sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

வாங்கினாரு அரைக்கோடில புது காரு... வசூலுக்கு 'சின்னவரு பேரு!' வாரிச்சுருட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே 'தீர்ப்பெழுதும்' ரெண்டு சாரு

/

வாங்கினாரு அரைக்கோடில புது காரு... வசூலுக்கு 'சின்னவரு பேரு!' வாரிச்சுருட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே 'தீர்ப்பெழுதும்' ரெண்டு சாரு

வாங்கினாரு அரைக்கோடில புது காரு... வசூலுக்கு 'சின்னவரு பேரு!' வாரிச்சுருட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே 'தீர்ப்பெழுதும்' ரெண்டு சாரு

வாங்கினாரு அரைக்கோடில புது காரு... வசூலுக்கு 'சின்னவரு பேரு!' வாரிச்சுருட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே 'தீர்ப்பெழுதும்' ரெண்டு சாரு


ADDED : பிப் 10, 2025 11:05 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக டவுன்ஹால் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் விக்டோரியா ஹால் வளாகத்தில் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, 'ஷாப்பிங்' சென்றனர்.

நவாப் ஹக்கீம் சாலையில் நடந்து சென்ற மித்ரா, ''என்னக்கா... கார்ப்பரேஷன் 'கவுன்சில் மீட்டிங்' காரசாரமா இருந்துச்சாமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா... ஆளுங்கட்சி கூட்டணி கட்சிகளை சேர்ந்தவங்க, 'ட்ரோன் சர்வே'க்கு எதிரா கோஷமிட்டு, வெளிநடப்பு செஞ்சாங்க. இதுசம்பந்தமா, கூட்டணி கவுன்சிலர்கள் ஒரு நாள் முன்னதாவே, காங்., கவுன்சிலர் அலுவலகத்துல மீட்டிங் போட்டு, பேசியிருக்காங்க. உளவுத்துறை போலீஸ்காரங்க மோப்பம் பிடிச்சு தகவல் சொல்லிட்டாங்க,''

''ஒடனே, மேயர் தரப்புல கூப்பிட்டு பேசியிருக்காங்க. எதிர்க்கட்சிக்காரங்க மாதிரி, மன்றத்தில் கோஷமிட்டு வெளிநடப்பு செய்ற அளவுக்கு ஆவேசமா செயல்படுவாங்கன்னு ஆளுங்கட்சிக்காரங்க எதிர்பார்க்கலை. அ.தி.மு.க., கவுன்சிலரை ரெண்டு கூட்டத்துக்கு 'சஸ்பெண்ட்' செஞ்சுட்டதால, மீட்டிங் அமைதியா முடிஞ்சிரும்னு நினைச்சாங்க. அதுக்கு மாறா, ஸ்டேட் லெவல்ல பேசுற மாதிரி 'சம்பவம்' பண்ணுனதுனால, ஆளுங்கட்சிக்காரங்க 'அப்செட்'டுல இருக்காங்க,''

கரன்சி பட்டுவாடா


''கரன்சி பட்டுவாடா செய்யாத கோபம்னு ஆளுங்கட்சி கவுன்சிலர்ஸ் தரப்புல பேசிக்கிட்டாங்களே...''

''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி... ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள்னு 'போஸ்ட்டிங்கிற்கு' தகுந்த மாதிரி, 'கரன்சி கவர்' பட்டுவாடா செஞ்சிருக்காங்க. மினிஸ்டர் முத்துசாமி 'பொறுப்பு'ல இருந்தப்போ, கட்சி பாகுபாடு பார்க்காம கொடுத்தாங்களாம். இப்போ, கூட்டணி கவுன்சிலர்களை கண்டுக்கிடலையாம்,''

''ரெண்டு தடவை பட்டுவாடா 'மிஸ்' ஆகிடுச்சுன்னு பேசியிருக்காங்க. அந்த கோபத்துல செயல்பட்டு இருக்காங்கன்னு ஆளுங்கட்சி தரப்புல முனுமுனுக்கிறாங்க... உளவுத்துறையில இருந்தும் 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க. மக்கள் படுற கஷ்டத்தை கவர்மென்ட் கவனத்துக்கு கொண்டு வந்தா, இப்படி எல்லாம் கொச்சைப்படுத்துறாங்களேன்னு கூட்டணி கட்சி கவுன்சிலர்ஸ் ஆதங்கப்படுறாங்க...''

