sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

கட்சிக்காரங்ககிட்ட 'மாஜி' என்கொயரி விஜய் கொடி பறக்க விடாம கெடுபிடி!

/

கட்சிக்காரங்ககிட்ட 'மாஜி' என்கொயரி விஜய் கொடி பறக்க விடாம கெடுபிடி!

கட்சிக்காரங்ககிட்ட 'மாஜி' என்கொயரி விஜய் கொடி பறக்க விடாம கெடுபிடி!

கட்சிக்காரங்ககிட்ட 'மாஜி' என்கொயரி விஜய் கொடி பறக்க விடாம கெடுபிடி!

1


ADDED : செப் 03, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 03, 2024 01:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சித்ரா - மித்ரா சென்றிருந்தனர். சுவாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த சித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

பின் இருக்கையில் அமர்ந்துகொண்ட மித்ரா, ''முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., வந்திருந்தாரே; பசு தானம் கொடுத்ததா கட்சிக்காரங்க சொன்னாங்களே...'' என, ஆரம்பித்தாள்.

''சனிப்பிரதோஷ தினத்தன்று, பசு தானம் கொடுத்தால் நினைச்சது நடக்குமாம். அவரு என்ன நினைச்சு, தானம் கொடுத்தாருன்னு தெரியலை. அவருக்கு தேவையான உதவியை, ஆலாந்துறையை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி செஞ்சு கொடுத்திருக்காரு.

ஓ.பி.எஸ்.,-ஐ பார்த்ததும், தன்னை அறிமுகம் செஞ்சுட்டு, ஒவ்வொரு சன்னதிக்கும் அழைச்சிட்டுப் போயி, தரிசனம் செய்றதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காரு. கார் ஏறி புறப்படுறதுக்கு முன்னாடி, ஓ.பி.எஸ்.,கூட நினனு போட்டோ எடுத்திருக்காரு,''.

'மாஜி'யின் 'அட்வைஸ்'


''நம்மூரு 'மாஜி'யும், ஓ.பி.எஸ்.,சும் சந்திச்சாங்களா.... 'மாஜி' ரொம்பவே 'சைலன்ட்'டா இருக்காரே...''

''ஓ.பி.எஸ்., ஒரு நாள் முழுக்க நம்மூர்ல தான் தங்கியிருந்திருக்காரு. அவரை யார் யாரு சந்திச்சாங்கன்னு 'வெளிச்சத்துக்கு' வரலை. லோக்சபா எலக்சன்ல தோத்தது சம்மந்தமா, தொகுதி வாரியா 'மாஜி' 'என்கொயரி' செய்றாரு.

சூலுார் ஏரியாவுல பூத் வாரியா ஏ.டி.எம்.கே., வாங்குன ஓட்டுகள் அடங்கிய பட்டியலை கையில வச்சுக்கிட்டு, வாத்தியார் மாதிரி, பொறுப்பாளர்கள்கிட்ட கேள்வி கேட்டிருக்காரு. ஒவ்வொருத்தரும் ஆளுக்கொரு காரணம் சொல்லி இருக்காங்க; சில பேரு முகத்தை காட்டுறதுக்கே தயங்கியிருக்காங்க. அதனால, சட்டசபை எலக்சனுக்கு ரெடியாகுற வேலையை பாருங்கன்னு புத்திமதி சொன்னாராம்...''

ரத்தத்தின் ரத்தங்கள் 'கப்சிப்'


''ஆனா, இ.பி.எஸ்.,சை பத்தி, அண்ணாமலை கடுமையான வார்த்தையில வசைபாடியும், நம்மூர் ரத்தத்தின் ரத்தங்கள் பலரும், 'கப்-சிப்'ன்னு இருக்காங்களே...''

''அதாங்க ஒன்னும் புரியலை. கொங்கு மண்டலமே எங்க கன்ட்ரோல்ல இருக்கு; எங்க கோட்டைன்னு சொல்லிட்டு இருப்பாங்க. இப்போ, 'சைலன்டா' இருக்காங்க. எதிர்ப்பை பதிவு செய்றதுக்காக, லோக்சபா எலக்சன்ல போட்டியிட்ட வேட்பாளரை மட்டும் பேச விட்டுட்டு, மத்தவங்க கடந்து போயிட்டாங்க,''

''அதனால, இ.பி.எஸ்.,க்கும் - 'மாஜி'க்கும் உரசல் இருக்குமோன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சந்தேகப்படுறாங்க. ஏன்னா... நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அவரு வரலை. இதை தெரிஞ்சுக்கிட்டு, நம்மூருக்கு ஓ.பி.எஸ்., வந்தாரா, தொண்டாமுத்துார் தொகுதிக்குள்ள இருக்கற வெள்ளியங்கிரி கோவிலுக்கு எதுக்கு வரணும். சனிப்பிரதோஷத்துக்கு பசு தானம் கொடுக்க தேனி ஏரியாவுல கோவில்கள் இல்லையா; நம்மூருக்கு வந்து தான் கொடுக்கணுமான்னு, ரத்தத்தின் ரத்தங்கள் காதும் காதும் வச்ச மாதிரி பேசிக்கிறாங்க...''

