச்சும் அவரை சந்திச்சு பேசுனா... 'நமக்கெல்லாம் எந்த பிரச்னையும் வராதுப்பா...'ன்னு தைரியமா சொல்றாராம்...''

''அப்போ... கட்சியை 'சீரமைக்கப் போறோம்'னு ஸ்டேட்மென்ட் ரிலீஸ் பண்ணுனதெல்லாம் சும்மாவா...''

''மித்து...! நம்மூர்ல இன்னும் கட்சி சீரமைப்பு வேலை ஆரம்பிக்கவே இல்லையாம். எல்லாம் பொறுப்பு மினிஸ்டர் முடிவுல இருக்காம்; அவர் மேலிடத்துல என்ன சொல்றாரோ... அதுவே இறுதியானதா இருக்கும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. ஏன்னா... மினிஸ்டர் நேரு வந்தப்போ, சில பேரு அவரிடம் கோரிக்கை வச்சிருக்காங்க. அதுக்கு, 'எதுவா இருந்தாலும் பாலாஜிகிட்ட பேசிக்கிங்க'ன்னு, 'பட்'டுன்னு சொல்லிட்டாராம்...''

'டீலிங்' பேச ஆபீஸ்


''அதெல்லாம் இருக்கட்டும். காளப்பட்டி ரோட்டுல 'பக்காவா ஆபீஸ்' போட்டு, கான்ட்ராக்டர்கள்ட்ட டீலிங் பேசுறாங்களாமே...''

''ஆமாப்பா... உண்மைதான்! இப்போ, நம்மூர் கான்ட்ராக்டர்கள் மட்டுமில்லாம வெளியூர்க்காரங்களையும் உள்ளே இறக்குறாங்களாம். அந்த ஆபீசுல கான்ட்ராக்டர்கள் தலையா தென்படுது. கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட்டுகளை பிரிச்சுக் கொடுக்கறது சம்பந்தமா, ரெண்டு 'எம்'களும் ஒப்பந்தம் போட்டிருக்காங்க,''

''மூன்றெழுத்து ஊர்க்காரருக்கு 70 சதவீத 'ஒர்க்'; நான்கெழுத்து ஊர்க்காரருக்கு, 30 சதவீத ஒர்க்குன்னு பிரிச்சிருக்காங்க. வேலை செய்ய விரும்புற கான்ட்ராக்ட்காரங்க, அவுங்க அதிகாரப்பூர்வமா நியமிச்சிருக்கறவங்களை சந்திச்சு பேசுனா, வேலை ஒதுக்கிக் கொடுக்குறாங்க. 'சிவில் ஒர்க்'கா இருந்தா ஏழரை சதவீதம்... ரோடு ஒர்க்கா இருந்தா... 17 சதவீதம் கமிஷன் கொடுக்கணுமாம்... இதுக்கு முன்னாடி, 12 சதவீதம் இருந்துச்சாம்; இப்போ, 5 சதவீதம் ஒசத்தி கேக்குறதுனால, கான்ட்ராக்டர்ஸ் புலம்புறாங்க...''

''அ.தி.மு.க., வட்டாரத்தை சேர்ந்த கான்ட்ராக்டர்களுக்கும் வேலையை பங்கு போட்டு கொடுக்குறாங்களாமே...''

''ஆமாப்பா... அ.தி.மு.க., ஆட்சியில 'மாஜி'க்கு நெருக்கமா இருந்த மூன்றெழுத்து கம்பெனிக்கு 10 வேலை கொடுத்திருக்காங்களாம். கரெக்ட்டா கமிஷன் கொடுத்தா, யாரா இருந்தாலும் ஒர்க் கொடுக்குறாங்களாம்; கட்சி பார்த்து ஒதுக்குறதில்லையாம். கவுன்சிலர்கள் யாராவது வேலை கேட்டாலும், ஒன்னு ரெண்டு தள்ளி விடுறாங்களாம்,''

காரசாரம்... கப்சிப்


''மேட்டுப்பாளையத்துல நடந்த ஆளுங்கட்சி கூட்டத்துல காரசாரமா கேள்வி கேட்டாங்களாமே...''

''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அந்த ஏரியாவுல பாக முகவர்கள் கூட்டம் நடந்துச்சு. அதுல, 'கட்சியில இருந்து கொடுக்குற பணம் எங்களுக்கு வந்து சேர்றதில்லை. கவர்மென்ட் ஆபீசிலும் எங்களுக்கு எந்த வேலையும் செஞ்சு கொடுக்கறதில்லை. எங்களுக்குன்னு என்ன செஞ்சிட்டீங்க'கன்னு, பாக முகவர்கள் பலரும் வறுத்தெடுத்துட்டாங்களாம். நிர்வாகிகள் பலரும் பதில் பேசாம, தலையை தொங்கப் போட்டு, மவுனம் சாதிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் யாரு காரணம்னு, ஆளுங்கட்சி தலைமை 'என்கொயரி' செஞ்சிட்டு இருக்குதாம்...''

கன்னடத்துல பேசுன கலெக்டர்


''அதிருக்கட்டும்... கவர்மென்ட் பங்சன்ல, மினிஸ்டர் முன்னாடி, நம்மூர் கலெக்டர் கன்னடத்துல பேசுனாராமே...''