எம்.பி.,யின் 'சம்பவம்'


''அதெல்லாம் இருக்கட்டும்... ஆளுங்கட்சி எம்.பி.,யே கார்ப்பரேஷன் மன்றக் கூட்டத்தில் பொங்கி எழுந்துட்டாரே...'' என, கேட்ட மித்ரா, 'ஷாப்பிங்' முடித்து விட்டு, அருகாமையில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.

சிக்கன் பிரியாணி, பெப்பர் சிக்கன் ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஆமாப்பா... அதை யாருமே எதிர்பார்க்கலை. கவுன்சிலரா, மண்டல தலைவரா, மேயரா இருந்ததுனால... மன்றத்துக்கு வந்ததும்... 'தாய் வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு'ன்னு உணர்ச்சி பொங்க பேசுனாரு. ஆளுங்கட்சி கவுன்சிலர்ஸ் மேஜையை தட்டி ஆரவாரம் செஞ்சதும்... ஒவ்வொரு சப்ஜெக்ட்டா பேசுனாரு. அவரு பேசுனதுல ஒரு விஷயம் கூட தப்பில்லை. பப்ளிக் பாதிக்கப்படுற அத்தனை விஷயங்களையும் சொன்னதுனால, கவுன்சிலர்ஸ் ஆரவாரம் செஞ்சாங்க,''

''ஆளுங்கட்சி எம்.பி.,யா இருந்துட்டு இப்படி பேசிட்டாரேன்னு கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு வருத்தம். 'ரெவ்யூ மீட்டிங்' நடத்தி, 'அட்வைஸ்' பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு, கவுன்சில் கூட்டத்துல ஓபனா பேசிட்டாருன்னு மனக்கஷ்டத்துல இருக்காங்க. சமூக வலைதளத்திலும் பரஸ்பரம் கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க...''

'ஸ்கெட்ச்' யாரு


''எம்.பி.,யின் 'தரமான சம்பவம்' சம்பந்தமா உளவுத்துறையிலும் ஸ்டேட்மென்ட் கேட்டிருக்காங்க. அதுக்கு, தப்பான 'மூவ்'ன்னு சொல்லியிருக்காங்க...''

''அப்படின்னா...''

''மனசுல இருந்த கொந்தளிப்பை, மன்றத்துல 'பட்... பட்..'டுன்னு எம்.பி., பேசிட்டாரு. இதே மாதிரி, பா.ஜ., எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் மன்றத்துக்கு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அவுங்க பேசுனா, பிரச்னை வேற விதமா போகலாம்ன்னு, உளவுத்துறை தரப்புல கவர்மென்ட்டுக்கு 'வார்னிங்' பண்ணியிருக்காங்க... இதுக்கெல்லாம் யார் 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்ததுன்னு ஆபீசர்ஸ் அலசி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. மேயர் ஆபீசுல இருக்கற ஒருத்தரு, 'ஸ்கூல் மேட்'டாம். ஆறெழுத்து பெயர் கொண்டவரு. பின்னணியா இருந்திருப்பாரோன்னு சந்தேகப்படுறாங்க...''

''ஏன்னா... 'மரியாதை'க்குரியவரை கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் மதிக்கறதில்லை. ஆனா, 'துணை'யோடு நெருக்கமா இருக்காங்க. அதுவும் ஒரு காரணம்னு சொல்றாங்க...''

