sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

கரன்சி அமுக்கிய கரை வேட்டிகள் வில்லங்க வீடியோ எடுத்த ஆபீசர்!

/

கரன்சி அமுக்கிய கரை வேட்டிகள் வில்லங்க வீடியோ எடுத்த ஆபீசர்!

கரன்சி அமுக்கிய கரை வேட்டிகள் வில்லங்க வீடியோ எடுத்த ஆபீசர்!

கரன்சி அமுக்கிய கரை வேட்டிகள் வில்லங்க வீடியோ எடுத்த ஆபீசர்!


ADDED : ஏப் 23, 2024 02:03 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''நம்மூர்ல லோக்சபா எலக்சன் ஓட்டுப்பதிவு முடிஞ்சிருச்சே. 'அப்டேட்' இருந்தால் சொல்லுங்களேன்,'' என, ஆரம்பித்தாள்.

''ஓட்டுப்பதிவுக்கு 'பக்கா'வா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. வாக்காளர் பட்டியல் தயாரிப்புல கோட்டை விட்டுட்டாங்க; ஏகப்பட்ட இடத்துல இரட்டை பதிவு அதிகமா இருந்துச்சு; ஒருத்தரே இரண்டாவது தடவை ஓட்டுப்போட வந்தாரு. அவர பிடிச்சு, போலீசுல ஒப்படைச்சாங்க. உதாரணத்துக்கு, இது ஒன்னே போதும். இது மாதிரி, இரட்டை பதிவை நீக்காதது; இறந்தவங்க பெயரை நீக்காததுன்னு ஏகப்பட்ட குளறுபடி, பட்டியல்ல இருந்துச்சு,''

கட்சிக்காரங்க அதிர்ச்சி


''இருந்தாலும், நம்ம தொகுதியில மட்டும், 64.89 சதவீதம் ஓட்டு பதிவாகி இருக்கு. இதுல, இனி தபால் ஓட்டுக்களை சேர்ப்பாங்க. கிட்டத்தட்ட, 65 சதவீதம்னு கணக்கெடுத்துக்கலாம்னு சொல்றாங்க. சூலுார், பல்லடம், கவுண்டம்பாளையம் தொகுதியில 70 சதவீதத்தை கடந்து ஓட்டு பதிவு அதிகமாகி இருக்கறதுனால, இரு திராவிட கட்சிகளும் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்காங்க,''

''பா.ஜ.,வுல பூத் கமிட்டிக்கே ஆள் இல்லைன்னு சொல்வாங்களே... தேர்தல் அன்னைக்கு என்ன நடந்துச்சு...''

''மித்து... அங்க தான் 'சர்ப்ரைஸ்' காத்துக்கிட்டு இருந்துச்சு. திராவிட கட்சிக்காரங்ககிட்ட இல்லாத துணிச்சலை, அண்ணாமலை செஞ்சிருக்காரு. ஏகப்பட்ட பூத்களில், படித்த இளம்பெண்கள், பூத் ஏஜன்ட்டா உட்கார்ந்திருந்தாங்க. அதைப்பார்தது மத்த கட்சிக்காரங்க வாயடைச்சு போயிட்டாங்க,''

''இன்னொரு விஷயமும் நடந்துச்சு. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அதிகமா ஓட்டளிக்கிற ரெண்டு பூத்களிலும், அண்ணாமலை சார்புல, ரெண்டு பேர் பூத் ஏஜன்டா இருந்தாங்களாம்.

எலக்சன் வரலாறுல இதுதான் முதல்முறையாம். உளவுத்துறை போலீசார் 'நோட்' பண்ணி, மேலிடத்துக்கு தகவல் சொல்லியிருக்காங்க.

இஸ்லாமியர்கள் பலரும், அண்ணாமலையை தேர்வு செஞ்சு ஓட்டுப்பதிவு செஞ்சதை பார்த்து, உளவுத்துறை போலீஸ்காரங்க ஆச்சரியப்பட்டு இருக்காங்க,''

கரன்சி பதுக்கல்


''கட்சிக்காரங்க பலரும் கரன்சியை பதுக்கிட்டாங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''அதையேன் கேக்குற, மித்து! வழக்கமா தேர்தல் முடிஞ்சதும், எந்த ஏரியாவுல எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கு. அதுல நம்ம கட்சிக்கு எவ்ளோ ஓட்டு வரும்னு, கணக்குப்போடுவாங்க.