''ஆமா, மித்து! நீ சொல்றது கரெக்ட்டுதான்! தமிழ் வளர்ச்சித்துறை சார்புல, உலக தாய்மொழி தின விழா நடந்துச்சு. மினிஸ்டர் சாமிநாதன் கலந்துக்கிட்டாரு. புது கலெக்டர் பவன்குமார், அவரோட தாய் மொழியான கன்னடத்துல நாலு வரி பேசிட்டு, தமிழ்ல விளக்கம் சொல்லியிருக்கு. அப்புறம்... தெனாலி ராமன் கதை சொல்லி, தாய் மொழியின் முக்கியத்துவத்தை பேசியிருக்காரு... அவரு, என்ன சொன்னாருன்னு, பலருக்கும் புரியலையாம்...''

பத்திரப்பதிவுல லஞ்சம்


''அக்கா... போன வாரம் பத்திரப்பதிவுத் துறையை பத்தி பேசுனோமே... தொண்டாமுத்துார் ஏரியாவுல இருந்து ஏகப்பட்ட போன்... சென்ட் கணக்குல பத்திரம் பதிவு செஞ்சா அஞ்சாயிரம் கேக்குறாங்களாம்.

அதுவே, ஏக்கர் கணக்குல பதிவு செஞ்சா, ஐம்பதாயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரைக்கும் லஞ்சம் கேக்குறாங்களாம். அங்க இருக்கற ஆபீசர் ஜூஸ் பிரியராம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு டாகுமென்ட் ரைட்டர், ஜூஸ் வாங்கிக் கொடுக்குறாங்களாம்...''

''அப்படியா... திராவிட ஆட்சின்னு மேடைக்கு மேடை முழங்குறாங்க. ஆனா, கவர்ன்மென்ட் ஆபீசுக்கு போனா கொடுமையா இருக்கே...'' என நொந்து கொண்ட சித்ரா, ''உணவுப் பாதுகாப்பு துறை சீல் வச்ச கடைகளும், 'பக்கா'வா செயல்படுதாமே...'' என, கேட்டாள்.

''அதையேன்... கேக்குறீங்க... அன்னுார் ஏரியாவுல உணவுப் பாதுகாப்பு படையை சேர்ந்தவங்க சோதனை நடத்தி, ஆறு கடைகளுக்கு 'சீல்' வச்சதா சொன்னாங்க. ஆபீசர் சொன்ன ஹோட்டலுக்கு நேர்ல போயி பார்த்தா, புரோட்டா சேல்ஸ் பட்டைய கெளப்பிட்டு இருந்துச்சு. கல்லா கட்டுறதுல தான் அந்த துறையை சேர்ந்தவங்க, அதிகாரத்தை பயன்படுத்துறாங்கன்னு புகார் கெளம்பிட்டு வருது. இதே மாதிரியே கோவையிலும் செயல்படுறாங்கன்னு பேச்சு ஓடிட்டு இருக்கு,''

'ரேட்' கொடுத்தா 'போஸ்ட்டிங்'


''ஒரே நேரத்துல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அத்தனை பேரையும் வெவ்வேறு ஊருக்கு துாக்கியடிச்சிட்டாங்களாமே...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். ஒருத்தரை மதுரைக்கும், இன்னொருத்தரை சென்னைக்கும் மாத்தியிருக்காங்க. இன்னொருத்தரு மேட்டுப்பாளையத்துக்கு போயிருக்காரு. வாகன ஆய்வாளரா இருந்த ஒருத்தருக்கு, இதே ஊர்ல வட்டார போக்குவரத்து அலுவலர் போஸ்ட்டிங் போட்டுக் கொடுத்திருக்காங்க.

ஒவ்வொரு போஸ்ட்டிங்கிற்கும், ஒரு 'ரேட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்களாம். கரன்சி கைமாறுனா, போஸ்ட்டிங் ஆர்டர் கெடைக்கும்னு, வட்டார போக்குவரத்து துறையில பேசிக்கிறாங்க. சென்ட்ரல் போஸ்ட்டிங் இன்னும் காலியா இருக்குதாம்; கரன்சி மழை கொட்டுற இடமாம்; அதனால், நல்ல 'ரேட்' வர்றதுக்காக, போஸ்ட்டிங் போடாம, 'வெயிட்' பண்றாங்களாம்...''

புல்லட் 'பாண்டி'


''இதையெல்லாம் எங்க போயி சொல்றது...'' என, புலம்பிய சித்ரா, ''புல்லட்டுல வலம் வர்ற போலீஸ் எஸ்.ஐ., ஒருத்தரு, அடாவடியா நடந்துக்கிறாராமே...''

''அதுவா... சிங்கை ஸ்டேஷன்ல வேலை பார்த்துட்டு, வேற ஸ்டேஷனுக்கு மாத்தப்பட்ட எஸ்.ஐ., ஒருத்தரு, கள்ளிமடை ஏரியாவுல வசிக்கிறாரு. அவரு புல்லட்டுல போனப்போ, அந்த ஏரியாவை சேர்ந்த ஒரு இளைஞர், அவரோட சொந்த புல்லட் சீட்டுல, கால் வச்சு மொபைல் போன்ல பேசிக்கிட்டு இருந்திருக்காரு,''

''அதைப்பார்த்த எஸ்.ஐ., டென்ஷனாகி, புல்லட்டை நிறுத்திட்டு வந்து, 'உயரதிகாரி வர்றப்போ மரியாதை கொடுக்காம... வண்டி மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிறீயா...'ன்னு சொல்லி, சாவியை பிடுங்கி வச்சிருக்காரு.

அந்த ஏரியாவை சேர்ந்தவங்க சமரசம் பேசி, சம்பந்தப்பட்ட இளைஞரை மன்னிப்பு கேட்க வச்சு, சாவியை திருப்பிக் கொடுக்க வச்சுருக்காங்க...'' என்றபடி, சமையலுக்கு தேவையான காய்கறியை வெட்ட ஆரம்பித்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us