மூன்றெழுத்து புரோக்கர்


டேபிளுக்கு வந்த பிரியாணியை ருசிக்கத் துவங்கிய மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும்... 'துணை'யானவரிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிட்டாங்கன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்களே... உண்மைதானா...'' என கேட்டாள்.

''செவி வழிச் செய்தியா பரவிட்டு இருக்கு. இப்போதைக்கு ஜோன்ல இருந்த பிரத்யேக ஆபீசை இழுத்து மூடிட்டாங்க. 'சின்னவர்' பெயரில் கட்சிப் பொறுப்புல இருக்கற மூன்றெழுத்து புரோக்கர் ஒருத்தரு, 'துணை'யானவர் பெயரைச் சொல்லி, கார்ப்பரேஷன்ல ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருக்காரு. லேட்டஸ்ட்டா, 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கியிருக்காரு,''

''இதையெல்லாம் 'பொறுப்பு' கவனத்துக்கு உடன்பிறப்புகள் கொண்டு போயிருக்காங்க. 'பகுதி'யிடமும், 'மண்டல'த்திடமும் 'என்கொயரி' செஞ்சிருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும்... ஜோன்ல என்னெல்லாம் நடக்குதுன்னு புட்டு புட்டு வச்சாங்களாம். மினிஸ்டர் நேரு நம்மூருக்கு வரப்போறாரு... அப்போ... என்னென்ன பிரச்னை வெடிக்கும்னு தெரியலை...''

மினிஸ்டரின் 'ட்விஸ்ட்'


''மினிஸ்டரும் ஏகத்துக்கும் பேசிட்டாராமே... பங்ஷன்ல இருந்த ஆபீசர்ஸ் முகம் வாடிப்போயிருச்சுன்னு சொன்னாங்க...''

பெப்பர் சிக்கன் சாப்பிட்டு விட்டு, 'செமயா இருக்குப்பா' என்ற சித்ரா, ''அதுவா... அக்ரி யுனிவர்சிட்டியில மலர் கண்காட்சி நடக்குது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுறப்போ, யாருமே எதிர்பார்க்காத 'ட்விஸ்ட்' வந்துச்சு. 'அக்ரி யுனிவர்சிட்டியில செய்ற ஆராய்ச்சியால விவசாயிகளுக்கு போதுமான பலன் கிடைக்கறதில்லை; கவர்மென்ட் நிறைய செலவு செய்யுது. ஆபீசர்களுக்கு கார்... அப்படி... இப்படின்னு வசதியா இருக்கீங்க.. ஆராய்ச்சியை கட்டடத்துக்குள்ள வச்சிருக்கிறதுனால என்ன பிரயோஜனம்; விவசாயிகளிடம் சேர்ப்பிக்கணும். இதையெல்லாம் ஆய்வு செய்யணும்னு...' மினிஸ்டர் பேசிட்டே போனாரு,''

''கோர்வை இல்லாம வெவ்வேறு சப்ஜெக்ட் பேசிட்டு, மறுபடியும் யுனிவர்சிட்டிய திட்டுற மாதிரி நாலு முறைக்கு மேல பேசுனாரு. அங்க இருந்தவங்களுக்கு சங்கடமா போச்சு. பொதுமேடையில பேசுறதுக்கும், ஆய்வு கூட்டத்துல பேசுறதுக்கும் வித்தியாசம் இல்லாம சகட்டு மேனிக்கு பேசிட்டாரேன்னு ஆபீசர்ஸ்சும், உடன்பிறப்புகளும் வருத்தப்பட்டாங்க...''

பாஸ் ஐம்பதாயிரம்


''பேரூர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பா முடிஞ்சிருச்சு. வி.ஐ.பி., பாஸ் கொடுக்கறதுக்கு, உடன்பிறப்புகள் தரப்புல இருந்து, ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டாங்களாமே..''