இப்போ, அந்தக் கணக்கை விட்டுட்டு, எந்த ஏரியாவுக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா பண்ணுனோம்; எவ்வளவு போய்ச் சேர்ந்திருக்கு; எவ்வளவு அடிச்சிருக்காங்கங்கிற விசாரணை நடக்குது,''

''கோவை தொகுதியில, மூணு கட்சியிலயுமே, கனஜோரா கரன்சிய அள்ளி வீசியிருக்காங்க. ஒரு கட்சியில, பிரஸ்க்கு வண்டி, வாகனம், சாப்பாடுக்கு தினமும், 50 ஆயிரம் செலவு பண்ணுனதா, அதுக்குப் பொறுப்பா நியமிச்சிருந்த ஒருத்தரு, கணக்குக் காமிச்சிருக்காரு. ஆனா, பத்திரிக்கைக்காரங்க அவுங்கவுங்க வண்டியில வந்து இறங்குனதை, வேட்பாளரே நேர்ல பார்த்திருக்காரு,''

''செலவு கணக்கை ஆய்வு செஞ்ச அவரு, 'அவுங்களுக்கு நம்ம வண்டி அரேஞ்ச் பண்ணலையா'ன்னு கேட்ருக்காரு; வண்டி, சாப்பாடு எதுவுமே தரலைன்னு தெரிஞ்சுட்டு, அந்த தொகையை 'கட்' பண்ணீட்டாராம்.

இருந்தாலும், 10 நாள்ல, அஞ்சு லட்ச ரூபா அடிச்சிட்டாங்களாம். இதே மாதிரி, நோட்டீஸ், வாலன்டியர், சாப்பாடு, பூத் கமிட்டின்னு தாறுமாறா கணக்குச் சொல்லி, ஒரு 'சி' வரைக்கும் இரண்டெழுத்து இனிசியல் நிர்வாகி அடிச்சிட்டாருன்னு, புகார் வெடிச்சிருக்கு,''

''இதே மாதிரி, ஆளும்கட்சியிலயும் ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை பெரிய அளவுல அடிச்சிட்டாங்களாம்.

பல ஏரியாக்கள்ல பணம் கொடுக்காம, கொடுத்ததா கணக்குக் காமிச்சிருக்காங்க. பூத் கமிட்டிக்குக் கொடுத்த பணத்துலயும், 20 'பர்சன்டேஜ்' அடிச்சிட்டாங்களாம். வேட்பாளர் இருக்குற ஏரியாவுலயே, பெருசா பிரச்னை வெடிச்சிருக்கு; அவர் வசிக்கிற ஏரியாவுலயே ஓட்டு குறையும்கிறாங்க,''

''அ.தி.மு.க.,வுலயும் ஓட்டுக்குக் கொடுத்த காசுல, 50லயிருந்து 200 ரூபா வரைக்கும் லவட்டிட்டாங்களாம். இரட்டை இலைக்கு 'சாலிட் வோட் பேங்க்' இருக்குற ஏரியாவுலயே இப்படிப் பண்ணுனதால, அங்க விழுந்த ஓட்டுக்கள் யாருக்குப் போச்சுன்னு, ஒரு சந்தேகம் கிளம்பிருக்கு. ரிசல்ட் வந்தபிறகே, ஒவ்வொரு ஏரியாவுலயும் எவ்வளவு பணத்தை ஆட்டையை போட்டாங்கன்னு தெரியும்,''

நடிகர்கள் கட்சி ஆதரவு


''நடிகர் விஜய், நடிகர் கமல் கட்சிக்காரங்க யாருக்கு ஓட்டுப் போட்டாங்களாம்...''