அலறும் ஆசிரியர்கள்


''அதெல்லாம் இருக்கட்டும். அரசு பள்ளிக்கு 'டிரான்ஸ்பர்' ஆகி போறதுக்கே ஆசிரியர்கள் பலரும் தயங்குறாங்களாமே...'' என, இழுத்தாள் மித்ரா.

''ஆமாப்பா... உண்மைதான்! மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அடிவாரத்துல இருக்குற 'துறை'யான ஊர்ல இருக்கற கவர்மென்ட் பள்ளியில இருக்கற டீச்சர்ஸ் ரொம்பவே பயத்துல இருக்காங்க. சில மாசத்துக்கு முன் பாலியல் புகாருல சிக்கி, ஸ்கூல்ல இருந்த எல்லா டீச்சர்ஸ்சையும் மாத்துனாங்க. புதுசா நியமிச்சிருக்கற டீச்சர்ஸ்க்கு, உள்ளூர் அரசியல்வாதிகள் நெருக்கடி தர்றாங்களாம்,''

''ஸ்டூடன்ஸ் பலரும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்காங்களாம். சில வாரங்களுக்கு முன் ஸ்டூடன்ஸ்சை சோதனை செஞ்சதுல, புகையிலை பாக்கெட், கூல் லிப் போன்ற போதை வஸ்துகளை பறிமுதல் செஞ்சு, பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்காங்க; சில ஸ்டூடன்ஸ் ஸ்கூலுக்கு ஸ்மார்ட் போன் எடுத்துட்டு வர்றாங்களாம்.

இதை கண்டிச்சா, டீச்சர்ஸை ஸ்டூடன்ஸ் மிரட்டுற தொனியில பேசுறாங்களாம். காலேஜ் ஸ்டூடன்ஸ் வசிக்கிற ரூம்களில், போலீஸ் அதிரடி ரெய்டு நடத்துன மாதிரி, சந்தேகப்படுற ஸ்கூல்களிலும் சோதனை செஞ்சா தான், மாணவ சமுதாயத்தை திருத்த முடியும்னு டீச்சர்ஸ் சொல்றாங்க...'' என்றபடி, பேரூர் அருகே பேக்கரி முன் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.

பறக்குது விஜய் கொடி


காபியை உறிஞ்சிய மித்ரா, ''நம்மூர்ல விஜய் கட்சிக் கொடி பறக்க ஆரம்பிச்சிருச்சாமே...'' என, கிளறினாள்.

''ஆமாப்பா... உண்மைதான்! கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள, சிங்காநல்லுார் தொகுதியில மட்டும், 18 இடத்துல கொடிக்கம்பம் நடுறதுக்கு பர்மிஷன் கேட்டு கார்ப்பரேஷனுக்கு கடிதம் கொடுத்திருந்தாங்க.

அதுக்கு, 'இதுக்கெல்லாம் எந்தக்கட்சிக்கும் பர்மிஷன் தர்றது வழக்கமில்ல; மத்த கட்சிக்காரங்க எங்கெல்லாம் கொடிக்கம்பம் வச்சிருக்காங்களோ... அங்கெல்லாம் பிரச்னை வராம நட்டுக்குங்க... புதுசா எந்த இடத்திலும் நடக்கூடாதுன்னு, கண்டிஷன் போட்டு வாய்மொழியா பர்மிஷன் கொடுத்தாங்களாம்...''

''அதனால, சவுரிபாளையத்திலும், நீலிக்கோணாம்பாளையத்திலும் விஜய் கட்சிக்கொடிய பறக்க விட்டுருக்காங்க. அதுக்கு பீளமேடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு, 'கெடுபிடி' காட்டியிருக்காங்க.

கட்சி நிர்வாகிகள் ஸ்டேஷனுக்கு போயி, எழுதிக் கொடுத்துட்டு கொடியேத்தியிருக்காங்க. இதே மாதிரி, சூலுார் ஏரியாவுல ரெண்டு இடத்துல விஜய் கொடியை பறக்க விட்டிருக்காங்க. பொது செயலாளரை அழைச்சுட்டு வந்து, சிட்டி முழுக்க கொடி பறக்க விடுறதுக்கு பிளான் போட்டுட்டு இருக்காங்களாம்,''

''விஜய் கட்சி மூவ்மென்ட்டை உளவுத்துறையை சேர்ந்தவங்க கண்காணிச்சிட்டு இருக்காங்களாமே...''

''மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஏரியாவை சேர்ந்த திராவிட கட்சி நிர்வாகிகள் யாராச்சும் விஜய் கட்சிக்கு போறாங்களான்னு உளவுத்துறைக்காரங்க 'மோப்பம்' பிடிச்சுட்டு இருக்காங்களாம். தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் அதிருப்தியில இருக்கற நிர்வாகிகள் யார், யாருன்னு லிஸ்ட் ரெடி பண்ணியிருக்காங்களாம். அவுங்க கட்சி தலைமையில இருந்து, சமாதானம் செய்வாங்கன்னு சொல்றாங்க,''

'காச்மூச்' போலீஸ் ஆபீசர்


பேக்கரியை விட்டு வெளியே வந்த மித்ரா, போலீஸ் ஜீப்பை பார்த்ததும், ''காவல்துறை உயரதிகாரி ஒருத்தரின் செயல்பாடுகள், காவல்துறை வட்டாரத்துல மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்காமே...'' என கேட்டாள்.

''ஆமா, மித்து! 'துணை'யான ஆபீசர்களில் ஒருத்தரு, இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்களையும் தரக்குறைவான வார்த்தைகளை குறிப்பிட்டு பேசுறாராம். 'எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யத் தயாரா இருக்கோம்; எதுக்கு தரக்குறைவான வார்த்தையில பேசுறாரு'ன்னு கேட்குறாருங்க,''.

''உளவுத்துறை குடுத்த அறிக்கையை வச்சு, அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்ததும், போலீஸ் ஆபீசர்ஸ் டிரான்ஸ்பர்ஸ் இருக்கும்னு பேசிக்கிறாங்க,''

''கார்ப்பரேஷன் பெயரைச் சொல்லி யாரோ ரெய்டுக்கு போறாங்களாமே...''

''அதுவா... பிளாஸ்டிக் ரெய்டுக்கு ஒரு குரூப் போகுது; கார்ப்பரேஷன் நிர்வாகத்தால் அங்கீகாரம் கொடுக்காத ஒரு டீம், இந்த வேலையில ஈடுபடுதாம். எத்தனை கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செஞ்சோம்னு, பைன் போடுற ரசீதுல குறிப்பிடுறதில்லையாம். அப்புறம், பறிமுதல் செஞ்ச பிளாஸ்டிக் பொருட்களை வேற கடையில கொடுத்து காசாக்கிடுறாங்களாம்,''

''இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். பைன் போடுறதுக்கு முன்னாடி, லஞ்சத்துக்கு பேரம் பேசுறாங்களாம்; பேரம் படியலைன்னா, பைன் போடுறாங்களாம். பேரம் படிஞ்சா... பிளாஸ்டிக் பறிமுதல் செய்றதில்லையாம்... ஆனா, ஊருக்கு உபதேசம் செய்ற மாதிரி, 'மீண்டும் மஞ்சப்பை துாக்குவோம்'ன்னு பிரசாரம் செஞ்சிட்டு இருக்காங்களாம்... ''

அடங்காத ஆபீசர்


''தெற்கு தாலுகா ஆபீசுல 'டெபுடி' தாசில்தாரா இருந்த லேடி ஆபீசர் இன்னும் திருந்தலையாமே... விசாரிச்சீங்களா...''

''அதுவா... கார்ப்பரேஷன் சொத்துக்கு பட்டா போட்டுக் கொடுத்த விவகாரத்துல வசமா சிக்குனாங்க. இதுல, ரெண்டு அலுவலர்கள் மேல நடவடிக்கை எடுத்த உயரதிகாரி, அந்த 'லேடி' ஆபீசர் மேல துறை ரீதியா நடவடிக்கை எடுக்காம மன்னிச்சு விட்டுட்டாங்க. அதுக்கப்புறமும் பிரச்னை வந்ததால, 'டம்மி'யான பதவிக்கு மாத்தியிருக்காங்க...''

''இருந்தாலும் அந்த லேடி ஆபீசர் மாறலையாம். பட்டா பெயர் மாத்தி தர்றேன்னு சொல்லி, ஏகப்பட்ட புரோக்கர்கள்கிட்ட 'அட்வான்ஸ்' வாங்கியிருக்காங்க. காசு கொடுத்தவங்க, அந்த ஆபீசரை நச்சரிச்சிருக்காங்க. அவுங்களோ, இப்போ, 'டியூட்டி'யில இருக்கற ஆபீசரை தொடர்பு கொண்டு, '12 பட்டா மாறுதல் செய்றதுக்கு காசு வாங்கினேன்; செஞ்சு கொடுக்குறதுக்கு முன்னாடி மாத்திட்டாங்க,''

''கொஞ்ச நேரத்துக்கு ஒங்க லாகின்; பாஸ்வேர்டு கொடுங்க'ன்னு கேட்டிருக்காங்க. அதைக்கேட்டு உஷாரான ஆபீசர், 'நீங்க லஞ்சம் வாங்குனதுக்கு... என்னுடைய லாகின் எப்படித் தர முடியும்; அதெல்லாம் தர முடியாது'ன்னு தடாலடியா சொல்லிட்டாங்களாம். தாசில்தாரை வச்சு கட்டப்பஞ்சாயத்து செய்றதுக்கு 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us