''ஆமாப்பா.. உண்மைதான்! வி.ஐ.பி., பாஸ் அடிச்சிருக்காங்க. வசதியானவங்க குடும்பத்துக்கு கொடுத்து, கல்லா கட்டியிருக்காங்க. சில பேரு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்களாம். சில பக்தர்கள் ரசீது கேட்டிருக்கிறாங்க; ரசீது கொடுக்காததால பாஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். பட்டீஸ்வரர் கோவில்ல நடத்துற விழாக்கள்ல, வரலாறு காணாத அளவுக்கு இந்த தடவை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறதா பக்தர்கள் தரப்புல குற்றச்சாட்டு கெளம்பியிருக்கு...''

''மின்வாரியத்துல வேலைபார்க்குற லேடி மின் கணக்கீட்டாளர்களை ஓவரா 'டார்ச்சர் செய்றாங்களாமே...''

''அதுவா, பீளமேடு கோட்டத்துல இருக்கிற லேடி கணக்கீட்டாளர்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்களாம். உதவி மின் பொறியாளர்களையும், வருவாய் மேற்பார்வையாளர்களையும் 'டிரான்ஸ்பர்' செய்யணும்னு உயரதிகாரிகளை கணக்கீட்டாளர்கள் சந்திச்சு பேசியிருக்காங்க. எந்த நடவடிக்கையும் எடுக்கலை; அடுத்த கட்டமா கலெக்டரை சந்திச்சு முறையிடுறதுக்கு முடிவு செஞ்சிருக்காங்க. அவரும் ஆக்சன் எடுக்கலைன்னா... தர்ணா, ஆர்ப்பாட்டம்னு ரோட்டுக்கு வர்றதுக்கு லேடி மின் கணக்கீட்டாளர்கள் முடிவு செஞ்சிருக்காங்களாம்...''

இன்ஸ்.,கள் மீது 'ரிப்போர்ட்'


''அதெல்லாம் ஓகே... சிட்டி லிமிட்டுல சவுத் லிமிட்டுல இருக்கற ரெண்டு இன்ஸ்., மேல 'ரிப்போர்ட்' ரெடியாகி இருக்குதாமே...''

''யெஸ்... நீ சொல்றது கரெக்ட்டு தாம்ப்பா... மூன்றெழுத்து இன்ஸ்., ஒருத்தரும், பழனி ஆண்டவர் பெயர் கொண்ட இன்ஸ் ஒருத்தரும், ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து செய்றதா கம்ப்ளைன்ட் போயிருக்கு. அதுல ஒருத்தரு, மோசடி கேஸ்ல டாக்குமென்ட்ஸ்கள வாங்கி வச்சு, 30 லட்சம்ரூபா கேட்டு, 'டிமாண்ட்' பண்றாராம். ஸ்டேஷன்ல வேலை நடக்கணும்னா கரன்சி வெட்டணும்னு வெளிப்படையாவே சொல்றாராம்...''

''மூன்றெழுத்து இன்ஸ்.,சும் இதே மாதிரி செஞ்சுட்டு இருக்கிறதா தகவல் போயிருக்கு. ஒரு வழக்குல, குற்றவாளி தரப்புல கரன்சி வாங்கிட்டு, மனுதாரருக்கு எதிரா செயல்படுறாராம். ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வர்ற லேடீஸ்கள்ட்ட மொபைல் போன் நம்பர் வாங்குறாரு. அவுங்களை போனில் அழைச்சு... தவறா நடந்துக்கிறதா, ஆபீசர்ஸ் காதுக்கு போயிருக்கு. இந்த ரெண்டு இன்ஸ்., மேல 'ரிப்போர்ட்' ரெடியாகிருக்கு. இவுங்கள எந்த ஏரியாவுக்கு துாக்கியடிக்கப் போறாங்கன்னு தெரியலை...'' என்ற சித்ரா, சாப்பிட்டு விட்டு, இருக்கையை விட்டு எழுந்தாள்.

பில் தொகையை கொடுத்து விட்டு, இருவரும் கார்ப்பரேஷன் ஆபீஸ் நோக்கி நடந்தனர்.






      Dinamalar
      Follow us