''2019ல போட்டியிட்ட கமல் கட்சி வேட்பாளர், 1.45 லட்சம் ஓட்டு வாங்குனாரு. 2021 சட்டசபை தேர்தல்ல, கோவை லோக்சபா தொகுதியை சேர்ந்த ஆறு சட்டசபையில, 1.98 லட்சம் ஓட்டு வாங்கியிருந்தாங்க. இந்த ஓட்டெல்லாம், இரு திராவிட கட்சிகளுக்கு எதிரான நடுநிலையானவங்க போட்டது... இந்த தேர்தல்ல இவுங்க யாருக்கு ஓட்டுப்போட்டாங்கன்னு தெரியலை. அதனால தான், கட்சிக்காரங்க பீதியில இருக்காங்க,''

''நடிகர் விஜய் கட்சியில இருந்து, ஒரு சிக்னல் வந்துருக்கு. இந்த தேர்தல்ல போட்டி போடாட்டியும், ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவங்கள்ல எத்தனை பேரு, நாம சொல்றதை ஏத்துக்கிட்டு, ஓட்டுப்போடுறாங்கன்னு பார்க்கலாம்னு குறிப்பு கொடுத்திருக்காங்க.

விஜய் ரசிகர்கள் எடுத்த முடிவு சம்பந்தமா, ரெண்டு திராவிட கட்சிகாரங்களும் 'சர்வே' எடுத்து மேலிடத்துக்கு அனுப்பி இருக்காங்க,'' என்ற சித்ரா, ''சிட்டி ரவுண்ட்ஸ் கெளம்புறேன்; வர்றீயா...'' என கேட்டாள்.

'இதோ வந்துட்டேன்...' என்று கூறியபடி, ஓடோடி வந்த மித்ரா, ஸ்கூட்டர் பின்இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

வில்லங்க வீடியோ


ரேஸ்கோர்ஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை கடந்து ஸ்கூட்டரில் சென்ற சித்ரா, ''ஒரு விஷயம் சொல்றேன் கேளு! ரொம்ப சிரிப்பா இருக்கும். கவுண்டம்பாளையத்துல இருக்குற வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஆபீசர்ஸ், ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தமாம்.

தனக்கு போட்டியா இருக்கற ஆபீசரை அசிங்கப்படுத்த, வில்லங்கமா யோசிச்ச ஒரு ஆபீசரு, அந்த ஆபீசரின் செயல்பாடுகளை வீடியோ எடுக்குறதுக்கு ஆள் நியமிச்சிருக்காரு. நைட்டும், பகலுமா போலீஸ்காரங்க மாதிரி, பின்தொடர்ந்து போயிருக்காங்க,''

''ஒரு நாள் நைட்டு வில்லங்கமா சிக்கிட்டாரு அந்த ஆபீசர். அவரது சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி, கேவலப்படுத்த நினைச்சு, அந்த வீடியோவை சிலருக்கு அனுப்பி இருக்காரு இன்னொரு ஆபீசார்.

அதை வாங்குனவங்க, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'ங்கிற மாதிரி யோசிச்சு, வீடியோவை 'ரிலீஸ்' பண்ணாம இருக்கறதுக்கு, பல 'ல'கரம் கேட்டு, சம்பந்தப்பட்ட ஆபீசரை மிரட்டியிருக்காங்க,''

''அதிர்ச்சியான அந்த ஆபீசர், தனக்குத்தெரிஞ்ச போலீஸ் ஆபீசர்கிட்ட சொல்லியிருக்காரு. அவரோ, சம்பந்தப்பட்டவங்கள நைசா பேசி, ஒரு இடத்துக்கு வரவழைச்சு 'என்கொயரி' செஞ்சிருக்காரு.

அப்போ, பின்னணியில நடந்த உள்குத்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. அதனால, 'சமரசமா போங்க'ன்னு, ரெண்டு தரப்பையும் கவுண்டம்பாளையம் போலீஸ்காரங்க, கட்டப்பஞ்சாயத்து பேசிட்டு இருக்காங்க.

பாதிக்கப்பட்ட ஆபீசரோ, கேஸ் பதிவு செஞ்சே ஆகனும்னு அலம்பல் பண்றாராம்... இதைச்சொல்லி போலீஸ்காரங்க புலம்புறாங்க''

ரூ.1.82 கோடி வீண்


திருச்சி ரோடு வழியாக ஸ்கூட்டரை இயக்கிய சித்ரா, அரசு மருத்துவமனையை பார்த்ததும், ''கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல ரூ.1.82 கோடியில கட்டுன வார்டை வீணடிச்சிட்டாங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமாக்கா... உண்மைதானாம்! சென்ட்ரல் கவர்மென்ட் நிதியில, ரூ.1.82 கோடி செலவழிச்சு, முதியோருக்காக மட்டுமே ஸ்பெஷலா, ஏ.டி.எம்.கே., ஆட்சியில, 'ஜீரியாட்ரிக்' வார்டு ஆரம்பிச்சிருக்காங்க.

வயசானவங்க, வெவ்வேறு வார்டுக்கு அலையக் கூடாதுன்னு, ஒரே இடத்துல எல்லா சிகிச்சையும் கொடுக்கற மாதிரி வசதி செஞ்சிருந்தாங்க. ஆண்கள், பெண்கள்னு தனித்தனியா படுக்கை இருந்துச்சு. அந்த வார்டை இப்போ கலைச்சிட்டங்களாம்,''

''இதனால, எந்த நோய் பாதிக்கப்பட்டு முதியோர் வர்றாங்களோ, அந்த வார்டுல 'அட்மிட்' செய்றாங்களாம். அதனால, அவுங்களுக்கு அலைச்சல் ஏற்படுது; டிரீட்மென்ட் கொடுக்கறதுக்கு கூட, வயசானவங்களை அலைய விடுறாங்க. ஆனா, 'வீடு தேடி மருத்துவம்' பார்க்குறதா, தேர்தல் சமயத்துல கட்சிக்காரங்க தம்பட்டம் அடிச்சதை நினைச்சு புலம்புறாங்க,''

பைபாஸில் வழிப்பறி


'கொச்சின் செல்வதற்கான பாதை' என்கிற ஹைவேஸ் அறிவிப்பு பலகையை பார்த்த சித்ரா, ''மித்து, பைபாஸ்ல போகும்போது, ரொம்ப கவனமா இருக்கணும். செயின் திருடுற கும்பல் வழிமறிக்குதாம்,'' என, கடைசி சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''ஏன்க்கா... என்னாச்சு...''

''எல் அண்ட் டி பைபாஸ்ல, டோல்கேட் பக்கத்துல நடுராத்திரி நேரத்துலயும், அதிகாலையில பூச்சூடிய பெண்கள் நின்னு, கார்களை மறிச்சு 'அழைப்பு' விடுக்குறாங்களாம்.

சபல ஆசாமிகள் யாராவது காரை நிறுத்தினால், அதுல ஏறுனதும் கொஞ்ச துாரத்துக்கு குறுக்குச் சாலையில் ஓட்டச் சொல்றாங்களாம். 'சேட்டை'யை ஆரம்பிச்சதும், புதர்ல மறைஞ்சிருக்கற மர்ம நபர்கள் வெளியே வந்து செயின், வாட்ச், பணத்தை பறிச்சிட்டு, 'எஸ்கேப்' ஆகிடுறாங்களாம்,''

''பறிகொடுத்தவங்க, இழந்ததை வெளியே சொன்னாலோ அல்லது போலீசுல புகார் குடுத்தாலோ மானம் போய்டும்னு, 'கப்-சிப்'னு இருந்திடுறாங்களாம்.

இதுவரைக்கும், 10ல இருந்து, 12 சம்பவம் நடந்திருக்கும்னு சொல்றாங்க. ஹைவே ரோந்து போலீஸ்காரங்க என்ன தான் செய்றாங்கன்னு தெரியல,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்துக்குள் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.

இருவரும் தேர்தல் பிரிவை நோக்கி, நடக்க ஆரம்பித்தனர்.






      Dinamalar
      Follow us